அண்மை காலமாக தமிழ்நாட்டில் தனது அரசியல் நிலைப்பாட்டை உறுதி செய்து வரும் நடிகர் விஜய்யின் கட்சி குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்த சூழலில், அவர் சமீபத்தில் எடுத்ததாக சொல்லப்படும் சில முடிவுகள், தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் மட்டுமல்லாமல், ஆந்திர மாநிலத்திலும் பேசுபொருளாகியுள்ளன.
“தமிழக அரசியல் களத்தில் நான் அடியெடுத்து வைத்துவிட்டேன். நான் பின்வாங்கிய ரஜினிகாந்த் அல்ல, தோல்வியடைந்த கமல்ஹாசன் அல்ல. நான் களத்தில் இறுதிவரை போராடுவேன்,” என்ற தொனியில் அவர் தனக்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், தனது அரசியல் பிரவேசம் ஒரு குறுகிய கால முயற்சி அல்ல என்றும், அவர் இறுதிவரை களத்தில் இருப்பார் என்றும் தனது தொண்டர்களுக்கு அவர் நம்பிக்கை அளித்திருப்பதாக கருதப்படுகிறது.
அதேபோல் ஆந்திர அரசியலில் வலுவான பின்புலம் உள்ளவரும், துணை முதல்வருமான பவன் கல்யாண், விஜய்க்கு சில அறிவுரைகள் கூறியதாகவும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது விஜய்க்கு பாதுகாப்பு என அறிவுறுத்தியதாகவும் செய்திகள் வெளியானது. குறித்து விஜய் மறைமுகமாகக் கடுமையாக விமர்சித்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் பவன்கல்யாணுக்கு விஜய் ஒரு தீர்க்கமான பதிலை கூறிவிட்டதாக தெரிகிறது. “இது ஆந்திரா அல்ல, தமிழ்நாடு. தமிழக மக்கள் நிச்சயம் என்னை ஏமாற்ற மாட்டார்கள்” என்று விஜய் குறிப்பிட்டதாக தெரிகிறது. மேலும், பவன் கல்யாணின் அறிவுரையை ஏற்காமல் அவருக்கு “பாக்கெட் பாக்கெட்டாக அல்வா கொடுத்ததாகவும் அரசியல் ஊடகங்களில் பேசப்படுகிறது.
விஜய்யின் அரசியல் பேச்சுக்களில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது, வரவிருக்கும் தேர்தல்களில் அவரது கூட்டணி குறித்த நிலைப்பாடாகும். அவர் தனித்து போட்டியிட விரும்புவதாகவும், ஒருவேளை கூட்டணி வைத்தாலும், அது பாஜகவுடன் இருக்காது என்றும் கறாராக கூறியுள்ளதாகத் தகவல் வெளியானது.
“தமிழக அரசியலில் தனித்துத்தான் போட்டி. மக்களின் ஆதரவை நான் நம்புகிறேன். எந்த கட்சிக்கும் நான் சாய்மானம் காட்ட போவதில்லை,” என்று அவர் உறுதியளித்ததாக கூறப்படுகிறது.
குறிப்பாக, தேசிய கட்சியான பாஜகவுடன் கூட்டணி வைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று அவர் தனது அரசியல் நிலைப்பாட்டை தெளிவாகப் பிரகடனப்படுத்தியுள்ளார். இது, திராவிட மற்றும் பிராந்திய கட்சிகளை மையமாக கொண்ட தமிழக அரசியலில், தேசிய நீரோட்டத்திலிருந்து விலகிச் செல்வதை காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
மொத்தத்தில், நடிகர் விஜய்யின் சமீபத்திய முடிவுகள் அவர் தமிழ்நாட்டின் அரசியலில் ஒரு புதிய மற்றும் உறுதியான பாதையை உருவாக்க முயற்சிப்பதையும், மற்ற திரை கலைஞர்களின் அரசியல் பாதையிலிருந்து அவர் தன்னை முற்றிலும் வேறுபடுத்தி காட்ட முனைவதையும் தெளிவாக பிரதிபலிக்கிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
