Bigg Boss 9 Tamil : நீங்க நடிப்பு அரக்கன் தான்.. வினோத் பற்றி பச்சை பொய்.. ஒரே செகண்டில் மாற்றி பேசி அனுதாபம் தேடிய திவாகர்..

இந்த வார இறுதியில் விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரும்போது அங்கு இருக்கும் பல போட்டியாளர்களை கிழித்து தொங்க விடுவதற்கான கண்டெண்டுகள் நாள்தோறும் சிக்கிக் கொண்டே இருக்கிறது. அந்த அளவுக்கு பல போட்டியாளர்கள்…

Diwakar lie about Vinoth

இந்த வார இறுதியில் விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரும்போது அங்கு இருக்கும் பல போட்டியாளர்களை கிழித்து தொங்க விடுவதற்கான கண்டெண்டுகள் நாள்தோறும் சிக்கிக் கொண்டே இருக்கிறது. அந்த அளவுக்கு பல போட்டியாளர்கள் மிக மோசமாக நடந்து வரும் நிலையில் ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என பார்வையாளர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை குறிப்பிட்டு வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் ஆரம்பமான நேரமே மிக மோசமாக இருப்பதாக தெரியும் நிலையில் போட்டியாளர்களின் ஆட்டமும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. தவறாக பேசுவது, கொச்சை வார்த்தைகளை பிக்பாஸ் வீட்டிற்குள் பயன்படுத்துவது, மைக்குகளை தேவையில்லாமல் கழட்டி வைப்பது, மாறி மாறி சண்டை போட்டுக் கொள்வது, பெண்கள் பற்றி தவறாக பேசுவது, சுய பெருமை பேசுவது என இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த முறை மிக மோசமாக பல போட்டியாளர்கள் தங்களது கருத்துக்களை பேசி வருவது பார்வையாளர்கள் மத்தியிலும் ஒருவித எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

திவாகரன் கீழ்த்தரமான வார்த்தை..

ஆரம்பத்தில் பார்வதியை தங்கை என அழைத்து வந்த திவாகர், அவரைப் பின்னர் திருமணம் செய்து கொள்ளவா என்று எல்லாம் கேட்டு பார்வதி மட்டுமில்லாமல் மற்ற அனைத்து போட்டியாளர்களையும் எரிச்சல் ஊட்டி இருந்தார். இதே போல கம்ருதீனும் தனக்கு எதிராக யாராவது வந்தால் அவர்களது குடும்ப பின்னணி பற்றி பேசுவதும் சர்ச்சையான ஒரு பிரச்சினையாக உருவெடுத்தது.

இதற்கு மத்தியில் தான் சமீபத்திய டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், கம்ருதீன் மற்றும் திவாகர் ஆகிய இருவரும் மோதிக் கொண்டனர். திவாகரை பொம்புள பொறுக்கி என மிக மோசமாக கம்ருதீன் குறிப்பிட, இதனால் ஆவேசப்பட்ட திவாகர் அவரிடம் மீண்டும் ல்லுக்கட்ட நிற்கிறார். அப்போது அரோகராவிடம் இது பற்றி பேசும் திவாகர், ‘இவனெல்லாம் எனக்கு ஒரு ஆளே இல்ல. என்னோட பேக்ரவுண்ட் தெரியாம பேசிக்கிட்டு இருக்கான்’ என சமுதாயம் தொடர்பாக பேசுவதும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தவறான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இப்படி தரக்குறைவான வார்த்தைகளை பேசி இருவரும் சண்டை போட்டுக் கொண்டதற்கு மத்தியில் தான் திவாகர் அப்படியே தலைகீழாக மாற்றி பேசி சம்பவம் ஒன்று இன்னும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திவாகர் மற்றும் கமருதீன் சண்டைக்கு நடுவே வந்த வினோத் பெண்களுக்கு பின்னால் திவாகர் தவறாக நடப்பதை சுட்டிக்காட்டி, “மரத்துக்கு புடவை கட்டி விட்டால் கூட அப்படி தான் பார்ப்பாய்” என்பது போல கூறுகிறார்.

அநியாயம் செய்யும் திவாகர்..

ஆனால் இதை அப்படியே மாற்றிப் பேசும் திவாகர் மற்ற அனைத்து போட்டியாளர்களையும் அழைத்து ‘சுபிக்ஷாவுக்கு சேலை கட்டி விட்டால் கூட’ என மாற்றி பேசி விட்டார். ஒரு சில கணங்களில் அப்படியே தனது கருத்தை திவாகர் மாற்றி பேசியதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கானா வினோத், ‘நான் அப்படி சொன்னனா. நான் அப்படி சொல்லவே இல்ல. அந்த ஆள் மாத்தி பேசுறான்’ என தனது நியாயத்தை கூறிக் கொண்டே இருக்கிறார்.

நிஜத்திலேயே சுபிக்ஷா என்ற வார்த்தையை வினோத் பயன்படுத்தவில்லை என்ற சூழலில் அப்படியே மாற்றி பேசிய விவகாம் கண்டனங்கள் வளர்த்து வருவதுடன் குறும்படத்தையும் திவாகருக்கு விஜய் சேதுபதி போட்டு காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.