Biggboss Tamil Season 9, Day 17: இது என்ன பிக்பாஸ் நிகழ்ச்சியா? இல்லை பார்வதி பாஸ் நிகழ்ச்சியா? எப்ப பார்த்தாலும் சண்டை தானா? பார்வதியை பார்த்தாலே எரிச்சல் ஆகிறது.. கண்டெண்ட்டுக்காக என்ன வேணும்னாலும் செய்யலாமா? அடிச்சு தொறத்துங்கப்பா…!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 17-வது நாள் எபிசோடானது, தொடர்ச்சியான சண்டைகள், வாக்குவாதங்கள் மற்றும் பார்வதியின் அழிச்சாட்டியமான ஆதிக்கம் ஆகியவற்றை சுற்றியே சுழன்றது. நிகழ்ச்சி தொடங்கி 17 நாட்கள் ஆகியும், பெரும்பாலான காட்சிகள், பரபரப்புக்காகவே சண்டை…

BB day 17

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 17-வது நாள் எபிசோடானது, தொடர்ச்சியான சண்டைகள், வாக்குவாதங்கள் மற்றும் பார்வதியின் அழிச்சாட்டியமான ஆதிக்கம் ஆகியவற்றை சுற்றியே சுழன்றது. நிகழ்ச்சி தொடங்கி 17 நாட்கள் ஆகியும், பெரும்பாலான காட்சிகள், பரபரப்புக்காகவே சண்டை போடும் ‘கண்டென்ட்’ அரசியலாகவே இருப்பது பார்வையாளர்களை எரிச்சலடைய செய்வதாக பார்வையாளர்களின் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பார்வதி ஆதிக்கம் செலுத்தும் ஒற்றை போட்டியாளராக மாறியுள்ளார். இந்த சீசனில், பெரும்பாலான காட்சிகள் மற்றும் சண்டைகளின் மையப்புள்ளியாக போட்டியாளர் பார்வதி உள்ளார், பார்வதி மட்டுமே உள்ளார்.

கடந்த 17 நாட்களில், பார்வதி இல்லாத ப்ரோமோவோ, பார்வதி பேசாத விவாதமோ, பார்வதி போடாத சண்டையோ இல்லை. இதன் காரணமாக, இந்த நிகழ்ச்சிக்கு “பிக் பாஸ் 9” என்பதற்குப் பதிலாக “பார்வதி பாஸ் 9” என்றே பெயர் வைக்கலாம் என்றே தோன்றுகிறது.

தொடர்ந்து சண்டை, அதிக சத்தம், மற்றும் தேவையற்ற வாக்குவாதங்கள் ஆகியவை பார்வையாளர்களை சந்தைக்கடை சத்தம் போல எரிச்சலூட்டுகிறது. எந்த நியாயமும் இல்லாமல், ‘ப்ரோமோவுக்கு வர வேண்டும்’ என்பதற்காகவே அனிதா சம்பத் போல பார்வதி தொடர்ந்து பிளான் பண்ணி சத்தம் போடுவதாகவும், பேசுவதாகவும் தெரிகிறது.

திவாகர் மற்றும் பார்வதி இருவரும் குவாலிட்டி கண்ட்ரோல் மேனேஜர்களாக செயல்பட்ட ஜூஸ் டாஸ்க், நாளின் முக்கிய நிகழ்வாக நேற்றைய எபிசோடு இருந்தது. இந்த டாஸ்க் வருவதற்கு முன்னரே, சாப்பாடு மற்றும் சுத்தம் செய்யும் விவகாரங்களில் சண்டைகள் ஆரம்பித்துவிட்டன.

பார்வதியும், திவாகரும் சேர்ந்து, எஃப்.ஜே. மற்றும் ஆதிரை ஆகியோரை இலக்கு வைத்து, அவர்களுக்கு எதிராக செயல்படுவது என்று முன்கூட்டியே திட்டமிட்டனர். அதாவது, ‘கண்டென்ட்’ உண்டாக்க வேண்டும் என்பதற்காகவே வேண்டுமென்றே ஜூஸை ரிஜெக்ட் செய்வது, சண்டையை தூண்டுவது என்பதே இவர்களின் நோக்கம்.

ஜூஸ் ரிஜெக்ட் செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த கலையரசன், டேபிள் மற்றும் பொருட்களை அடித்து நொறுக்கி, “நானும் ரவுடிதான்” என்ற ரீதியில் நடந்து கொண்டார். ஜூஸ் பாட்டிலில் கால் பட்டதாக கூறி, ஆதிரை சக போட்டியாளரான கானா வினோத்தை எட்டி உதைக்க காலை ஓங்கியது வன்முறையின் உச்சமாக கருதப்பட்டது.

பார்வதி போன்றோர் கேமை தெளிவாக புரிந்துகொண்டு, தொடர்ந்து சண்டை போட்டுத் தமக்கான ‘ஸ்கிரீன் ஸ்பேஸை’ உருவாக்கி கொள்ளும்போது, மற்ற போட்டியாளர்கள் அதில் சிக்கிக்கொள்வதாக விமர்சனம் எழுந்துள்ளது.

போட்டியாளர் விக்ரம், எஃப்.ஜே-க்கு அளித்த அறிவுரையில், பார்வதி செய்வது எல்லாம் கண்டென்ட்க்காகத்தான். நீ அவர்களை எதிர்த்து சண்டை போட்டால், முழு ஸ்கிரீன் ஸ்பேஸும் அவர்களுக்கே சென்றுவிடும். நீ வேலை செய்துகொண்டிருந்தாலும், அவர்களுக்கு பின்னால் நீ ஒன்றுமே இல்லாதவராக போய்விடுவாய். உனது உழைப்பு பற்றிய கவனம் கிடைக்காது” என்று சரியாக சுட்டிக்காட்டினார்.

ஜூஸ் போடும்போது வேண்டுமென்றே டார்ச்சர் செய்தாலும், சண்டை போடுவதே பார்வதியின் இலக்கு என்று புரியாமல், மற்ற போட்டியாளர்கள் அவரிடம் தொடர்ந்து வாக்குவாதம் செய்து, அவர் நினைத்த ‘கண்டென்டை’ கொடுத்து வருகின்றனர்.

மொத்தத்தில், பிக் பாஸ் வீடு ஒரு ‘டார்ச்சர் ஹவுஸ்’ போல இருப்பதாகவும், அநாவசிய சண்டைகள், கத்தி பேசுவது மற்றும் எச்சில் துப்புவ்து போன்ற கேவலமான செயல்களால் பார்வையாளர்கள் பெரிதும் சோர்வடைந்துள்ளனர்.

பார்வதியின் தவறை ஒரு கேப்டனாக கனி எவ்வளவோ பொறுமையாக சுட்டிக்காட்ட முயன்றாலும், அதையும் பார்வதி கண்டெண்ட் ஆக்குவது அவரது ஆட்டிட்டியூடை வெளிப்படுத்துகிறது. ஜூலி, காயத்ரி, ஐஸ்வர்யா போன்றவர்களையெல்லாம் தூக்கி சாப்பிடும் ஒரு நெகட்டிவ் கேரக்டராக பாரு மாறி வருகிறார். இந்த நிகழ்ச்சியால் பாருவுக்கு நிச்சயம் வாங்கி வைத்திருந்த நல்ல பெயர் காணாமல் போகும் போல தெரிகிறது.