ஜெய்சங்கர் கேட்ட ஒரே ஒரு கேள்வி.. அமெரிக்கா உள்பட உலக நாடுகள் அதிர்ச்சி.. இவ்வளவு தைரியமாக உண்மையை எப்படி பேசுகிறார்.. குவியும் ஆதரவு.. எப்படி ஆளை தேர்ந்தெடுகிறார் பிரதமர் மோடி.. உலக அரங்கில் இந்தியாவின் மரியாதை..!

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்க மண்ணில் ஆற்றிய உரை, உலகெங்கிலும் உள்ள ராஜதந்திரிகளை சிந்திக்க வைத்துள்ளது. அவர் அமைதியாகவும், ஆனால் ஆழமான உண்மையுடனும் பேசிய விதம், கூட்டத்தில் இருந்த அனைவரையும் அமைதிப்படுத்தியது.…

jaisankar 1

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்க மண்ணில் ஆற்றிய உரை, உலகெங்கிலும் உள்ள ராஜதந்திரிகளை சிந்திக்க வைத்துள்ளது. அவர் அமைதியாகவும், ஆனால் ஆழமான உண்மையுடனும் பேசிய விதம், கூட்டத்தில் இருந்த அனைவரையும் அமைதிப்படுத்தியது. அமெரிக்கா, மேற்குலக நாடுகள் மற்றும் ‘விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்குமுறை’ குறித்து அவர் முன்வைத்த கேள்விகள் இணையத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

அமெரிக்க கொள்கை ஆய்வு மையம் ஒன்றில் நடைபெற்ற கூட்டத்தில், ஒரு கேள்விக்கு ஜெய்சங்கர் அளித்த பதில்தான் அனைவரையும் ஸ்தம்பிக்க வைத்தது.

கேள்வி: “விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்குமுறைக்கு இந்தியா எவ்வாறு தொடர்ந்து ஆதரவளிக்கும்?”

ஜெய்சங்கரின் பதில்: அவர் புன்னகையுடன், “இந்த விதிகள் யாருடைய விதிகள்? அவற்றை உருவாக்கியது யார்? என்று கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்விக்குப் பின் ஏற்பட்ட அமைதி மிகவும் கனமானது. காரணம், அவர் சொன்னது அப்பட்டமான உண்மை. இரண்டாம் உலக போருக்குப் பிறகு 1945 இல் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா மற்றும் சீனா ஆகிய ஐந்து நாடுகளால் மட்டுமே ஐ.நா. பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்களாகி, உலகளாவிய விதிகளை தீர்மானிக்கும் அதிகாரத்தைப் பெற்றன. ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொண்ட இந்தியாவை முற்றிலுமாக புறக்கணித்து உருவாக்கப்பட்ட அந்த பழைய விதிகளை, இப்போது இந்தியா ஏன் பின்பற்ற வேண்டும் என்று ஜெய்சங்கர் துணிச்சலுடன் கேள்வி எழுப்பினார்.

ஜெய்சங்கரின் உரையை நேரடியாக கேட்ட போலந்து நாட்டை சேர்ந்த கரோலினா கோவாமி , பின்னர் இதுகுறித்து தனது யூடியூப் தளத்தில் பேசிய காணொலி 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது.

கரோலினா: “ஒரு போலந்து நாட்டவராக, சக்திவாய்ந்த நாடுகள் எங்களை கேட்காமலேயே விதிகளை உருவாக்கும்போது எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியும். எனவே, ஜெய்சங்கரின் கேள்வி முற்றிலும் நியாயமானது. மேற்குலகம் இந்தியாவின் வளர்ச்சியை பார்த்து, தவறான கண்ணோட்டத்துடன் நடந்துகொள்கிறது.”

அவர், “ஜெய்சங்கர் ஆக்ரோஷமானவர் அல்ல, அவர் நேர்மையானவர். மேற்குலகம் சொல்வதைக் கேட்டு பழக்கப்படவில்லை” என்று கூறியது வைரலாக பேசப்பட்டது. வெளியாட்கள் இப்படி பேசுவது உலகளாவிய கருத்தை மாற்றுவதில் அதிக செல்வாக்கு செலுத்துகிறது.

Brain Drain குறித்து ஓர் அமெரிக்க பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு ஜெய்சங்கர் அளித்த பதிலும் அமெரிக்கர்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது:

கேள்வி: “உங்கள் திறமையானவர்கள் தொடர்ந்து மேற்குலகிற்கு செல்வதால் இந்தியா பாதிக்கப்படவில்லையா?”

ஜெய்சங்கரின் பதில்: “எங்கள் புத்திசாலியான பொறியாளர்களும் மருத்துவர்களும் அமெரிக்காவுக்கு வரும்போது நீங்கள் கொண்டாடுகிறீர்கள். சிலிக்கான் பள்ளத்தாக்கு தொடக்க நிறுவனங்களில் கிட்டத்தட்ட 30% இந்தியர்கள் இருக்கிறார்கள். ஆனால், நாங்கள் நியாயமான வர்த்தகத்தை கேட்கும்போதோ அல்லது சம வாய்ப்பு வேண்டும் என்று கேட்கும்போதோ, நாங்கள் திடீரென்று பிரச்னையாகி விடுகிறோம்.”

அவர் மேலும் கூறுகையில், அமெரிக்க பொருளாதாரத்துக்கு இந்தியர்கள் அதிக பங்களிப்பை செய்தாலும், தேசியத்தின் அடிப்படையில் அமைந்த ஒதுக்கீட்டு முறை காரணமாக, அவர்களுக்கு நீண்ட காலதாமதமாக குடியுரிமை கிடைப்பதையும், இது நியாயமற்றது என்பதையும் தெளிவாக சுட்டிக்காட்டினார்.

ஜெய்சங்கர் கோபத்துடன் அல்லாமல், உறுதியான உண்மைகளுடன் பேசியதே உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த விவாதம் இந்தியா vs அமெரிக்கா என்பதை விட, நேர்மை vs பாசாங்குத்தனம் என்ற அளவில் விரிவடைந்துள்ளது.

இந்த சூழலில்தான், உலக நாடுகள் மாறும் சூழ்நிலைக்கு மதிப்பளித்து ஏற்றுக்கொள்கிறதா அல்லது மறுத்து பின்னுக்கு தள்ளப்படுகிறதா என்பதே முக்கியமான கேள்வியாக உள்ளது.