Biggboss Tamil season 9, Day 16: முத்தம் கேட்கும் திவாகர்.. உன் வயசுக்கு இதெல்லாம் தேவையா? எச்சரித்த 2 போட்டியாளர்கள்.. வியன்னாவின் அட்ராசிட்டி.. ரூல்ஸை மீறிய பார்வதி.. கேப்டனாக சுட்டிக்காட்டிய கனி..

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 , 16வது நாள் நிகழ்ச்சியில், போட்டியாளர்களின் அட்ராசிட்டிகள், காரசாரமான சண்டைகள் மற்றும் உணர்ச்சிகரமான தனிப்பட்ட கதைகளால் நிறைந்திருந்தது. 16வது நாளில் நிகழ்ந்த சில முக்கிய நிகழ்வுகளில் முக்கியமானது…

BB day 16

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 , 16வது நாள் நிகழ்ச்சியில், போட்டியாளர்களின் அட்ராசிட்டிகள், காரசாரமான சண்டைகள் மற்றும் உணர்ச்சிகரமான தனிப்பட்ட கதைகளால் நிறைந்திருந்தது.

16வது நாளில் நிகழ்ந்த சில முக்கிய நிகழ்வுகளில் முக்கியமானது வியன்னா மற்றும் பார்வதியின் அட்ராசிட்டியும், சண்டைகளும் தான். சூப்பர் டீலக்ஸ், நார்மல் டீலக்ஸ் போன்ற பிரிவுகளுக்கு இடையே உள்ள அதிகாரம் சார்ந்த பிரச்சினைகளாலேயே இந்த சண்டைகள் உருவானதாக தெரிகிறது.

வியன்னா நேரடியாக மோதாமல், சுபிக்ஷா மூலமாக மற்றவர்களை வேலை வாங்கும் உத்தியை கையாள்வதாகக் குற்றம் சாட்டப்பட்டது. வியன்னாவின் இந்த சுயநலமான நடவடிக்கைகளால், அவருக்கு கெட்ட பெயர் ஏற்படுவது உறுதி என தெரிகிறது.

வியன்னா வேலை செய்ய மறுக்கும்போது, “நான் இப்பதான் செஞ்சேன், என்னால் இப்ப செய்ய முடியாது” என்று கூறியது, முன்னதாக அவர் மற்ற எல்லோரையும் வேலை வாங்கியதை மறந்துவிட்டார் என்பதை காட்டுகிறது. “ஆட்டிடியூட் மேட்டர்ஸ்” என்று கனி இந்த விவகாரத்தை குறிப்பிட்டது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

வியன்னா & சுபிக்ஷா ஆகிய இருவரும் சூப்பர் டீலக்ஸ் பிரிவில் இருந்தபோது சுகத்தை மட்டும் அனுபவித்துவிட்டு, இப்போது வேலை செய்ய மறுப்பது சுயநலத்தின் எதிரொலியாக பார்க்கப்படுகிறது.

தான் குப்பையை கட்டிக் கொடுத்தால், அது ரூல்ஸை மீறியது என்று பார்வதி ஆர்க்யூ செய்தது சுயநலத்தின் உச்சமாக தெரிகிறது. ரம்யா சரியான பாயிண்ட்டைப் பிடித்து, “சாப்பாடு கிடைக்காது என்றால் எல்லோரும் ஓடி வந்துவிடுவீர்கள்” என்று எச்சரித்ததாலேயே பிரச்சினை கட்டுக்குள் வந்தது.

17 வயதுக்குப் பிறகு அப்பா இல்லாத வாழ்க்கையை சென்னையிலிருந்து போராடி வெற்றி பெற்றதாக பார்வதி கூறினார். ஆனால், “ஒரு ஆண் கேள்வி கேட்கும்போது அது சூப்பராகவும், பெண் கேள்வி கேட்கும்போது அது நக்கலாகவும் பார்க்கப்படுகிறது” என்ற அவரது கூற்று, அவர் வெளியில் ஃபெமினிசம் பேசிவிட்டு, வீட்டிற்குள் சுயநலமாக போராடுவதால் பயனில்லை என்ற கருத்தை விமர்சகர் முன்வைத்தார்.

போட்டியாளர் திவாகர் எல்லோரிடமும் முத்தம் கேட்பது, தொட்டு பேசுவது போன்ற செயல்கள் குறித்து சக போட்டியாளர்களான விக்ரம் மற்றும் சபரி ஆகியோர் தனிப்பட்ட முறையில் எச்சரித்தனர். இது விளையாட்டுக்குச் செய்கிறீர்கள். ஆனால் ஒரு பெண் திடீரென ‘இவன் வேண்டும் என்றே தொட்டு பேசுகிறான்’ என்று புகார் அளித்தால், உங்களின் எல்லா புகழும் போயிடும், உங்கள் கதை முடிந்துவிடும்” என்று விக்ரம் மற்றும் சபரி எச்சரித்தது, திவாகருக்கு சரியான பாடத்தை கற்பித்ததாக தெரிகிறது.

மொத்தத்தில் நேற்றைய எபிசோடில் பிக் பாஸ் வீட்டில் நடக்கும் அட்ராசிட்டிகள், கர்மா பூமாறங் போல் திரும்பித் தாக்கும் என்பதை போட்டியாளர்கள் புரிந்திருப்பார்கள்.