Vijay Sethupathi and Bigg Boss Contestants : தமிழில் 9 வது பிக் பாஸ் சீசன் போட்டியாளர்களின் ஆட்டத்திறன் எந்த அளவுக்கு மோசமாக இருந்ததோ அதேபோல சில இடங்களில் முக்கியமான விஷயங்களை விஜய் சேதுபதி கேட்க தவறி வருவதாகவும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். அப்படி கடந்த இரண்டு வாரங்களில் அவர் கேட்க தவறிய மிக முக்கியமான ஒரு பிரச்சனை என்ன என்பது பற்றியும் அதனால் வரும் நாட்களில் எப்படியான ஆபத்து கூட நடைபெறலாம் என்பது பற்றியும் தான் தற்போது பார்க்கப் போகிறோம்.
பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தவர்களுக்கு நிச்சயம் தங்களது திறமையை வெளிக்காட்டுவதற்காக ஏராளமான வாய்ப்புகள் அமையும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. ஆனால் அதே வேளையில் உள்ளே வரும் போட்டியாளர்கள் அதை எப்படி பயன்படுத்தி கொள்கிறார்கள் என்பதையும் பார்க்க வேண்டும். தமிழ் பிக் பாஸை பொருத்தவரையில் இதற்கு முந்தைய சீசன்களில் வந்த பல போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் கிடைத்த இடத்தை மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு வெளியேவும் தங்கள் திறமையை கொண்டு சேர்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றியும் கண்டு வருகின்றனர்.
இப்டி தான் உள்ள இருக்கணுமா..
ஆனால் இந்த சீசனில் நுழைந்த யாருமே தங்களது திறமையை வெளிக்காட்டவோ அல்லது பிக் பாஸ் டைட்டில் வெல்ல வேண்டும் என்ற நோக்கத்திலோ ஆடுவது போல் தெரியவில்லை. குழுக்களாக பிரிந்து கொண்டு மற்றவர்களை பற்றி வேண்டுமென்றே தவறான வார்த்தைகளை பேசுவது, ஒருவரின் குடும்ப பின்னணியை பற்றி பேசுவது, கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்துவது, குழந்தைகள் கூட பார்க்க முடியாத மாதிரியான விஷயங்களை செய்வது என மிகக் கேவலமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இப்படி சென்று கொண்டிருக்கும் நிலையில் கடந்த வாரம் கூட சுபிக்ஷா மற்றும் ரம்யா ஆகியோரின் குடும்ப பின்னணியை பற்றி கம்ருதீன் பேசியது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதே போல காதல் என்ற பெயரிலும் சில அருவருக்கத்தக்க சம்பவங்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் நடந்து வருவதும் மோசமான ஒன்றாக பார்க்கப்பட்டு வரும் நிலையில் இந்த சீசனை இழுத்து மூடுங்கள் என்றும் பலர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அவரை மட்டும் ஏன் கேள்வி கேட்கல?..
இதற்கு மத்தியில் முதல் வாரம் சில முக்கியமான கேள்விகளை எழுப்பி இருந்த விஜய் சேதுபதி இந்த வாரமும் துஷார், கம்ருதீன் உள்ளிட்ட சில போட்டியாளர்களை மிகச் சிறப்பாக விமர்சித்திருந்தார். ஆனால் அதே நேரத்தில் கடந்த வாரம் ஸ்ட்ரைப் கிளப்பில் ஆடுவது போல் இருக்கிறது என சில போட்டியாளர்களை கேவலமாக பேசியது, தனது வார்த்தைகளில் மிக ஆபாசமாக பேசுவது, வெட்டுவேன், குத்துவேன் என சொல்வது என்றபடி இருக்கும் FJ-வை எந்தவித கண்டனமும் செய்யாமல் விஜய் சேதுபதி விட்டுவிட்டதை ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

FJ என்ன பேசுகிறார் என்பதே தெரியாமல் இருக்கும் சூழலில் விஜய் சேதுபதி போன்ற ஒரு நெறியாளர் அவருக்கு அதை புரிய வைத்து அவரை மிகச் சிறந்த போட்டியாளராக மாற்ற வேண்டும். ஆனால் அவர் அதை கேட்காமல் இருப்பது FJ ஏதோ விஜய் டிவி Quota வில் உள்ளே வந்தாரா என்ற சந்தேகத்தையும் பார்வையாளர்கள் மத்தியில் எழுப்பி வருகிறது.
தகாத வார்த்தைகளைப் FJ பேசியபோதும் அதை விஜய் சேதுபதி கேள்வி எழுப்பாத நிலையில் வரும் நாட்களிலும் அதை அவர் தொடரும் வாய்ப்புகள் தான் அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
நான் கடந்த 7 ஆண்டுகளாக பல வலைத்தளங்களில் கிரிக்கெட், சினிமா தொடர்பான செய்திகளை சுவாரஸ்யம் குறையாமல் வாசகர்கள் விரும்பும் வகையில் எழுதி வருகிறேன். இணையத்தில் இன்று ஏராளமான செய்திகள் சரியான விவரங்கள் இல்லாமல் வெளியாகி வரும் சூழலில் முடிந்த அளவுக்கு சிறந்த செய்திகளை கொடுப்பதற்கு நான் முன்னுரிமை கொடுத்து எழுதி வருகிறேன்.

