பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று விஜய் சேதுபதி தோன்றும் தினம் என்றதால் சுவாரஸ்யமாகவும், காமெடியாகவும் விறுவிறுப்பாகவும் சென்றது.
நேற்றைய டாஸ்க்கில் வீட்டில் ஒருவரையொருவர் “குத்தி காட்ட வேண்டும்” என்ற இந்த டாஸ்க் சுவாரஸ்யமாக சென்றது. வினோத், பிரவீண், சபரி ஆகியோர் சிறப்பாக குத்தினார்கள்
சுபிக்ஷா மற்றவர்கள் வெளியேறிய பிறகு, கமிருதீனை ‘குத்தியது’ சர்ச்சைக்குள்ளானது. இது குறித்து விமர்சனம் எழுந்தபோது, கமிருதீன் பாத்ரூம் சென்றபோது அவர் குத்தியதாக ஒரு கருத்து நிலவியது.
இந்த வாரத்தின் பெரிய சண்டையே கமிருதீன் மற்றும் சுபிக்ஷாவிற்கு இடையேதான். சுபிக்ஷா தன்னை ‘குத்தியது’ குறித்து சண்டையிட்ட கமிருதீன், சுபிக்ஷாவை நோக்கி மிகவும் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தினார்.
“நீ எங்கிருந்து வருகிறாய் என்று எனக்குத் தெரியும்.”
“நான் எல்லாம் உழைத்து வந்திருக்கிறேன்; நீ ஓட்டு போட்டு வரவில்லை.”
“உனக்கெல்லாம் அறிவு இல்லையா? உன்னை ஏமாற்றிவிட்டு போனார்கள்.”
கமிருதீனின் இந்த வார்த்தைகள் சக போட்டியாளர்களின் தகுதியை சந்தேகப்படும் விதமாக இருந்தன.
கமிருதீனின் இந்த ஆணவ பேச்சை கண்டித்த விஜய் சேதுபதி நேரடியாகவே கேள்வியெழுப்பினார். “ஓட்டுப் போட்டு வரவில்லை என்று உங்களை யார் சொன்னது? ஒரு டீம்தான் உங்களை டாப் 5-க்குக் கொண்டு வந்தது” என்று கூறி, கமிருதீனின் ‘உழைத்தவன்’ பிம்பத்தை உடைத்தார். இதுபோல பேசிவிட்டு, பின்னர் ரம்யாவிடம் “உனக்கெல்லாம் என்னுடன் பேச தகுதியில்லை” என்று சொன்னது, ஆதிரையை பார்த்துப் பின்னால் குத்துவதுபோல சைகை செய்தது என கமிருதீனின் செயல்பாடுகள் மிக மோசமாக இருந்தன.
பார்வதியின் அழுகைக்கான காரணம் இன்று வெளிப்படையாக பேசப்பட்டது. விக்ரம் இந்த விவகாரத்தைக் கிளப்பினார். சமீபத்திய ராம்ப் வாக் டாஸ்க்கில் பார்வதி, தனது நெருங்கிய நண்பரான திவாகருடன் செல்லாமல், கமிருதீனுடன் செல்ல விரும்பினார். இதற்கான காரணமாக அவர் கூறியது: “திவாகருடன் சென்றால், நாங்கள் ‘ப்ரெசண்டபிள் கப்பிளாக’ இருக்க மாட்டோம்.” என்றார்.
திவாகர் சில சமயங்களில் தாங்கி நடப்பவர் என்பதாலோ அல்லது வேறு ஏதோ ஒரு காரணத்தாலோ அவர் இவ்வாறு கூறியது, பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
விக்ரம் இந்த கருத்தை சுட்டிக்காட்டி, “நீ திவாகருடன் இவ்வளவு நாள் பழகிவிட்டு, இப்போது இப்படி சொல்கிறாய் என்றால், உன் நோக்கம் என்ன?” என்று கேட்டார். இதற்கு பதிலளிக்க முடியாத பார்வதி, உணர்ச்சிவசப்பட்டு அழுதார். “அவரை நான் அப்படி நினைக்கவில்லை. நாங்கள்தான் உண்மையான நண்பர்கள். வேறு ஒருவரை பார்த்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்” என்று சமாளிக்க முயன்றாலும், அவரது வார்த்தை சிதறிய நெல்லிக்காய் மூட்டையாகிவிட்டது. விக்ரம் இந்த குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக முன்வைத்தபோது, அதை தாங்க முடியாமல் அவர் மிகவும் வேதனைப்பட்டார்.
இந்த வாரம் கனி வீட்டின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். போட்டியாளர்கள் வீட்டில் உள்ளவர்களிடம் இருக்கும் மறைமுகமான குணங்களை கனி வெளிப்படுத்த வேண்டும்.
விஜய் சேதுபதி, நாமினேஷன் பாஸை தவறவிட்டவர்கள் குறித்து பேசும்போது, “வாய்ப்பை இழந்தால் இழந்ததுதான். நண்பனுக்காக இழந்தேன் என்று மனதை சமாதானப்படுத்தி கொள்ளலாம். ஆனால், நீங்கள் வெளியே இருப்பீர்கள்; அவர்கள் உள்ளே விளையாடுவார்கள்” என்று ஆழமான கருத்தை பதிவு செய்தார்.
இந்த நிலையில் அடுத்த வாரம் தீபாவளியையொட்டி, கணவன் – மனைவி ஜோடியாக வைல்டு கார்டு எண்ட்ரி வரவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
