Kamrudin Issue in Bigg Boss 9 Tamil : பிக் பாஸ் நிகழ்ச்சியை மிக சீக்கிரமாக முடிக்கும்படி பார்வையாளர்கள் தெரிவிக்கும் அளவுக்கு தான் அதன் போக்கு இருந்து வருகிறது. ஒவ்வொருவரும் ஏன்டா பிக் பாஸ் வந்தோம் என ஆடிக் கொண்டிருக்க, நாளுக்கு நாள் மோசமாக விமர்சனம் செய்யும் அளவுக்கான சம்பவங்கள் தான் நடந்து வருகிறது.
அந்த அளவுக்கு கேப்டன்சி டாஸ்க் நடுவே கம்ருதீன் செய்த கேவலமான விஷயமும் அதிக சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கேப்டன்சி டாஸ்க்கின் இறுதி சுற்றில் கம்ருதீன், சபரிநாதன் மற்றும் கனி திரு ஆகிய மூவரும் தகுதி பெற்றிருந்தனர். ‘கத்திக் குத்து கந்தன்‘ என்ற இந்த டாஸ்கில் கனி, சபரி மற்றும் கம்ருதீன் இருக்க அவர்கள் மூவரின் பொம்மையிலும் அவர்களுக்கு தெரியாமல் கத்தி குத்த வேண்டும்.
இவ்ளோ கேவலமா பேசுவீங்களா?
அதில் குறைவான நபர்கள் கத்தி குத்திய நபர் கேப்டன் ஆவார் என அறிவிக்கப்படுகிறது. இதில் சபரி மற்றும் கனி ஆகிய இருவரும் அருகிலேயே இருந்து யாரும் குத்தாத அளவுக்கு பார்த்துக் கொண்டனர். ஆனால், நடுவே கம்ருதீன் எழுந்து Restroom சென்று விட்டு வர, சுபிக்ஷா, ரம்யா, ஆதிரை உள்ளிட்டோர் கத்தியை குத்தியதாக தெரிகிறது.
ஆனால், Restroom செல்லும் முன் என்னை யார் வேண்டுமானாலும் குத்தி கொள்ளுங்கள் என கம்ருதீன் சொல்ல, திரும்பி வந்து பார்த்த போது அவருக்கே ஏமாற்றமாக போனது. இதனால், சுபிக்ஷாவிடம் முதலில் பேசும் கம்ருதீன், “நான் பாத்ரூம் போன கேப்ல என் மேல குத்திருக்கே. இது நீ எங்க இருந்து வந்துருக்கே?. எங்க வளர்ந்தே? அப்படிங்குறத காட்டுது.. முகத்துக்கு நேரா விளையாடணும்” என்கிறார். இதனால் கடுப்பான சுபிக்ஷா, “தேவை இல்லாமல் எங்க இருந்து வர்றே என்பது போன்ற வார்த்தைகளை விடாதீர்கள். இது மோசமான ஆட்டம் எல்லாம் இல்லை” என கூறுகிறார்.
உனக்குலாம் தகுதியே இல்ல
இதே போல, ரம்யாவிடம் போய் பேசும் கம்ருதீன், “நீ எல்லாம் என்கூட சண்டை போட தகுதியே கிடையாது. நீ யார்னே எனக்கு தெரியாது” என கூறுகிறார். இதனால் ரம்யாவும் கடுப்பாகி வார்த்தைகளை விட, பின்னர் ஆதிரையிடம் போய் பேசும் கம்ருதீன், “உனக்கு மரியாதையே கொடுக்க தெரியல. விஜய் சேதுபதிக்கே நீ மரியாதை கொடுக்கல. நீ என்னத்த ஜெயிச்சே.. பெரிய ஹீரோயின் நயன்தாரானு நினைப்பு மனசுல” என கூறுகிறார்.

சுபிக்ஷா மற்றும் ரம்யா ஆகிய இருவரும் மிக பின்தங்கிய குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்கள். சீரியல் நடிகர் என்ற ஒரே காரணத்தினால் அவர்களை இப்படி தகுதியே இல்லை, உன் வளர்ப்பு தான் காரணம் என மோசமாக கம்ருதீன் குறிப்பிட்டது மிக கேவலமான விஷயமாக தான் பார்க்கப்படுகிறது.
விஜய் சேதுபதியும் மிஸ் பண்ணிட்டாரே..
அப்படி இருக்கையில், இது தொடர்பாக விஜய் சேதுபதி பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கம்ருதீன் தான் செய்தது நியாயம் என பேசியதை தான் குற்றஞ்சாட்டி இருந்தார். மேலும், நீங்கள் அந்த இடத்தில் இல்லமால் போனால் அது உங்கள் தவறு தான் என்றும் கம்ருதீனை விஜய் சேதுபதி கடிந்து கொண்டார். மாறாக, 3 பெண்களின் பின்னணி பற்றி மிக தரக்குறைவாக கம்ருதீன் பேசியதை விஜய் சேதுபதியும் சுட்டிக்காட்ட தவறி விட்டதாகவே தெரிகிறது.
இதை விஜய் சேதுபதி குறிப்பிட்டு பேசியிருந்தால் நிச்சயம் கம்ருதீன் வரும் நாட்களிலாவது மாறியிருக்கலாம். ஆனால் அதற்கு வாய்ப்பு அமையாமல் போக இதுவே தொடரும் என்றும் தெரிகிறது.
நான் கடந்த 7 ஆண்டுகளாக பல வலைத்தளங்களில் கிரிக்கெட், சினிமா தொடர்பான செய்திகளை சுவாரஸ்யம் குறையாமல் வாசகர்கள் விரும்பும் வகையில் எழுதி வருகிறேன். இணையத்தில் இன்று ஏராளமான செய்திகள் சரியான விவரங்கள் இல்லாமல் வெளியாகி வரும் சூழலில் முடிந்த அளவுக்கு சிறந்த செய்திகளை கொடுப்பதற்கு நான் முன்னுரிமை கொடுத்து எழுதி வருகிறேன்.

