இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா.. ரூ.7350 கோடி திட்டம்.. 6,000 டன் காந்தம் தயாரிப்பு.. இனி சீனாவிடம் இருந்து காந்தம் இறக்குமதி தேவையில்லை.. இந்தியாவில் தயாரிக்கப்படும் காந்தம்.. இனி உலக வல்லரசு இந்தியா தான்..!

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி, தற்போது காந்தங்கள் தயாரிக்கும் துறையில் தனது கவனத்தை திருப்பியுள்ளார். நூற்றுக்கணக்கான பிற முக்கிப் பணிகள் இருந்தாலும், பிரதமர் மோடி அரிதான மண்…

india magnet

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி, தற்போது காந்தங்கள் தயாரிக்கும் துறையில் தனது கவனத்தை திருப்பியுள்ளார். நூற்றுக்கணக்கான பிற முக்கிப் பணிகள் இருந்தாலும், பிரதமர் மோடி அரிதான மண் காந்தங்கள் தயாரிக்கும் ஒரு மிகப்பெரிய திட்டத்தை தொடங்கியுள்ளார். இதற்காக, ரூ. 7,350 கோடி மதிப்பிலான திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் இலக்கு இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 6,000 டன் காந்தங்களை உற்பத்தி செய்வது.

இந்தியா திடீரென்று ஏன் காந்த உற்பத்திக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது? அதன் பின்னணியில் உள்ள வியூகம் என்ன? என்பதை தற்போது பார்ப்போம்.

இந்தியா இப்போது சென்டர்ட் அரிதான மண் நிரந்தர காந்தங்கள் தயாரிப்பதில் இறங்கியுள்ளது. இவை சாதாரண காந்தங்கள் அல்ல. இதே அரிதான மண் காந்தங்கள்தான் சீனாவை ஒரு உலகளாவிய சக்தியாக மாற்றின. முழு உலகத்தையும், ஏன் அமெரிக்காவையும் கூட, ஒரு ராட்சத காந்தம் போல தன்னுடைய சுற்றுவட்ட பாதைக்குள் இழுத்து வைத்திருக்கும் இந்த அரிய காந்தங்களை இனி இந்தியாவிலேயே தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ‘மேட் இன் இந்தியா’ காந்த உற்பத்தி சூழலை உருவாக்க, அரசு ரூ. 7,350 கோடி ஊக்க திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டம் ஏழு ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும். பெயருக்கேற்றாற்போல், இந்த அரிதான மண் காந்தங்கள், பூமியில் கிடைப்பதற்கு மிகவும் அரிதான கனிமங்களை பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன.இவை சாதாரண காந்தங்களை விட பல மடங்கு சக்தி வாய்ந்தவை. மிக அதிக வெப்ப நிலையிலும் தங்கள் காந்த சக்தியை இழக்காது.

பாதுகாப்பு மற்றும் விண்வெளித்துறை முதல் மொபைல் போன்கள், மின்சார வாகனங்கள் , காற்றாலைகள், சோலார் பம்புகள் வரை அனைத்திலும் இவை இன்றியமையாதவை. மோட்டார்கள், ஜெனரேட்டர்கள், ஹார்ட் டிஸ்க்குகள் போன்றவற்றிலும் காந்தங்களே முக்கியப் பங்கு வகிக்கின்றன.

உதாரணமாக, ஒரு கிலோ எடையை தூக்க 5×5 செ.மீ. அளவுள்ள சாதாரண காந்தம் தேவைப்படும் நிலையில், அதே வேலையை செய்ய 1×1 செ.மீ. அளவுள்ள ஒரு அரிதான மண் காந்தத்தால் முடியும்.

தற்போது, உலக அரிதான மண் காந்த சந்தையில் 90% க்கும் அதிகமாக சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால், இந்தியாவும், அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் சீனாவிடம் பெருமளவில் தங்கியிருக்கும் நிலை உள்ளது. இந்த சார்பு நிலையிலிருந்து விடுபடவே இந்தியா இந்த ‘காந்தப் பணி’யை தொடங்கியுள்ளது.

இந்தியாவின் தேவை தற்போது ஆண்டுக்கு சுமார் 4,100 டன் அரிதான மண் காந்தங்கள் ஆகும். இது 2030-ஆம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு சுமார் 8,220 டன்னாக இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேவையைப்பூர்த்தி செய்யவும், சீனாவின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபடவும் உள்நாட்டு உற்பத்தி மிக அவசியமாகிறது.

இது ஒரு அரசு நடத்தும் திட்டம் அல்ல. தனியார் உற்பத்தியாளர்கள் காந்த உற்பத்தி நிலையங்களை அமைக்க அரசு அவர்களுக்கு உதவும். ஆரம்பத்தில், ஐந்து ஒருங்கிணைந்த உற்பத்தி அலகுகளுக்கு அரசாங்க ஆதரவு வழங்கப்படும். ஒவ்வொரு ஆலைக்கும் ஆண்டொன்றுக்கு 1,200 டன் காந்தங்களை உற்பத்தி செய்யும் திறன் இருக்க வேண்டும்.

அரிதான மண் காந்தங்கள் தயாரிப்பு என்பது உலோகங்களை ஆக்ஸைடுகளில் இருந்து உருவாக்குவது, அவற்றை உலோகக் கலவைகளாக மாற்றுவது, மற்றும் உலோக கலவைகளை காந்தங்களாக மாற்றுவது ஆகிய கடைசி மூன்று நிலைகளில் இந்தியா முக்கியமாக கவனம் செலுத்தும். இதில், குறிப்பாக நியோடிமியம் காந்தங்களை உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்தப்படும்.

மத்திய அரசு இரண்டு வழிகளில் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கமளிக்கிறது. ஒன்று விற்பனை இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை. அதிக காந்தங்களை விற்கும் நிறுவனங்களுக்கு வெகுமதி வழங்கப்படும். ஒரு கிலோ நியோடிமியம் காந்தத்திற்கு அதிகபட்சமாக ரூ. 2,150 வரை ஊக்கத்தொகை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இரண்டாவதாக மூலதன மானியம் அளிப்பது. இந்தியாவில் உற்பத்தி அலகுகளை அமைக்கும் நிறுவனங்களுக்கு, ஏப்ரல் 1, 2025க்கு பிறகு செய்யப்படும் முதலீட்டின் மீது 15% மூலதன மானியம் வழங்கப்படும். இது இயந்திரங்கள், நிலம் மற்றும் கட்டிடங்களுக்கான ஆரம்பச் செலவைக் குறைக்க உதவும்.

தற்போது, முழு அளவிலான உற்பத்திக்கு தேவையான அரிதான மண் தாதுக்கள் மற்றும் ஆக்ஸைடுகளை இந்தியா இன்னும் பெருமளவில் இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. எனவே, இந்த மானியம் உற்பத்தியாளர்களின் செலவுகளை சமன் செய்ய மிகவும் முக்கியமானதாக அமைகிறது.

இந்த திட்டத்தின் கீழ், நிறுவனங்கள் இரண்டு ஆண்டுகளுக்குள் வசதிகளை உருவாக்கி, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் படிப்படியாக உற்பத்தியை அதிகரித்து, 6,000 டன் வருடாந்திர இலக்கை அடைய வேண்டும்.

இந்தியா காந்தங்களை துரத்தவில்லை; அது எதிர்கால தொழில்நுட்ப சுதந்திரத்தின் மீதான வியூக கட்டுப்பாட்டை துரத்துகிறது. இது வெற்றி பெற்றால், இந்தியா தொழில்நுட்பச்சுதந்திரத்தின் ஒரு புதிய சகாப்தத்தை ஈர்ப்பது உறுதி.