நடப்பு பிக்பாஸ் சீசனை கடந்த எட்டு சீசன்களாக தொடர்ந்து பார்த்து வரும் பலரும் காரி துப்பாத சூழல் தான் இருந்து வருகிறது. அந்த அளவுக்கு மிக மோசமான விமர்சனத்தை இந்த சீசன் சந்தித்து வரும் நிலையில் எந்த போட்டியாளர்களும் மிகுந்த அக்கறையுடன் போட்டியை முன்னெடுத்துச் செல்வோம் என்ற எண்ணத்தில் இருப்பதாக தெரியவே இல்லை. ஏதோ வீட்டிற்குள் வந்து விட்டோமே கடமைக்காக இருந்து விட்டு சென்றுவிடலாம் என்று வலம் வரும் நிலையில் அதற்குள் காதல், 18 பிளஸ், தேவையே இல்லாத நிறைய சண்டைகள் என தமிழ் பிக் பாஸ் வரலாற்றிலேயே மோசமான ஒரு சீசனாகத்தான் தற்போது வரை இருந்து வருகிறது.
கண்டென்ட் மற்றும் நாடகம் ஆடி நடித்துக் கொண்டிருக்கும் பல போட்டியாளர்களுக்கு மத்தியில் எப்போது தான் இந்த சீசன் முடியும் என்று இரண்டு வாரமாவதற்குள் பார்வையாளர்கள் கதற தொடங்கி விட்டார்கள். அந்த அளவுக்கு மோசமான ஒரு சீசனாக ஒன்பதாவது சீசன் இருக்க பிக் பாஸே சமீபத்தில் மிக கோபத்துடன் கொடுத்த ஒரு கண்டனமும் அதிக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சோதனை மேல் சோதனை
முதல் வாரத்தின் தண்ணீர் டாஸ்கின் போது அதன் தலைவராக இருந்த கம்ருதீன் தண்ணியை பிடித்து வைக்காமல் இரவு நேரத்தில் தூங்கியது பிக் பாஸிடம் இருந்து அதிக வெறுப்பை சம்பாதித்திருந்தது. இதற்கு முந்தைய சீசன்களிலும் இரவு நேர டாஸ்கில் எந்த போட்டியாளர்களும் இப்படி போய் தூங்கியதில்லை என குறிப்பிட்டு ஒன்பதாவது சீசனை பிக் பாஸை அவமானப்படுத்தி இருந்தார்.
இதற்கு மத்தியில் மீண்டும் ஒருமுறை அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிக் பாஸ் வீட்டின் கேப்டனாக துஷார் இருந்த நிலையில் அனைத்து போட்டியாளர்களையும் ஒரே இடத்தில் உட்கார வைத்து பேசிய பிக் பாஸ் , “ஒவ்வொரு சீசனிலும் பிக் பாஸ் வீடு ஒரு விஷயத்தில் பெருமையாக இருக்கும். இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டின் பெருமையாக இருப்பது ஒழுக்கமின்மை தான். மைக் மாட்டாமல் இருப்பது, தூங்கிக் கொண்டே இருப்பது என இந்த லிஸ்ட்டை நான் இன்னும் படித்தால் ஒரு நாளுக்கு மேல் வேண்டும்” என்று பிக் பாஸே தெரிவிக்கிறார்.
ஒழுக்கமே இல்லாத வீடு
தொடர்ந்து பேசும் பிக் பாஸ் , “ஒரு சிலரை தவிர மற்ற அனைவருமே மோசமாகத்தான் ஆடுகின்றனர். உங்கள் அனைத்து திறமையும் இந்த ஒரு நிகழ்ச்சியில் தான் காட்ட முடியும். அப்படிப்பட்ட ஒரு பிளாட்ஃபார்மை இப்படி வீணாக்குகிறீர்கள்” என்றார். பின்னர் கேப்டன் துஷாரிடம் பேசும் பிக் பாஸ், “நீங்களே மைக் மாட்டுவதில்லை. அப்புறம் எப்படி மற்றவர்களுக்கு ஒழுக்கம் சொல்லி கொடுப்பீர்கள்?. இங்கு வீட்டு தல பெரிய பதவி. தனி அறை என பல வசதி உண்டு. அப்படி இருந்தும் செய்ய தவறிட்டீங்களே.
ஒழுக்கம் இல்லாத வீட்டுக்கு வீட்டு தலயும் தேவை இல்லை. துஷாரிடம் இருந்து வீட்டு தல பதவி பறிக்கப்படுகிறது” என பிக் பாஸ் கூற, துஷார் முகம் மட்டுமில்லாமல் அனைவரது முகமும் தொங்கி போய் விடுகிறது. 2 வாரங்களில் எந்த சீசனும் சந்திக்காத அவமானத்தை இந்த முறை போட்டியாளர்கள் சந்தித்து வர, இதற்கு மேலாவது திருந்த வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமும்.
நான் கடந்த 7 ஆண்டுகளாக பல வலைத்தளங்களில் கிரிக்கெட், சினிமா தொடர்பான செய்திகளை சுவாரஸ்யம் குறையாமல் வாசகர்கள் விரும்பும் வகையில் எழுதி வருகிறேன். இணையத்தில் இன்று ஏராளமான செய்திகள் சரியான விவரங்கள் இல்லாமல் வெளியாகி வரும் சூழலில் முடிந்த அளவுக்கு சிறந்த செய்திகளை கொடுப்பதற்கு நான் முன்னுரிமை கொடுத்து எழுதி வருகிறேன்.

