Biggboss Tamil Season 9: விஷம் விஷம் விஷம்.. யார் யாரை விஷம் என்று சொல்கிறார் பார்வதி.. ஒரு விஷம் தான் இன்னொரு விஷத்தை கண்டுபிடிக்கும்.. பாரு ஒரு 10 ஜூலி, 20 மாயா, 30 பூர்ணிமாடா.. இந்த போடு போடுது..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி, முதல் நாளிலிருந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், ஒவ்வொரு நாளும் வெளியாகும் புரமோ வீடியோ, அன்றைய எபிசோடை பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டும்…

promo 2

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி, முதல் நாளிலிருந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், ஒவ்வொரு நாளும் வெளியாகும் புரமோ வீடியோ, அன்றைய எபிசோடை பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டும் வகையில் உள்ளது என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில், இன்றைய மூன்றாவது புரமோவில் வழக்கம்போல் பார்வதி மற்றும் திவாகர் ஆகிய இருவரும் மற்ற சக போட்டியாளர்கள் குறித்துப் புறணி பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக, “பிரவீன் ரொம்ப நடிக்கிறான்” என்று திவாகர் சொல்ல, “ஆமாம்! பிரவீன் ரொம்பவே நடிக்கிறார்” என்று பார்வதி ஆமோதிக்கிறார். மேலும், “இந்த நிகழ்ச்சிக்குப் பிரவீன் லாயக்கு இல்லை” என்று திவாகர் கூற, “என்னை பார்க்கும் போதெல்லாம் ஜால்ரா போடுகிறார்” என்று கூறுகிறார்.

அப்போது பார்வதி, “எனக்கு என்னவென்றால், எஃப்ஜே, பிரவீன், சபரி இவங்க எல்லாம் விஷம் என்று தோன்றுகிறது. சபரி வெளியே போனவுடன் எனக்கு எல்லாம் எவ்வளவு சந்தோஷமாக இருந்தது தெரியுமா?” என்று கூறுகிறார்.

இதற்கு கமெண்ட்ஸ்களாக பல நகைச்சுவை கருத்துக்கள் பதிவாகி வருகிறது. “ஒரு விஷத்திற்கு தான் இன்னொரு விஷத்தை கண்டுபிடிக்க முடியும்” என்று பார்வதியை விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், அதே நேரத்தில், “பார்வதி சொல்றது 100 சதவீத உண்மை, எப்ஃஜேவுக்கு மனசுல ஜி.வி. பிரகாஷ் நினைப்பு” என்று கமெண்ட்ஸ்களும் பதிவாகி வருகிறது.

“பாரு கரெக்டாக கணித்து வைத்திருக்கிறார்” என்றும் சிலர் ஆதரவு தெரிவித்தாலும், “எல்லோரும் விஷமாக இருக்கும்போது நீ மட்டும் என்ன ஏஞ்சலா?” என்ற கமெண்ட்ஸ் எல்லாம் பதிவாகி வருகிறது. மேலும், “பாரு ஒரு 10 ஜூலிக்கு சமம், 20 மாயாவுக்கு சமம், 30 பூர்ணிமாவுக்கு சமம்” என்றும், “இந்த சீசனில் பார்வதியின் இந்த ஃபார்ம் கண்டிப்பாக எதிர்மறை விமர்சனம் கிடைத்தாலும் 100 நாட்கள் வரை இருக்க வாய்ப்பு இருக்கிறது” என்றும் கூறப்பட்டு வருகிறது.

மேலும், “சபரி வெளியே போனதுக்கு சந்தோஷப்படும் பாரு தான் ஒன்றாம் நம்பர் விஷம்” என்றும், “இவர் மத்தவங்களை விஷம் என்று கூறுவது வெறுப்பின் உச்சம்” என்றும் சில கமெண்ட்கள் பதிவு செய்து வருகின்றனர்.