Biggboss Tamil Season 9, Day 10: எங்கு பார்த்தாலும் ‘கண்டென்ட்’ தான்.. முத்தமும் ‘கண்டென்ட்’, சண்டையும் ‘கண்டென்ட்’.. பார்வதி செய்வது எல்லாமே ‘கண்டென்ட்’. மொத்த போட்டியாளர்களும் ‘கண்டென்ட்’ பைத்தியங்களா? என்னங்கடா சீசன் இது..!

பிக் பாஸ் சீசன் 9 இன் 10வது நாள், உணர்ச்சிப்பூர்வமான குழப்பங்கள், முத்த காட்சிகள், சண்டைகள் மற்றும் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் மார்க் போடும் சுவாரஸ்யமான டாஸ்க் என நிறைந்திருந்தது. ஆதிரை, சக போட்டியாளர் FJ-ஐ…

BB day 10

பிக் பாஸ் சீசன் 9 இன் 10வது நாள், உணர்ச்சிப்பூர்வமான குழப்பங்கள், முத்த காட்சிகள், சண்டைகள் மற்றும் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் மார்க் போடும் சுவாரஸ்யமான டாஸ்க் என நிறைந்திருந்தது.

ஆதிரை, சக போட்டியாளர் FJ-ஐ தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசுகிறார். விவாதத்தின்போது, “வெளியில் தவறாக போகும்” என்பதால் தான் விலகி பேசுவதை போல FJ நடந்துகொள்வதாக ஆதிரை கேள்வி எழுப்புகிறார். FJ-ஆல் தான் மிகவும் பலவீனமாகி விட்டதாக கூறி ஆதிரை அழுகிறார். இது, பிக் பாஸ் வீட்டின் தனிமை மற்றும் நெருக்கம் காரணமாக போட்டியாளர்கள், அதீத உணர்ச்சிப்பூர்வமான பற்றுதலில் சிக்குவது இயல்பு என்பதையே காட்டுகிறது.

போட்டியாளர்கள் பலருக்குள்ளேயே முன்பே அறிமுகம் இருக்கலாம், ஆனால், வீட்டுக்குள் தங்களை அறியாதது போல் காட்டிக்கொள்வது ‘கண்டென்ட்’க்காகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. வெளியுலக உறவுகள் இருந்தும், உள்ளே ஒரு “காதலை” உருவாக்கிக்கொள்வதும் ‘கண்டென்ட்’க்காகவே இருக்கலாம்.

நேற்றைய எபிசோடில் துஷார் மற்றும் அரோராவுக்கு இடையேயான “முத்தம்” ரேஞ்சுக்கு சென்ற சில்மிஷங்கள் அரங்கேறின. பின்னர், துஷார், அரோராவிடம் சரியாக பேசாமல் கெமியுடன் பேச சென்றதால், அரோரா வருத்தமடைந்தார்.

இதைச் சுட்டிக்காட்டிய FJ, அரோராவிடம், “இங்கு யாரும் குடும்பம், உறவு கொண்டாட வரவில்லை. அவரவர் வேலையில் கவனமாக இருப்பார்கள். துஷாரும் இப்போது கெமியை கரெக்ட் செய்யப் பார்க்கிறார்” என்று வெளிப்படையாக கூறுகிறார்.

கமருதீன் தனக்காகவே பிக் பாஸ் வீட்டுக்குள் வந்ததாக சொன்னாலும், பார்வதி அவரை ‘ஹஸ்பண்ட் மெட்டீரியல்’ என்று அடையாளப்படுத்துகிறார். எனினும், அரோரா கமருதீனை ‘இம்பல்சிவ் ஆனால், ஜாலியான ‘பிரெண்ட் மெட்டீரியல்’ என்று வர்ணிக்கிறார். இம்பல்சிவ் ஆன ஆளை யாரும் இழக்க மாட்டார்கள் என்றும், அவர்கள் தோளில் உட்கார்ந்து உடற்பயிற்சி செய்யலாம் என்றும் அரோரா வெளிப்படையாக கூறுவது குறிப்பிடத்தக்கது.

வீட்டின் தோட்டத்தில் அரோரா, பார்வதி, துஷார் மற்றும் கமருதீன் ஆகியோர் இணைந்து, சக ஆண் போட்டியாளர்களின் ‘தோற்றம் மற்றும் ஆளுமைக்கு’ மதிப்பெண்கள் போடும் சுவாரஸ்யமான டாஸ்கில் ஈடுபட்டனர். இதில், துஷாருக்கு அரோரா 9.5 மதிப்பெண்களை வழங்கினார், அதே சமயம் பார்வதி 7.5 மார்க் அளித்தார். கமருதீனுக்கு 7 மற்றும் 8.5 வழங்கப்பட்டு ‘டஸ்கி’, ‘ஃபன்னியாக பேசுகிறான்’ மற்றும் ‘பாய்ஃப்ரெண்ட் மெட்டீரியல்’ போன்ற வர்ணனைகள் வழங்கப்பட்டன.

FJ-க்கு அரோரா 9 மார்க் வழங்கியிருந்தாலும், பார்வதி அவருடன் முரண்பட்டதால் அவருக்கு 6.5 மட்டுமே அளித்தார். பிரவீன் ராஜுக்கு 6 மற்றும் 6.5 மார்க்குகளும், விக்ரம் மற்றும் சபரிக்கு இருவருமே 7 மார்க்குகளும் கொடுத்தனர், சபரியை ‘பாடி மெயின்டெயின் செய்கிறார்’ என்று குறிப்பிட்டனர். கலையரசனுக்கு 7.5 மற்றும் 6.5 மற்றும் திவாகருக்கு 8 மற்றும் 6.5 மதிப்பெண்களை பார்வதி அளித்தார், இதற்கு காரணம் அவர்கள் இருவரும் அவருடன் சுற்றி கதை கேட்பதால் அல்லது அதிக நேரம் செலவிடுவதால் என்பதாக இருக்கலாம்..

வினோத் மீது திவாகர் தேவையில்லாமல் எல்லாவற்றுக்கும் பழி போடுவதாக சொல்லி புலம்புகிறார். இது வினோத் அல்லது திவாகர் ஆகிய இருவரில் ஒருவர் வெளியே போகும் வரை தொடரும் ஒரு கண்டென்ட் ஆக இருக்கலாம்.

ஒரு டாஸ்கில் வினோத் வெளியேற்றப்பட்டாரா இல்லையா என தீர்மானிக்கும்போது, பார்வதி முடிவை ஏற்றுக்கொள்ளாமல், ஆட்ட களத்தின் நடுவிலேயே நின்று சண்டையிடுகிறார். “ஓரமா நில்லு” என்று சபரி சொன்னபோது, பார்வதி “டேய் போடா” என்று ஆவேசமாக பேச, சபரி ஆத்திரமாகிறார். கண்டென்ட்காகவே இந்த சண்டையும் இருக்கலாம்.

மொத்தத்தில் 10ஆம் நாளில் பிக் பாஸ் வீட்டில் காதல், சண்டை, மற்றும் கேளிக்கை கலந்த ஒரு ‘கண்டென்ட்’ நிறைந்த நாளாகவே இருந்தது.