Bigg boss 9 Tamil : அந்த பொண்ணுக்காக தான் இங்க வந்தேன்.. யார் தப்பா நெனச்சாலும் சரி.. கம்ருதீன் சொன்ன அந்த வார்த்தை.. பதறிய வினோத்..

Bigg boss 9 Kamrudin and Gana Vinoth : பிக் பாஸ் வீடு தற்போது போய் கொண்டிருக்கும் நிலையை என்ன சொல்வதென்று தெரியாத அளவுக்கு தான் நிலைமை உள்ளது. ஒரு சில குழுக்கள்…

Kamrudin and Vinoth

Bigg boss 9 Kamrudin and Gana Vinoth : பிக் பாஸ் வீடு தற்போது போய் கொண்டிருக்கும் நிலையை என்ன சொல்வதென்று தெரியாத அளவுக்கு தான் நிலைமை உள்ளது. ஒரு சில குழுக்கள் உருவாகினாலும் மற்ற பல போட்டியாளர்கள் தனியாக இருப்பதுடன் அவர்களது ஆட்டத்தின் போக்கும் எந்த மாதிரியான சூழலில் உள்ளது என்பதே தெரியாத நிலை தான் உள்ளது.

அது மட்டுமில்லாமல், எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு 18 + கண்டென்ட்களையும் பலர் பேசி வருகின்றனர். அதை நகைச்சுவையாக அவர் செய்தாலும் வெளியே லட்சக்கணக்கிலான ரசிகர்கள் இருப்பதால் அவர்கள் அருவருத்தக்கும் சூழலும் உள்ளது. ஏற்கனவே இந்த சீசனில் போட்டியாளர்கள் செயல்பாடு மோசமாக அமைந்து வரும் சூழலில், நாளுக்கு நாள் இன்னமும் மோசமான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவே தெரிகிறது.

அதிலும் குறிப்பாக, போட்டியாளர் கம்ருதீன் தான் என்ன பேசுவதென்று தெரியாமலேயே பேசுவதுடன் ஒரு விஷயத்தை எதிர்கொள்ள தெரியாது என்ற நிலையில் தான் இருந்து வருகிறார். அதிலும் திவாகருடன் அவரது செயல்பாடு மோசமாகவும் அமைந்து வருகிறது. இதற்கு மத்தியில் கேட்பவரை குழப்பமாக்கும் வகையில் அரோரா பற்றி கமருதீன் பேசியது பார்வையாளர்களை இன்னமும் கடுப்பாக்கி உள்ளது.

மண்டையே பிச்சுக்குற மாதிரி..

அரோரா பற்றி வினோத்திடம் பேசும் கம்ருதீன், ‘அந்த பொண்ணுக்காக தான் இந்த வீட்டிற்கே வந்தேன். ஏன்னா ஒண்ணா பழகி இருக்கோம். பேசிருக்கோம். ஒரு துணையா இருக்கும் பாவம்னு தான் வந்தேன்’ என்கிறார். உடனே, அரோராவை முன்னாடியே தெரியுமா என வினோத்தும் குழப்பத்தில் கேட்க, ‘இல்லை. இங்கே வந்த பின்னர் தான் தெரியும்’ என கம்ருதீன் சொல்கிறார்.

‘அப்புறம் எப்படி அவளுக்காக தான் வீட்டுக்கு வந்தேன் என சொல்கிறாய்?’ என குழப்பத்துடன் வினோத் கேட்க, “இங்க வந்து தான் தெரியும். அவளுக்காக வீட்டுக்கு வந்ததை யார் தப்பா நெனச்சாலும் எனக்கு பிரச்சனை இல்லை” என்று கம்ருதீன் சொல்ல, வினோத் மட்டுமில்லாமல் பார்வையாளர்களுக்கும் மண்டையே குழம்பி போகிறது.
aurora and Kamrudin

இது நல்லதுக்கில்ல..

இறுதியில் அரோராவுக்காக சூப்பர் டீலக்ஸ் வீட்டில் இருந்து பிக் பாஸ் வீட்டிற்கு மாறியதை கம்ருதீன் தெளிவுபடுத்தவும் செய்கிறார். பின்னர் தான் வினோத்தும் நிம்மதி பெருமூச்சே விடுகிறார். ஆனால், அதே வேளையில் சூப்பர் டீலக்ஸ் வீட்டில் இருந்து பிக் பாஸ் டீமை ஆட்டிப் படைக்காமல் அரோராவுக்காக பிக் பாஸ் டீமிற்கு வந்ததாக கம்ருதீன் சொன்னது அவரது ஆட்டத்திறனை கேள்வி செய்யும் விதமாக தான் உள்ளது.