பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி, சண்டைகளுக்கே முக்கியத்துவம் அளிக்கும் சீசனாக மாறி வருகிறது. குறிப்பாக, பார்வதி மற்றும் திவாகர் கூட்டணி வேண்டுமென்றே மற்ற போட்டியாளர்களுடன் சண்டையிடுவது பார்வையாளர்களுக்கு எரிச்சலை தருகிறது.
பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் முகமூடிகளை கொண்ட ஒரு டாஸ்க் வழங்கப்பட்டது. பிக் பாஸ் விதிமுறைகளை கூறிய பின் விசில் அடித்தவுடன், போட்டியாளர்கள் ஓடி சென்று முகமூடிகளை எடுக்க வேண்டும். அப்போது, போட்டியாளர்களில் ஒருவரான சபரிநாதன் கையில், வி.ஜே. பார்வதியின் படம் போடப்பட்ட முகமூடி கிடைத்தது.
சபரிநாதன் பார்வதியின் முகமூடியை எடுத்தவுடன், பார்வதி உடனடியாக, “என்னுடைய முகம் போட்ட முகமூடியை மட்டும் வேண்டுமென்றே பாய்ந்து எடுக்கிறான் சபரிநாதன்” என்று குற்றம் சாட்டினார்.
இதையடுத்து, ஆத்திரமடைந்த திவாகர், “இது பர்சனல் வென்சன்ஸ் , பர்சனல் டார்கெட்” என்று சபரிநாதன் மீது குற்றம் சாட்டினார்.
திவாகரின் இந்தக் குற்றச்சாட்டை கேட்டுச் சற்றும் சளைக்காத சபரிநாதன், “ஆமாம், அப்படித்தான் நினைத்துக் கொள்” என்று பதிலடி கொடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த பார்வதியும் “போடா போடா” என்று சபரிநாதனுடன் மோத, அங்கு ஒரே ரணகளமாக மாறியது.
பார்வதியும் திவாகரும் சேர்ந்து கொண்டு சக போட்டியாளர்களை வம்பு இழுப்பது, வேண்டுமென்றே சண்டை போடுவது போன்ற அட்டூழியங்கள், சக போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி நிகழ்ச்சியை பார்க்கும் பார்வையாளர்களுக்கும் பெரும் எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
https://x.com/vijaytelevision/status/1977985267282674133
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
