Biggboss Tamil Season 9: ஆள் பார்த்து சாப்பாடு வைக்குறாங்க.. பெர்சனல் வஞ்சத்தை சாப்பாட்டில் காட்டுறாங்க.. ஆவேசமான திவாகர்.. அதிரடி காட்டும் சபரிநாதன்.. பிக்பாஸ் முதல் புரமோவே பரபரப்பு தான்..!

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் முதல் புரமோ வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில், பிக்பாஸ் வீட்டில் உணவு பங்கீட்டில் ஏற்பட்ட பெரும் மோதலை காட்சியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ‘வாட்டர்மெலன் ஸ்டார்’ திவாகர்,…

promo

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் முதல் புரமோ வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில், பிக்பாஸ் வீட்டில் உணவு பங்கீட்டில் ஏற்பட்ட பெரும் மோதலை காட்சியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ‘வாட்டர்மெலன் ஸ்டார்’ திவாகர், உணவு விநியோகத்தில் நடக்கும் பாகுபாடுகளை குறித்து கடுமையாக பேசி, சண்டையிடும் காட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

புரமோ வீடியோவில், பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் டைனிங் ஏரியாவில் அமர்ந்திருக்கும் போட்டியாளர்களை பார்த்து சபரிநாதன், “இங்க ரைஸ் வைக்கிறதுக்கு யார் யாருக்கெல்லாம் விருப்பம் இல்லையோ, அவங்க மட்டும் கை தூக்குங்க ப்ளீஸ்!” என்று கேட்கிறார்.

அப்போது திவாகர், “இப்படி சொன்னா நல்லா சாப்பிடறவங்க கூட சாப்பிட மாட்டாங்க. அதுக்கப்புறம் சாப்பிட்டு என்ன சார் பிரயோஜனம்? என்று உணர்ச்சிவசப்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். மேலும் பெர்சனல் வஞ்சத்தை வைத்து கொண்டு சாப்பாடு விஷயத்தில் காட்டுகிறார்கள் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

தன் வேலையில் தொடர்ந்து குறுக்கிடுவது மற்றும் உணவு விநியோகத்தில் பாகுபாடு காட்டுவது குறித்து திவாகர் மேலும் ஆவேசமாக பேசும்போது, “அவங்க ஒரு பெர்சனல் வெஞ்சன்ஸை சாப்பாட்டுலதான் காட்டுறாங்க. ஆள் பார்த்து ஆள் பார்த்து வைக்கிறாங்க சாப்பாடை!” என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறார்.

திவாகரின் இந்த புகார், வீட்டில் நடக்கும் உணவு பங்கீட்டு அரசியலையும், ஆள் பார்த்து உணவு வழங்கும் பாகுபாட்டையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. சபரிநாதன் உள்ளிட்ட மற்ற போட்டியாளர்களுடன் அவர் மோதும் இந்த பரபரப்பான காட்சிகள், இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.