பிக் பாஸ் சீசன் 9 தமிழில், நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரத்திற்குள்ளேயே காதல் மற்றும் சர்ச்சைக்குரிய நெருக்கம் குறித்த காட்சிகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. போட்டியாளர் ஆரோராசின் கிளருக்கும் இளம் போட்டியாளர் துஷாருக்கும் இடையில் உருவாகி வரும் உறவு, சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு காதல் காட்சி இருக்கும். ஆனால் அந்த காதல் காட்சிகள் ஒரு மாதத்திற்கு பின்னரே தொடங்கும் நிலையில், இந்த முறை ஆரம்பத்திலேயே துஷாரும் ஆரோராசின் கிளரும் நெருக்கமாக பழக தொடங்கியுள்ளனர்.
முதலில் இரவு நேரங்களில் ஒன்றாக அமர்ந்து பேசுவது, பின்னர் சாதாரணமாக விளையாடுவது என்று தொடங்கிய இவர்களின் நெருக்கம், ஒரு கட்டத்தில் ஆரோராசின் கிளரால் துஷாரின் கையில் ‘கடிக்கும்’ அளவுக்கு எல்லை மீறி சென்றுள்ளது.
அண்மையில், துஷார் அருகில் அமர்ந்திருந்தபோது, ஆரோராசின் கிளரி கை கோர்க்க முயன்றதாகவும், ஆனால் துஷார் தயக்கத்துடன் விலகியதாகவும் காட்சிகள் வெளியாகின.
இதனைப் பார்க்கும் ரசிகர்கள், “இதை எப்படி அக்கா – தம்பி உறவு என்று கூறுவது? இது வெளிப்படையாக லவ் கன்டென்ட் உருவாக்கும் முயற்சி” என்று விமர்சிக்கின்றனர்.
ஆரோராசின் கிளரின் நடவடிக்கைகள் குறித்து சமூக ஊடகங்களில் ஏற்கனவே விமர்சனங்கள் எழுந்துள்ளன. இன்ஸ்டாகிராமில் 18+ கன்டென்ட்களை பணம் பெற்று விற்றது போன்ற குற்றச்சாட்டுகளால், ‘பலூன் அக்கா’ என்ற பெயரிலும் இவர் விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அவர் கதை சொல்லும் டாஸ்க்கில் பேசிய ஒரு விஷயமும் தற்போதைய சர்ச்சைக்கு ஒரு காரணமாகிறது:
“நான் டேட்டிங் செயலிகளில் அழகானவர்களை பார்ப்பேன். ஆனால், அவர்கள் வயதில் இளையவர்களாக இருந்தால், வருத்தத்துடன் அவர்களை தவிர்த்துவிடுவேன்” என்று அவர் கூறியிருந்தார். இப்போது தன்னை விட வயதில் குறைவான துஷாருடன் அவர் நெருக்கம் காட்டுவது, இந்த கருத்தை நிரூபிப்பது போல இருப்பதாக விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
100க்கும் மேற்பட்ட கேமராக்கள் உள்ள ஒரு ரியாலிட்டி ஷோவில், இது போன்ற சர்ச்சைக்குரிய நெருக்கம் சமூகத்தில் உள்ள இளம் பெண்களை தவறாக வழிநடத்தும் அபாயம் உள்ளது என்று விமர்சகர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும், ஒரு காதல் முறிவுக்கு பிறகு தனது முன்னாள் காதலனை சந்தித்து, அவனுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்திப் பழி வாங்கிய தனது கடந்த கால கதையையும் ஆரோராசின் கிளரி கூறியுள்ளார். அதேபோல், இளம் போட்டியாளரான துஷாரை இவர் ஒரு கன்டென்ட்டுக்கு மட்டுமே பயன்படுத்திவிட்டு, அவர் சீரியஸாக எடுத்துக்கொண்டால் பின் விளைவுகளுக்கு யார் பொறுப்பு என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.
கடந்த சீசன்களில் காதல் காட்சிகள் 50 நாட்களுக்கு பிறகே மெல்ல தொடங்கின. ஆனால், இந்த முறை முதல் வாரத்திலேயே இவை தொடங்கியிருப்பது, நிகழ்ச்சியின் தரத்தை இழிவுபடுத்துகிறது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஆரோராசின் கிளரின் இத்தகைய நடவடிக்கைகள் ஒரு 18+ நிகழ்ச்சியாகக் கருதப்படும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சிக்குச் சரியானதல்ல என்றும், பிக் பாஸ் குழுவே இப்படிப்பட்ட கன்டென்ட்களை ஊக்குவிக்க கூடாது என்றும் ரசிகர்கள் வலியுறுத்துகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
