Biggboss Tamil 9: நந்தினி தானாக வெளியேறினாரா? பிக்பாஸ் வலுக்கட்டாயமாக வெளியேற்றினாரா? எல்லாமே Fake.. எல்லாமே Contentக்காக.. இது என்ன ரியாலிட்டி ஷோவா? அல்லது டிவி தொடரா? மக்கள் என்ன முட்டாளகளா? டிஆர்பிக்காக தரம் குறையும் தொலைக்காட்சிகள்..!

பிக் பாஸ் சீசன் 9 தமிழிலிருந்து போட்டியாளர் நந்தினி வெளியேற்றப்பட்டதற்கான காரணம் குறித்து சமூக ஊடகங்களில் ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அவர் தானாக வெளியேறினாரா? அல்லது பிக் பாஸ் குழு அவரை வெளியேற்றியதா?…

nandhini

பிக் பாஸ் சீசன் 9 தமிழிலிருந்து போட்டியாளர் நந்தினி வெளியேற்றப்பட்டதற்கான காரணம் குறித்து சமூக ஊடகங்களில் ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அவர் தானாக வெளியேறினாரா? அல்லது பிக் பாஸ் குழு அவரை வெளியேற்றியதா? என்ற குழப்பம் நீடிக்கிறது. இந்த குழப்பத்தின் பின்னணி குறித்து தற்போது பார்ப்போம்.

நந்தினி, தனது பெற்றோரை இழந்ததால் ஏற்பட்ட உணர்ச்சிப்பூர்வமான துயரத்தில் இருக்கும் ஒரு போட்டியாளர் என்பதை ‘கதை சொல்லும்’ டாஸ்க்கின் மூலம் அவரே வெளிப்படுத்தினார். இவ்வளவு உணர்வுப்பூர்வமான ஒரு நபரை, பலவிதமான உளவியல் பரிசோதனைகள் நடத்திய பிறகு, 100 நாட்களுக்கு மேல் நீடிக்க வேண்டிய பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் தயாரிப்புக் குழு ஏன் தேர்ந்தெடுத்தது என்ற கேள்வி எழுகிறது.

நந்தினி போன்ற சென்சிட்டிவான நபரை உள்ளே கொண்டு வந்தால், அவர்களை மையப்படுத்தி பெரிய அளவில் சென்சிட்டிவ் கண்டெண்ட் உருவாக்க முடியும் என்று பிக் பாஸ் தயாரிப்பு குழு முன்கூட்டியே திட்டமிட்டிருக்கலாம் என ரசிகர்கள் சந்தேகிக்கின்றனர்.

நந்தினி நினைத்தபடியே, நேற்று இரவு பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு பெரிய சலசலப்பு வெடித்தது. அவர் மற்ற போட்டியாளர்களை நோக்கி எழுப்பிய முக்கியமான கேள்வி, “இங்கு எதுவுமே இயல்பாக இல்லை; எல்லாமே போலியாக இருக்கிறது” என்பதுதான்.

வீட்டில் இருப்பவர்கள் போலியாக இருப்பது ஒருபுறம் இருக்க, திட்டமிட்டு போலியான கண்டெண்ட்களை உருவாக்குவதாகவும் நந்தினி குற்றச்சாட்டு தெரிவித்தார். உதாரணமாக கமரூதீன் மற்றும் ஆதிரை ஆகியோர் வெளியே ஒரு டிவி தொடரில் நன்கு பழக்கப்பட்டிருந்தும், பிக் பாஸ் வீட்டிற்குள் ஒருவரை ஒருவர் தெரியாதது போலவும், எதிரணியில் சண்டை இடுவது போலவும் நடிப்பதும், சாதாரண பேச்சுகளுக்கு செயற்கையாக சண்டை காட்சிகளை உருவாக்குவதும் போலியாக உள்ளது என்று நந்தினி கூறினார்.

நந்தினியின் இந்த வெளிப்படையான பேச்சுகள், வீட்டிற்குள் நடக்கும் ‘செட் அப்’ நாடகத்தை அம்பலப்படுத்த தொடங்கின. நந்தினி கன்ஃபெஷன் அறைக்கு அழைக்கப்பட்டபோது, “வீட்டில் உண்மைத்தன்மை இல்லை, அதனால் என்னால் இருக்க முடியாது” என்று தெளிவாக தெரிவித்தார். வழக்கமாக இதுபோன்ற சூழ்நிலைகளில், பிக் பாஸ் போட்டியாளர்களை சமாதானப்படுத்துவார்; வாய்ப்பு கிடைப்பது அரிது என்று கூறி ஊக்கமளிப்பார். ஆனால், நந்தினியின் விஷயத்தில் பிக் பாஸ் மிகவும் மாறுபட்ட அணுகுமுறையை கையாண்டார். அவர் வெளியேற விரும்புவதாக கூறியவுடன், “நாங்கள் இதற்காகத்தான் காத்திருந்தோம், கதவு திறந்திருக்கிறது, தயவு செய்து வெளியேறுங்கள்” என்ற தொனியில் நடந்த உரையாடல், பிக் பாஸ் குழு அவரை வெளியேற்ற தயாராக இருந்தது என்பதை வெளிப்படுத்துகிறது.

காரணம்: நந்தினி வீட்டிற்குள் நடக்கும் போலியான உள்ளடக்கங்களை அம்பலப்படுத்தியதால், இது தங்களுக்கு நல்லதல்ல என்பதைப் பிக் பாஸ் குழு உணர்ந்தது. இதனால், இதுவே சரியான வாய்ப்பு என்று கருதி நந்தினியை திட்டமிட்டுக் கட்டாயப்படுத்தி வெளியேற்றி இருக்கலாம் என்று பெரும்பாலான பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

வெளியேற்றப்பட்ட நந்தினி தனது கருத்துகளை ஊடகங்கள், யூடியூப் சேனல்கள், மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் நிச்சயம் வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிக் பாஸ் குழு நந்தினியின் சர்ச்சைக்குரிய பேச்சுகளை ‘மியூட்’ செய்தோ அல்லது நீக்கியோ இருக்கலாம். ஆனால், அவர் வெளியே வந்தபின் உண்மைகள் யாவும் மக்களுக்கு தெரியவரும்.

உள்ளே நடக்கும் அனைத்துமே கண்டெண்ட்டுக்காக போலியாக செய்ய வேண்டிய கட்டாயம் போட்டியாளர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கலாம் என்றும், அதற்கு உடன்படாததாலேயே நந்தினி வெளியேற்றப்பட்டார் என்றும் பரவலாக பேசப்படுகிறது.

“பிக் பாஸ் என்பது ‘நீயா இரு’ என்ற கொள்கையுடன் தொடங்கப்பட்டது. ஆனால், இப்போது எல்லாமே போலியான சண்டைகள், போலியான காதலுக்கான காட்சிகள் என்று மாறுவதால், மக்கள் நிகழ்ச்சியின் மீதுள்ள ஆர்வத்தை இழக்கக்கூடும்” என்ற கருத்தும் பார்வையாளர்கள் மத்தியில் நிலவுகிறது.

நந்தினி வெளியேறியதால், இந்த வாரம் வெளியேற வேண்டிய இன்னொரு போட்டியாளரான கலையரசன் தப்பித்துவிடுவாரா? அல்லது நாமினேஷனில் உள்ள ஒரு போட்டியாளர் வெளியேறுவாரா? என்பதை நாளை வரை பொறுத்திருந்து பார்ப்போம்,.