Biggboss Tamil Season 9.. ‘விஜய் டிவிக்கு அழிவு காலம்.. பொணம் திங்கிறவன் எல்லாம் போட்டியாளரா? சாதி வெறி பிடித்தவனை எப்படி உள்ளே விட்றீங்க.. டிஆர்பிக்காக திவாகரை வெளியே அனுப்ப மாட்டாங்க.. பிக்பாஸ் போட்டியாளர்களை பொளந்து கட்டிய நடிகை ஷகிலா..!

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும் நிலையில், முன்னாள் குக் வித் கோமாளி போட்டியாளரும் நடிகையுமான ஷகிலா, இந்நிகழ்ச்சி குறித்தும், அதில் இடம்பெற்றுள்ள போட்டியாளர்கள் குறித்தும், குறிப்பாக விஜய் டிவி…

shakila

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும் நிலையில், முன்னாள் குக் வித் கோமாளி போட்டியாளரும் நடிகையுமான ஷகிலா, இந்நிகழ்ச்சி குறித்தும், அதில் இடம்பெற்றுள்ள போட்டியாளர்கள் குறித்தும், குறிப்பாக விஜய் டிவி குறித்தும் மிகவும் பரபரப்பான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

நடிகை ஷகிலா, பிக் பாஸ் வீட்டுக்குள் நடக்கும் சில நிகழ்வுகளை சுட்டிக்காட்டி, விஜய் டிவியின் செயல்பாடு குறித்து தன் அதிருப்தியை பதிவு செய்துள்ளார்.

தற்போதைய சர்ச்சைகளுக்கு மத்தியில், திவாகரை நிகழ்ச்சியை விட்டு வெளியே அனுப்ப மாட்டார்கள் என்று ஷகிலா உறுதியாகக் கூறியுள்ளார். “டி.ஆர்.பி-க்காக” அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்றும், திவாகர் தான் தற்போது அவர்களுக்கு நல்ல ‘கன்டென்ட்’ வழங்குபவர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“இது விஜய் டிவிக்கு அழிவு காலம் என்று கூறிய ஷகிலா டி.ஆர்.பி-க்காக எந்த அளவுக்கு இறங்கி போகிறார்களோ, அந்த அளவுக்கு அவர்களுக்கு மோசமான காலம் நெருங்குகிறது,” என்று ஷகிலா வெளிப்படையாக விமர்சித்துள்ளார்.

சமீபத்தில், பிக் பாஸ் வீட்டில் பார்வதிக்கும் கெமிக்கும் இடையில் நடந்த சண்டை குறித்தும் ஷகிலா பேசினார். கெமி செய்தது தவறு என்று ஒப்புக்கொண்ட ஷகிலா, பார்வதி மீது கெமி தண்ணீர் ஊற்றி கோபத்தைத் தூண்டியது வேண்டுமென்றே செய்யப்பட்டது என்றும் விமர்சித்தார்.

மேலும் கலையரசன் பிணங்களை தின்றவன் என்றும், இதுபோன்ற ஒருவரை எப்படி போட்டியாளராக தேர்வு செய்தனர் என்றும் கேள்வி எழுப்பிய ஷகிலா, திவாகர் ஜாதியை வைத்து நிறைய பேசியுள்ளார் என்று நானே போலீஸில் புகார் அளித்துள்ளேன். இப்படிப்பட்டவர்களை விசாரிக்காமல் எப்படி போட்டியாளர்களாக சேர்த்தது விஜய் டிவி என்றும் ஷகிலா கேள்வி எழுப்பினார்,.

வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்கள் இந்த பெரிய சண்டைக்கு பிறகும், எதுவுமே நடக்காதது போல சாதாரணமாக இருப்பது பார்வதிக்கு அதிர்ச்சி அளிக்கிறது என்பதை ஷகிலா குறிப்பிட்டார். பிக் பாஸ் வீட்டில், ஒருவருக்கு ஒரு பிரச்னை என்றால் மற்றவர்கள் அதை பற்றி கவலைப்படாமல் இருப்பது, அந்த வீட்டின் குரூரமான போக்கை காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

பிக் பாஸ் போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளில், போட்டியாளர்கள் தங்கள் சொந்த உணர்வுகளைவிட ஆட்டத்தின் உத்திக்கும், டி.ஆர்.பி-க்குமான கன்டென்ட்டுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்ற உண்மையை ஷகிலா தனது பேட்டியில் வலியுறுத்தியுள்ளார். இந்த பேட்டி, பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.