பண்றதெல்லாம் பண்ணிட்டு சாப்பாடு வேணுமான்னு கேட்குறியா? என்னா ஒரு வில்லத்தனம்.. திவாகரிடம் புலம்பும் பார்வதி.. ஆமாம் சாமி போடும் திவாகர்.. கண்டுகொள்ளாத கெமி.. கெமி – பார்வதி மோதல் இன்னும் முற்றுமா?

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் பார்வதி மற்றும் கெமி ஆகியோருக்கிடையே நடந்த மோதல் குறித்த சம்பவம் தற்போது வீட்டில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடந்த ஒரு டாஸ்க்கின் போது,…

bb 9

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் பார்வதி மற்றும் கெமி ஆகியோருக்கிடையே நடந்த மோதல் குறித்த சம்பவம் தற்போது வீட்டில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நடந்த ஒரு டாஸ்க்கின் போது, கெமி, பார்வதியின் கையில் இருந்த பக்கெட்டை பிடுங்கி, அதிலிருந்த தண்ணீரை முழுவதும் கீழே ஊற்றினார். இது இருவருக்கும் இடையே கடுமையான சண்டையாக மாறியது. ஆனால், இந்த மோதலுக்கு பிறகு வீட்டில் நடந்த சம்பவங்கள்தான் பார்வதியை பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளன.

சண்டை முடிவடைந்த பிறகு, கெமி குறைந்தபட்சம் வருத்தத்துடன் வந்து மன்னிப்பு கேட்பார் அல்லது இது குறித்து தன்னுடன் பேசுவார் என்று பார்வதி எதிர்பார்த்து கொண்டிருந்தார். ஆனால், கெமி அவரிடம் எந்தவித உரையாடலையும் தொடங்கவில்லை. அதைவிட அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், வீட்டில் உள்ள வேறு எந்த ஒரு போட்டியாளரும் அந்த சண்டை குறித்துப் பேசுவதையோ, பார்வதியிடம் ஆறுதல் சொல்வதையோ அல்லது கெமி செய்த செயலை கண்டிப்பதையோ பார்க்க முடியவில்லை.

இது பார்வதிக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. “எதுவுமே நடக்காத மாதிரி எப்படி இருக்கிறார்கள்? இப்படித்தான் இவர்களின் ஆட்டம் இருக்குமா?” என்று அவர் மற்ற போட்டியாளர்களிடம் புலம்ப ஆரம்பித்தார்.

இந்த நிலை குறித்துப் பார்வதி, சக போட்டியாளர்களான கமருதீன் மற்றும் கலையசன் ஆகியோரிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

ஆனால் பிக் பாஸ் கொடுக்கும் டாஸ்க் நடக்கும்போது போட்டியாளர்கள் சண்டையை தடுப்பது அரிது. ஆனால், பார்வதி யாராவது தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தது வீண் போனது.

பின்னர், கலையசனிடம் பேசும்போதும், “வீட்டில் ஒருவர் கூட இதை பற்றி பேசவில்லை. ஒருவேளை நான் கெம்மியிடம் இப்படி செய்திருந்தால், இவர்கள் எல்லாம் சும்மா இருந்திருப்பார்களா?” என்று தனது கோபத்தையும் வருத்தத்தையும் வெளிப்படுத்தி உள்ளார்.

இந்த நிலையில் தான், இன்றைய மூன்றாவது ப்ரோமோவில் பார்வதி திவாகரிடம் புலம்பும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த ப்ரோமோ வீடியோவில், “பண்றது எல்லாம் பண்ணிட்டு, தெளிவா தள்ளிவிட்டு, எனக்கு அடி எல்லாம் கொடுத்துட்டு இதை எப்படி செய்ய கெம்மிக்கு மனசு வந்தது?” என்று திவாகரிடம் பார்வதி புலம்பி தள்ளினார்.

“இதெல்லாம் செய்துவிட்டு, கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லாமல் என்னிடம் வந்து சாப்பாடு வேண்டுமா என்று கெமி கேட்கிறார். எப்படி அவருக்கு என்னிடம் பேச தோணுகிறது? எப்படி தான் இப்படி எல்லாம் இருக்க முடியுமோ என்று தெரியவில்லை. நான் பேசுவதெல்லாம் அவர் காதில் விழாதா?” என்று பார்வதி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

நேற்று இந்த சம்பவம் நடந்ததிலிருந்து கெம்மி, தன்னை பார்க்க வந்து வருத்தம் கூட தெரிவிக்கவில்லை என்று பார்வதி புலம்பி கொண்டிருந்த நிலையில், தற்போது நடந்த சம்பவத்தையே மறந்து, “சாப்பிட வாருங்கள்” என்று கெமி கூறியதை கிண்டல் செய்வதை பார்க்கும்போது , பார்வதியின் மனதில் தான் ஒரு குரோதம் இருப்பதாக எண்ணம் தோன்றுகிறது.