அமெரிக்காவை மட்டும் நம்ப வேண்டாம்.. உலக நாடுகளின் புதுப்புது ஒப்பந்தங்கள்.. அமைதியாய் நடக்கும் அரசியல் திருப்பம்.. இப்படியே போனால் அமெரிக்கா தனிமைப்படுத்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை..

பொருளாதார ரீதியாகவும், ராஜதந்திர ரீதியாகவும், உலக அரங்கில் ஒரு அமைதியான ஆனால் முக்கியமான திருப்பம் தற்போது அரங்கேறி வருகிறது. இதுவரை அமெரிக்கா ஒரு நம்பகமான, ஒரே சந்தையாக இருந்த நிலையில் தற்போது உலக நாடுகளுக்கு…

america

பொருளாதார ரீதியாகவும், ராஜதந்திர ரீதியாகவும், உலக அரங்கில் ஒரு அமைதியான ஆனால் முக்கியமான திருப்பம் தற்போது அரங்கேறி வருகிறது. இதுவரை அமெரிக்கா ஒரு நம்பகமான, ஒரே சந்தையாக இருந்த நிலையில் தற்போது உலக நாடுகளுக்கு அமெரிக்கா மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல உலக தலைவர்கள் இப்போது ஐரோப்பா மற்றும் அதற்கு அப்பால் புதிய வர்த்தக மற்றும் ராஜதந்திர வழிகளை தேட தொடங்கியுள்ளனர்.

ஒருகாலத்தில் அமெரிக்காவுடனான உறவில் மட்டும் அதிக கவனம் செலுத்திய உலக தலைவர்கள், தற்போது தங்கள் வர்த்தக பாதைகள், விநியோகச் சங்கிலிகள் மற்றும் தொழில்நுட்ப தரங்களுக்காக ஐரோப்பிய நாடுகளுடன் சந்திப்புகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

கனடா பிரதமர் கார்னியின் பயணத் திட்டம் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அவர் ஒரு ஐரோப்பியத் தலைவரை ஒட்டாவாவில் சந்தித்து பேசுகிறார். இது சாதாரண நிகழ்வாக தோன்றினாலும், அடுத்த சில மணிநேரங்களில், கனடாவின் பிரதிநிதிகள் லண்டன், ஐரோப்பிய கண்டத்தின் மற்ற தலைநகரங்கள் என பயணம் மேற்கொண்டு, எரிசக்தி, விநியோக சங்கிலி மற்றும் தொழில்நுட்ப தரங்கள் குறித்து தீவிரப் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இது ஒரு பெரும் திருப்பமாக பார்க்கப்படுகிறது.

பல நாடுகள் தங்கள் வெளியுறவு கொள்கையை மாற்றியமைக்க தள்ளிய ஒரே திருப்புமுனை என்னவென்றால், அமெரிக்கா அடுத்தடுத்த எடுத்த வரிவிதிப்பு முறை. தொழில்துறை பொருட்கள், லாரிகள், மற்றும் பிராண்டட் மருந்துகளுக்கான கட்டணங்கள் திடீரென வரிசையாக அதிகரிக்க தொடங்கியபோது, இது தனிப்பட்ட முடிவுகள் அல்ல, மாறாக ஒரு திட்டமிடப்பட்ட தொடர் நிகழ்வு என்று உணரப்படுகிறது. இந்தக் கட்டண முடிவுகளால், அமெரிக்கா மீது இருந்த நம்பிக்கை தகர்ந்தது.

இந்த திருப்பம், அமெரிக்காவைக் கைவிடுவதாக அர்த்தமல்ல, ஆனால் அமெரிக்காவை மட்டும் முழுமையாக நம்ப வேண்டாம், வேறு ஒரு ஆப்ஷனை கையில் வைத்து கொள்வது நல்லது என்ற பொருள்படுகிறது. காலப்போக்கில் அமெரிக்கா தனிமைப்படுத்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.