Bigg Boss angry on housemates : பிக் பாஸ் வீட்டில் பல போட்டியாளர்களும் இந்த சீசனில் எதற்கு உள்ளே வந்தோம், எதற்காக கேம் ஆடுகிறோம் என்பதே தெரியாமல் இருக்கும் சூழல் தான் இருந்து வருகிறது. இதற்காக நிறைய உதாரண சம்பவங்கள் அரங்கேறி வரும் சூழலில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தால் பிக் பாஸ் மிகப்பெரிய அளவில் கோபப்பட்டதுடன் மட்டுமில்லாமல் இந்த சீசனில் உள்ள போட்டியாளர்களை நினைத்து மனம் வருந்தியும் போயிருந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி என வந்து விட்டாலே அதற்குள் நுழையும் போட்டியாளர்கள் தாங்கள் வெளியே இருந்தது போல தான் உள்ளேயும் இருக்கும் என்று நினைக்காமல் எப்படிப்பட்ட கடினமான சூழல் வந்தாலும் அதை தைரியமாக எதிர்கொண்டு அதை கடந்து வர முயற்சி செய்ய வேண்டும். இது பிக் பாஸ் நிகழ்ச்சியில் எழுதப்படாத விதி என்ற சூழலில் தற்போதுள்ள பல போட்டியாளர்கள் அதில் சுத்தமாக விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதாகவே தெரிகிறது.
பொறுப்பே இல்ல
இந்த சீசனில் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு தண்ணீர் மிக குறைவாக சில விதிகளுக்குட்பட்டு தான் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இரவு நேரத்தில் தண்ணீர் வந்தால் அதை பிடித்து வைக்க கமருதீன் தண்ணீர் சூப்பர்வைசராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, இரவில் தண்ணீர் வர, பொறுப்பாக இருந்து அதை பிடித்து வைக்காமல், அறையில் சென்று தூங்கிப் போனார் கமருதீன். இதன் காரணமாக, சுமார் 50 லிட்டர் தண்ணீர் கிடைக்காமல் போக, கமருதீன் என்ற ஒருவரால் அனைத்து ஹவுஸ்மேட்ஸ்களும் அவதிப்பட்டனர்.
முந்தைய பிக் பாஸ் சீசன்களில் எல்லாம் இரவு நேரத்தில் நிறைய டாஸ்க்குகளை உறக்கம் பார்க்காமல் வெற்றிகரமாக பல போட்டியாளர்கள் முடித்துள்ளனர். ஆனால், கமருதீனின் இந்த செயல், பிக் பாஸையே நிலைகுலைய செய்து விட்டது.
ஒருத்தருக்கு கூடவா தோணல..
இது பற்றி அனைத்து போட்டியாளர்களையும் அழைத்து பேசிய பிக் பாஸ், “தண்ணீர் குறைந்து போனதற்கு காரணம் யார் என்பது நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. நான் என்னோட ஹவுஸ்மேட்ஸுக்காக அதிக நேரம் தண்ணீரை திறந்து விட்டிருந்தேன். ஆனால், தண்ணீர் சூப்பர்வைசருக்கோ (கமருதீன்), ஏன் இந்த வீட்டில் இருக்கிற எந்தவொரு ஹவுஸ்மேட்ஸுக்குமே தண்ணீர் குறைவாக உள்ளது என்ற கவலை கொஞ்சம் கூட இல்லாமல் போனது எனக்கு வருத்தம் தான். உங்களில் ஒருத்தர் கூடவா தண்ணீர் வேண்டும் என யோசிக்கவில்லை..
எத்தனை சீசன்களில் இரவு நேரம் டாஸ்க் நடந்துள்ளது. ஆனால் ஒரு தடவை கூட யாருமே அந்த டாஸ்கை விட்டுவிட்டு தூங்க போனதே இல்லை. இப்படி நடப்பது 9 வருடங்களில் இதுதான் முதல் முறை. போட்டி ஆரம்பித்து 4 நாட்கள் ஆகவில்லை, அதற்குள் தூக்கம். என்னென்னவோ சத்தியம் செய்து விட்டு தானே உள்ளே வந்தீர்கள். அதை பற்றி யோசிக்கமாட்டீர்களா. வீட்டுக்குள்ள வந்ததும் அனைத்தையும் மறந்து விடுவீர்களா?. அடுத்த டாஸ்க்கிற்கு தண்ணீர் வேண்டும். என்ன செய்ய போகிறீர்கள்.
என் ஹவுஸ்மேட்ஸ் தூங்கியதால் இன்று டாஸ்க் நடத்த முடியாது என மக்களிடம் சொல்ல முடியாது இல்லையா?” எனக்கூறி அடுத்த டாஸ்க்கிற்காக தண்ணீர் கொடுப்பதாகவும் கூறுகிறார் பிக் பாஸ். இனிமேலாவது விளையாட்டாக இல்லாமல் பொறுப்புணர்ந்து ஹவுஸ்மேட்ஸ் ஆட வேண்டும் என்பது தான் பார்வையாளர்களின் விருப்பமாகவும் உள்ளது.
நான் கடந்த 7 ஆண்டுகளாக பல வலைத்தளங்களில் கிரிக்கெட், சினிமா தொடர்பான செய்திகளை சுவாரஸ்யம் குறையாமல் வாசகர்கள் விரும்பும் வகையில் எழுதி வருகிறேன். இணையத்தில் இன்று ஏராளமான செய்திகள் சரியான விவரங்கள் இல்லாமல் வெளியாகி வரும் சூழலில் முடிந்த அளவுக்கு சிறந்த செய்திகளை கொடுப்பதற்கு நான் முன்னுரிமை கொடுத்து எழுதி வருகிறேன்.

