Bigg Boss 9 Tamil : தினமும் ஹவுஸ்மேட்ஸ் கூட சண்ட.. சுபிக்ஷா, கெமி விவகாரத்தில் செஞ்ச தவறு.. தனி ரூட் எடுக்கும் பார்வதி.. பிக் பாஸ் வீட்டில் எடுபடுமா?

VJ Parvathy fight with housemates : பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி சுமார் 4 நாட்களுக்கு பிறகு தான் சிறிதாக சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது என்றே சொல்ல வேண்டும். இத்தனை போட்டியாளர்கள்…

VJ Parvathy Game in Bigg Boss

VJ Parvathy fight with housemates : பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி சுமார் 4 நாட்களுக்கு பிறகு தான் சிறிதாக சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது என்றே சொல்ல வேண்டும். இத்தனை போட்டியாளர்கள் இருந்தும் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் கூட நிச்சயம் 4 முதல் 5 பெயர்களை சொல்லும் அளவுக்கு தான் போட்டியாளர்களின் திறன் இருந்து வருகிறது.

அது மட்டுமில்லாமல், பிக் பாஸ் போட்டியாளர்கள் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்த போதே ஒரு தொய்வு பார்வையாளர்களுக்கு ஏற்பட தொடங்கி விட்டது. அந்த அளவுக்கு போட்டியாளர்களை தேர்வு செய்த விதமும் பேசு பொருளாக மாறியிருக்க, கன்டென்ட்ளும் குறைவாக தான் உள்ளது. இப்படியாக இனி வரும் நாட்களில், பிக் பாஸே ஏதாவது டாஸ்கை வைத்து சூடேற்றினால் மட்டும் தான் ஹவுஸ் மேட்ஸ்களும் வேகம் எடுப்பார்கள் என தெரிகிறது.

ஆண் போட்டியாளர்களில் சபரி, விக்கல்ஸ் விக்ரம், திவாகர் உள்ளிட்டோர் மீது அதிக கவனம் இருக்க, பெண் போட்டியாளர்களில் ஆதிரை, அரோரா, பார்வதி உள்ளிட்டோர் பற்றியும் அடிக்கடி பார்வையாளர்கள் சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர். ஆனால், இதில் பார்வதி பற்றி இரு தரப்பிலான விமர்சனங்களும் அதிகமாக உள்ளது.

அந்த வகையில், கடந்த சில தினங்களாகவே பிக் பாஸ் வீட்டிற்குள் அவர் செய்து வரும் விஷயங்கள் அதிக பரரப்பை தான் ஏற்படுத்தி வருகிறது. சூப்பர் டீலக்ஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள், பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் மூலம் வேலைகளை செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், திவாகர் மற்றும் பார்வதி ஆகிய இருவரும் மற்றவர்கள் சொல்லும் வேலைகளை செய்து கொடுத்தனர்.

குழாயடி சண்டை

அந்த சமயத்தில், சுபிக்ஷா ஒரு வேலையை செய்யும் படி பார்வதியை அறிவுறுத்த, அதன் பெயரில் ருவருக்கும் இடையே மோதல் உருவானது. அப்போது சுபிக்ஷாவிடம், ‘இந்த நடிப்பை வேறு யாருகிட்டயாச்சும் காட்டுஎன பார்வதி கூற, பதிலுக்கு சுபிக்ஷாவும் ஒரு கட்டத்தில் மன்னிப்பு கேட்டிருந்தார். மன்னிப்பு கேட்டும் அதை பார்வதி ஏற்காமல் போக, சூப்பர் டீலக்ஸ் அணியினர் கொடுக்கும் வேலையை செய்யாமல் வெளியேறவும் செய்தார்.

பிக் பாஸ் விதிகளுக்கு புறம்பாக பார்வதியின் செயல்பாடு இருக்க, மற்ற அனைத்து ஹவுஸ்மேட்ஸ்ள் சொல்லியும் பார்வதி அதை கேட்க தயாராக இல்லை என தெரிகிறது. தான் பெரிய ஆள் என்பதை காட்டிக் கொள்வதாக மற்ற ஹவுஸ்மேட்ஸ்ள் பார்வதியை சொல்ல, அலட்டிக் கொள்ளாமலும் அவர் இருக்கிறார்.
VJ Parvathy BB 9 Tamil

இதே போல, தண்ணீர் பயன்படுத்தவும் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கட்டுப்பாடு இருக்க, அதன் பெயரிலும் பார்வதி மற்றும் கெமி ஆகிய இருவரும் கட்டிப்புரண்டு குழாயடி சண்டை போட்டனர். இதன் பின்னர், பார்வதி அழுது கொண்டே இருக்க, அவர் கெட்ட வார்த்தையையும் நடுவில் பேசி இருந்தார். சுபிக்ஷா, ரம்யாவை விஷம் என சொன்னது, கெமியை தப்பாக பேசியது என பார்வதியின் வார்த்தைகளும் விமர்சனத்தை சந்தித்து தான் வருகிறது.

பார்வதிக்கு ஆதரவு

ஒரு பக்கம் இந்த கேரக்டரை வைத்துக் கொண்டு பிக் பாஸ் வீட்டில் நீண்ட நாட்கள் எல்லாம் பார்வதி தாக்குப்பிடிக்க மாட்டார் என பலர் விமர்சித்தாலும் தவறோ, சரியோ அவரது செயல் பிக் பாஸை விறுவிறுப்பாக்குவதாகவும் அது அவரது கேம் பிளானாக கூட இருக்கலாம் என்றும் ஆதரவாக பலர் குறிப்பிட்டு வருகின்றனர்.