விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பம் முதல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், சற்று முன் வெளியான மூன்றாவது புரோமோவில் ஆதிரை மற்றும் கமருதீன் ஆவேசமாக வாக்குவாதம் செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
கே. பாலசந்தர் இயக்கிய ‘தண்ணீர் தண்ணீர்’ படத்தில் உள்ள காட்சிகளை விட, தண்ணீர் பிரச்சனை பிக் பாஸ் வீட்டிற்குள் தலைவிரித்து ஆடுகிறது. தண்ணீர் வரும்போது அதை பிடிக்கும் பொறுப்பாளர்களான சபரிநாதன் மற்றும் கமருதீன் ஆகிய இருவரும் தூங்கிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. பிக் பாஸ் இதை குறும்படம் போட்டு வெளிச்சத்திற்கு கொண்டு வந்த நிலையில், ஒட்டுமொத்த போட்டியாளர்களும் இருவரும் மீது குற்றம் சாட்டினர். அதன் தொடர்ச்சிதான் தற்போது மூன்றாவது வீடியோவாக வெளியாகி உள்ளது.
“நீங்கள் உங்கள் வேலையை சரியாகச் செய்யவில்லை. அதனால் நாங்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறோம்,” என்று ஆதிரை வாதிடுகிறார். “நானும் வேலையை பார்த்திருக்கிறேன், தண்ணீர் பிடித்து வைத்திருக்கிறேன்,” என்று கமருதீன் சொல்ல, “நான் பார்த்தவரைக்கும் நீங்கள் தண்ணீர் பிடிக்கவே இல்லை,” என்று ஆதிரை பதிலளிக்கிறார்.
அதற்கு கமருதீன், “வேலையே செய்யவில்லை என்று நீங்கள் சொல்ல முடியாது,” என்று சொல்ல, “விடிய விடிய நான் உட்கார்ந்திருந்தேன், நீங்கள் எங்கே இருந்தீர்கள்?” என்று ஆதிரை பதில் கேள்வி கேட்கிறார். “நீங்கள் விடிய விடிய உட்கார்ந்து இருக்கலாம்,” என கமருதீன் கேட்க, “நான் எதற்காக உட்கார வேண்டும்?” என்று ஆதிரை கூறுகிறார். “எங்கள் டீமில் உள்ளவர்கள் மாத்தி மாத்தி பார்த்து கொள்வார்கள், நீங்கள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை,” என்று கமருதீன் சொல்ல, அதற்கு ஆதிரை, “நான் சொல்லுவேன்! எனக்கு தண்ணீர் தேவை. அதனால் நான் கேள்வி கேட்பேன்,” என்று கூற, இருவரும் மாறி மாறி ஆவேசமாக பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இந்தச் சண்டையை இன்னொரு தண்ணீர் பொறுப்பாளரான சபரிநாதன் அமைதியுடன் பார்த்து கொண்டிருக்கும் காட்சிகளுடன் இன்றைய புரோமோ முடிவுக்கு வருகிறது. மொத்தத்தில், இன்றைய புரோமோவில் தண்ணீர் பிரச்சனைதான் இன்றைய பேச்சாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
தண்ணீர் பிடிக்க வேண்டிய பொறுப்பை கொடுத்தால் இருவரும் அந்த பொறுப்பை சரியாக செய்ய வேண்டும். அதில் தவறவிட்டுவிட்டு ஒட்டுமொத்த போட்டியாளர்களையும் சிக்கலுக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள். அந்த தவறை கூட ஒப்புக்கொள்ளாமல், கேள்வி கேட்பவரை பதிலுக்குப் பதில் கொடுத்து வருவதாக பார்வையாளர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். “கமருதீன் வெறும் பேச்சுதான் அதிகமாக பேசுகிறார், செயலில் ஒன்றுமில்லை,” என்றும், “ஆதிரையின் கேள்விகள் ஒவ்வொன்றும் சரிதான்” என்றும் கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.
https://x.com/vijaytelevision/status/1976219228807008457
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
