விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி முதல் நாளிலிருந்தே விறுவிறுப்பாக சண்டை சச்சரவுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இந்த சீசன் ஆரம்பம் முதலே சுறுசுறுப்பாக இருக்கிறது என்று ஒரு பக்கம் இருந்தாலும், போட்டியாளர்கள் சில சமயம் எரிச்சலை ஏற்படுத்துகிறார்கள் என்ற விமர்சனமும் இருந்து வருகிறது.
திவாகரின் தனக்குத்தானே புகழ்ந்து கொள்ளும் நிகழ்வு, பார்வதியின் சூழ்ச்சி, கனியின் பெருந்தன்மை, ஆதிரையின் புத்திசாலித்தனம், சுபிக்ஷாவின் பெண்ணியம் என ஒவ்வொருவரும் தங்களது தனித்திறமையைக் காட்டி வந்தாலும், மொத்தமாக இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தேர்வில் கவனம் செலுத்தி இருக்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சற்றுமுன் வெளியான ப்ரோமோவில், பிக் பாஸ் ஒரு குறும்படத்தை போட்டு சபரிநாதன் மற்றும் கம்ருதீன் செய்த தவறை சுட்டிக்காட்ட, உடனே சக போட்டியாளர்கள் இருவரையும் ரவுண்டுகட்டி அடிக்கிறார்கள்.
“எவ்வளவு தண்ணீர் இருக்கிறது என்பதை செக் செய்தீர்களா?” என்று பிக் பாஸ் கேட்க, “ஐம்பது லிட்டருக்கும் குறைவாகத்தான் இருக்கும்” என்று இருவரும் கூறுகின்றனர். தண்ணீரின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட இவர்கள் இருவரும் தண்ணீர் வரும் நேரத்தில் பிடிக்காமல் தூங்கி கொண்டிருந்ததாகக் குற்றம்சாட்டும் குறும்படம் ஒன்றை பிக் பாஸ் போட, சக போட்டியாளர்கள் கொதித்தெழுந்தனர்.
“பதவி வரும்போது அந்தப் பதவி கூடவே பொறுப்பும் வரவேண்டும்” என்று கனி மட்டுமே அமைதியாக அறிவுரை கூற, ஆதிரை, ரம்யா ஜோ உள்ளிட்டவர்கள் “டோட்டலாக இதற்கு நீங்கள் இரண்டு பேர் தான் பொறுப்பு” என்று கூற, இருவருமே அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தனர்.
மொத்தத்தில், பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு இந்த வாரம் தண்ணீர் இல்லாமல் இருக்கும் நிலையில், அவர்கள் எப்படி சமாளிக்க போகிறார்கள் என்பதுதான் பெரிய கேள்வியாக உள்ளது. சபரிநாதன் மற்றும் கம்ருதீன் செய்த தவறால் ஒட்டுமொத்த போட்டியாளர்களும் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட வேண்டிய நிலை இருப்பதால், அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
https://x.com/vijaytelevision/status/1976174060179431805
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
