அந்தந்த பருவத்தை சமாளிக்க தகுந்தாற்போல் உணவுப்பொருட்களை இயற்கை நமக்கு அளிக்கிறது. கோடையை சமாளிக்க எலுமிச்சை, வெள்ளரி, தர்பூசனி, மாம்பழம் என நமக்கு தருகிறது. அவற்றை சாப்பிட்டு வந்தாலே பனி, மழை, கோடை என எல்லா பருவத்தையும் சமாளிக்கலாம்..
தேவையான பொருட்கள்:
மாம்பழம் – 1
பால் – 1 கப்
கப் சர்க்கரை – 3-4 டேபிள் ஸ்பூன்
ஐஸ்கட்டி
செய்முறை: முதலில் மாம்பழத்தை கழுவி, தோலை சீவி, மாம்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட வேண்டும். பின்னர் அதில் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து, நன்கு அரைத்து கொள்ள வேண்டும். அதனை டம்ளரில் ஊற்றி ஐஸ் கட்டியை போட்டு பரிமாற வேண்டும். இப்போது சுவையான மாம்பழ ஜுஸ் ரெடி!!!
சர்க்கரைக்கு பதிலா நாட்டு சர்க்கரை, தேன் சேர்க்கலாம்.