ஜெர்மனி, ஜப்பான், சீனாவை விட அமெரிக்கா தான் பெஸ்ட்.. எல்லோரும் ஏன் அமெரிக்க கனவு காண்கிறார்கள்? ஜெர்மனி கனவு, சீன கனவு, ஜப்பான் கனவு காண்பதில்லை என்பது ஏன்? இந்த ஒரே ஒரு காரணம் தான்.. விவேக் ராமசாமியின் பார்வையில் அமெரிக்கா..!

நீங்கள் ஜெர்மனிக்கு குடிபெயரலாம், ஆனால் ஒருபோதும் ஜெர்மானியராக முடியாது. நீங்கள் ஜப்பானில் வாழலாம், ஆனால் ஜப்பானியராக இருக்க முடியாது. ஆனால், உலகில் எங்கிருந்து வந்தாலும், அமெரிக்க கொடியில் பொறிக்கப்பட்டிருக்கும் இலட்சியங்களுக்கு நீங்கள் விசுவாசம் அளித்து,…

america

நீங்கள் ஜெர்மனிக்கு குடிபெயரலாம், ஆனால் ஒருபோதும் ஜெர்மானியராக முடியாது. நீங்கள் ஜப்பானில் வாழலாம், ஆனால் ஜப்பானியராக இருக்க முடியாது. ஆனால், உலகில் எங்கிருந்து வந்தாலும், அமெரிக்க கொடியில் பொறிக்கப்பட்டிருக்கும் இலட்சியங்களுக்கு நீங்கள் விசுவாசம் அளித்து, கடினமாக உழைத்து, விதிகளை பின்பற்றி, பங்களிப்பை செலுத்தினால், நீங்கள் அமெரிக்கராக முடியும் என்று இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார். அமெரிக்கா குறித்து அவர் மேலும் கூறியதாவது:

இந்த கருத்து வேறு எந்த நாட்டிலும் இல்லாத ஒன்று. இதனால்தான் ‘அமெரிக்கக் கனவு’ என்ற ஒன்று இருக்கிறது. ‘கனடியக் கனவு’ என்றோ, ‘பிரிட்டிஷ் கனவு’ என்றோ, ‘சீன கனவு’ என்றோ ஒன்று இல்லை. அமெரிக்க கனவு தனித்துவமானது; இதுவே அமெரிக்காவின் தனிச்சிறப்புக்கு காரணமாகிறது.

அமெரிக்கா என்பது உங்கள் இனம், பாலினம், மதம் எதுவாக இருந்தாலும், நாட்டின் கொள்கை கோட்பாட்டை ஏற்றுக்கொண்டு, அதன்படி வாழும் வரை நீங்கள் குடிமகனாக இருக்க முடியும் என்ற இலட்சியத்தில் கட்டப்பட்ட தேசம் ஆகும். உங்களின் மரபணுக்கள் அல்ல, உங்களின் திறமை மற்றும் பங்களிப்புகளின் அடிப்படையில் மட்டுமே நீங்கள் மதிப்பிடப்படுவீர்கள். ‘உங்களின் தோல் நிறத்தை கொண்டு அல்லாமல், உங்களின் குணாம்சத்தை கொண்டே நீங்கள் தீர்மானிக்கப்படுவீர்கள்’ என்ற கொள்கையை அமெரிக்கா நம்புகிறது.

சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் குடியேறியவர்களின் பெருமைமிக்க மகனாக இதை நான் சொல்கிறேன். இந்த நாட்டிற்குள் நுழைவதற்கு நீங்கள் செய்யும் முதல் செயல் சட்டத்தை மீறுவதாக இருக்கக்கூடாது என்று விவேக் ராமசாமி மேலும் கூறினார்.

தணிக்கை இன்றி, வெளிப்படையான விவாதம் மற்றும் பேச்சு சுதந்திரத்தை நாங்கள் நம்புகிறோம். வார்த்தைகள் வன்முறை அல்ல; வன்முறைதான் வன்முறை. வார்த்தைகளுக்கு எதிரான ஏற்றுக்கொள்ளக்கூடிய பதில் வன்முறையாக இருக்கவே கூடாது. நாங்கள் பொறுப்புணர்வு கொண்டவர்கள், துணிச்சல் மிக்கவர்கள், நாட்டுக்கு சேவை செய்யும்போது வீரமிக்கவர்கள். நாங்கள் துணிச்சலான அபாயங்களை எடுப்போம். தோல்வியுற்றாலும், மீண்டும் எழுந்து நிற்போம்.

கல்லூரி பட்டதாரிகள் கடனுடன் வேலை தேட வேண்டியிருப்பதாலும், கடினமாக உழைத்தும் இளைஞர்கள் சொந்த வீடு வாங்குவது எட்டாக்கனியாக இருப்பதாலும், பலருக்கு அமெரிக்க கனவு இன்று ஒரு மாயை போலவே தோன்றலாம். இந்த கசப்பான சூழலை புரிந்துகொள்கிறேன். பொருளாதார வெற்றிக்கான பாதையை மீண்டும் உங்களுக்கு அமைத்து தர வேண்டிய பொறுப்பு குடியரசு கட்சியான எங்களுக்கு உள்ளது. அதில் நாங்கள் தோல்வியடைந்தால், எங்களை குறை சொல்வதற்கு யாருமில்லை.

ஆனால், இளைஞர்களே! நீங்கள் விரக்தி அடையாதீர்கள். இந்த பூமிப்பந்தில் நமக்குள்ளேயே இருக்கும் கடைசி மற்றும் சிறந்த நம்பிக்கை அமெரிக்கா தான். உங்கள் கனவுகளை துரத்தவும், உங்கள் மனதிலுள்ளதை பேசவும், கடினமாக உழைத்துச் சிறப்பான வாழ்வைப் பெறவும் வாய்ப்பளிக்கும் இடம் இதுதான்.

நாங்கள் குறைகளற்ற தேசமா? நிச்சயம் இல்லை. ஏனென்றால் நாங்கள் மனிதர்களால் ஆன தேசம், கடவுள்களால் அல்ல. ஆனால், எந்த இலட்சியங்களும் இல்லாத ஒரு நாட்டில் வாழ்வதைவிட, இலட்சியங்கள் இருந்து, அதை அடைவதில் தடுமாறும் ஒரு நாட்டில் வாழவே நான் விரும்புவேன். இனி நாம் செயல்படத் தொடங்க வேண்டும். ஒரு புதிய அமெரிக்க கனவை மீண்டும் உருவாக்க வேண்டும்:

குழு அடையாளம், பாதிக்கப்பட்ட மனப்பான்மை ஆகியவற்றுக்கு மேலாக இந்த அழியாத அமெரிக்க கனவை நாம் மீட்டெடுத்தால், உலகில் எந்த நாடோ, நிறுவனமோ, நோய்த்தொற்றோ, பள்ளி துப்பாக்கி சூட்டாளரோ நம்மை தோற்கடிக்க முடியாது. இதுதான் அமெரிக்காவின் தனிச்சிறப்பு. இவ்வாறு விவேக் ராமசாமி பேசியுள்ளார்.