குழந்தைகள், கர்ப்பிணிகள், வளர் இளம் பெண்கள் என் இம்மூவரும் இவர்கள்லாம் எளிதில் இரும்புச்சத்து பற்றாக்குறை நோய்க்கு ஆளாவர்கள். கீரைகள், பழங்கள், சத்தான உணவுகள் என எடுத்துக்கொண்டால் இப்பாதிப்பிலிருந்து மீளலாம். கர்ப்பிணி பெண்களும், வளர் இளம்பெண்களும் கீரைகள், பழங்களை சாப்பிட வைக்க முடியும். ஆனால் குழந்தைகளை சாப்பிட வைக்கை முடியாது. அவர்களுக்கு தினமும் டிரை ஃப்ரூட்ஸ் கொடுக்க வேண்டும். அதையுமே குழந்தைகள் சாப்பிட அடம்பிடிப்பர். அதனால், அப்பேற்பட்ட குழந்தைகளுக்கு ட்ரை ஃப்ரூட்ஸ் மில்க்ஷேக் செஞ்சு கொடுக்கலாம். மிகவும் சத்து நிறைந்த ட்ரை ஃப்ரூட் மில்க் ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம் – 15,
அத்திப்பழம் – 6
பால் – 2 கப்
பாதாம் – 10,
முந்திரி – 10,
அக்ரூட் – 3 டேபிள் ஸ்பூன்,
தேன் – 1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை :
கால் கப் கொதிக்கும் நீரில் பாதாமை ஐந்து நிமிடம் போட்டு எடுத்து, தோலை நீக்கிக்கொள்ளுங்கள். பாலை நன்கு காய்ச்சி இறக்கிவிட்டு, சூடாக இருக்கும்போதே அதில் பேரீச்சம்பழம், பாதாம், அத்திப்பழம், முந்திரி, அக்ரூட் ஆகியவற்றை ஊறவிடுங்கள். அவை நன்கு ஊறியதும் (பால் ஆறியதும்), தேன் சேர்த்து மிக்ஸியில் நன்கு அடித்து, குளிரவைத்துக் குழந்தைகளுக்கு கொடுங்கள். பாதாம், பிஸ்தா, குங்குமப்பூ கொண்டு அலங்கரித்தும் கொடுக்கலாம்.
சத்தான டிரை ஃப்ரூட் மில்க் ஷேக் ரெடி.
இந்த மில்க் ஷேக்கில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. குழந்தைகளுக்கு கூர்ந்து கவனிக்கும் திறனையும், நினைவு திறனையும் இது அதிகப்படுத்துகிறது