Bigg Boss 09 Tamil Praveen Gandhi Controversy : சர்ச்சைகளுக்கும், சச்சரவுகளுக்கும் பெயர் போன பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9 வது சீசன் தற்போது ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில், போட்டியாளர்கள் மீதே பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் தான் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். ஒரு சில போட்டியாளர்கள் பட்டையை கிளப்ப போகிறார்கள் என தெரிந்தாலும் பெரும்பாலான போட்டியாளர்கள் அமைதியாகவே இருப்பது தான் பார்வையாளர்களின் சோதனைக்கும் காரணமாக இருந்து வருகிறது.
பிக் பாஸின் டாஸ்க் உள்ளிட்ட விஷயங்களும் வித்தியாசமாக இருக்கும் பட்சத்தில் தான் விறுவிறுப்பும் அதிகம் உருவாகி போட்டியாளர்கள் இடையே ஒரு ஆக்ரோஷம் உருவாகவும் வாய்ப்புகள் அமையலாம். சண்டைகள் இல்லை என்றாலும் நிறைய வேடிக்கையான, கலகலப்பான சம்பவங்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்த வண்ணம் தான் உள்ளது. சமூக வலைத்தளங்களில் வேடிக்கையாக வீடியோக்கள் வெளியிட்டு தன்னை ஒரு பெரிய நடிகராக காண்பித்து கொண்ட வாட்டர்மெலான் ஸ்டார் திவாகர், பிக் பாஸ் வீட்டிற்குள்ளேயும் அதையே தான் செய்து கொண்டிருக்கிறார்.
திவாகரால் எரிச்சல்
மாஸ்டர் படத்தில் வரும் விஜய் சேதுபதி போல, கஜினியில் வரும் சூர்யாவை போல என திவாகர் அதையே திரும்ப திரும்ப செய்து கொண்டிருக்கும் நிலையில், ஒரு கட்டத்திற்கு மேல் பார்வையாளர்களுக்கும், உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு எரிச்சல் தான் வருகிறது. இவரை பல போட்டியாளர்களும் நாமினேட் செய்திருக்க, முதல் ஆளாக எலிமினேட் ஆவாரா அல்லது தொடர்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இவருக்கு அடுத்தபடியாக, இயக்குனர் பிரவீன் காந்தி பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போது இவரால் தாக்குப்பிடிக்க முடியுமா என்று தான் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், திவாகரை எதிர்கொண்டது, இளம் போட்டியாளர்களிடமும் கலகலப்பாக நிறைய விஷயங்கள் பகிர்ந்து கொள்வது என ஓரளவுக்கு சிறப்பான கேமை தான் அவர் ஆடி வருகிறார்.
பெண்களை பத்தி இப்டி பேசலாமா?
இதற்கிடையே தான் பெண்களை பற்றி பிரவீன் காந்தி பேசிய விஷயம், தற்போது பார்வையாளர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. ரம்யா ஜோ, விக்கல்ஸ் விக்ரம், துஷார் ஆகியோருடன் பேசும் பிரவீன் காந்தி, பெண்களின் குணம் பொதுவாக எப்படி இருக்குமென பேசிக் கொண்டிருக்கிறார். “பெண்களை பொருத்தவரையில் இன்னொரு அழகான பெண் வந்துவிட்டால் அவர்களால் தாங்க முடியாது. ரொம்ப பொசசிவாக இருப்பதுடன் அவர்கள் எண்ணம் முழுக்க அங்கே போய் விடும்.

அவரை விட நாம் அழகாக என்ன செய்யலாம் என நினைத்து தங்களின் Attitude ல் அதிக கவனம் செலுத்துவார்கள். ட்ரெஸ்ஸிங் உள்ளிட்ட நிறைய விஷயங்களில் மெனக்கெடுவார்கள். அது இறைவனுடைய படைப்பு. பெண்களை படைக்கும் போது இரண்டு விஷயங்களை அவர்களுக்கு கொடுத்து விட்டார். ஒன்று பொறாமை, இன்னொன்று பேராசை” என பெண்களின் குணம் பற்றி பிரவீன் காந்தி பேசியதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். நிச்சயம் விஜய் சேதுபதி வார இறுதி நாட்களில் இதுபற்றி கேள்வி கேட்க வேண்டும் என்பதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நான் கடந்த 7 ஆண்டுகளாக பல வலைத்தளங்களில் கிரிக்கெட், சினிமா தொடர்பான செய்திகளை சுவாரஸ்யம் குறையாமல் வாசகர்கள் விரும்பும் வகையில் எழுதி வருகிறேன். இணையத்தில் இன்று ஏராளமான செய்திகள் சரியான விவரங்கள் இல்லாமல் வெளியாகி வரும் சூழலில் முடிந்த அளவுக்கு சிறந்த செய்திகளை கொடுப்பதற்கு நான் முன்னுரிமை கொடுத்து எழுதி வருகிறேன்.

