அமெரிக்காவின் கடன் மட்டும் ரூ.3,282,375,450,000,000? இது எவ்வளவு என்று நிதானமாக கூட்டி பாருங்கள்.. கடனை குறைக்க டிரம்ப் எடுக்க போகும் அதிரடி நடவடிக்கைகள்.. அமெரிக்க மக்கள் தலையில் விழும் சுமை.. அமெரிக்காவின் எதிர்காலம் என்ன ஆகும்?

அமெரிக்காவுக்கு $37 ட்ரில்லியன் அதாவது இந்திய மதிப்பில் ரூ.3,282,375,450,000,000 ( ரூ.3282.38 லட்சம் கோடி) கடன் இருப்பதாக கூறப்படும் நிலையில் அந்த கடனை குறைக்க டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசு ஒரு விசித்திரமான வியூகத்தை…

debt

அமெரிக்காவுக்கு $37 ட்ரில்லியன் அதாவது இந்திய மதிப்பில் ரூ.3,282,375,450,000,000 ( ரூ.3282.38 லட்சம் கோடி) கடன் இருப்பதாக கூறப்படும் நிலையில் அந்த கடனை குறைக்க டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசு ஒரு விசித்திரமான வியூகத்தை பயன்படுத்துவதாக தோன்றுகிறது. இந்த வியூகம், அமெரிக்காவின் அதிகரித்துவரும் வட்டி சுமையின் பின்னணியில் பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் தற்போதைய நிதி நிலைமை, ‘ஃபெர்குசன் விதியைப்’ பின்வருமாறு மீறியுள்ளது:

வட்டிச் சுமை > பாதுகாப்பு பட்ஜெட்: தேசியக் கடனுக்கான வட்டி செலுத்தும் தொகை (சுமார் $1 ட்ரில்லியன்) தற்போது அமெரிக்காவின் பாதுகாப்பு பட்ஜெட்டை ($800 பில்லியன்) விஞ்சியுள்ளது.

விதி மீறல்: ஒரு நாட்டின் கடனுக்கான வட்டி செலுத்தும் தொகை அதன் பாதுகாப்பு பட்ஜெட்டை தாண்டினால், அது இனி ஒரு சூப்பர் பவராக தொடர முடியாது என்பதற்கான தெளிவான அறிகுறியாகும்.

ட்ரம்பின் சமீபத்திய நடவடிக்கைகள் இந்த நிதி நெருக்கடியை சமாளிக்கும் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக, அவர் உலகெங்கிலும் உள்ள அமெரிக்க படைகளின் தளங்களில் இருந்து 800 ஜெனரல்களை திரும்ப அழைத்திருப்பது, உலகளாவிய இராணுவ கட்டுப்பாடுகளை குறைக்க வேண்டிய அழுத்தத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அமெரிக்கா தனது $37 ட்ரில்லியன் கடனை நீக்க இரண்டு முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக நம்பப்படுகிறது. ஒன்று தங்க இருப்பை மறுமதிப்பீடு செய்தல். அமெரிக்காவிட்ம் சுமார் 8,000 மெட்ரிக் டன் தங்கம் இருப்பதாக கூறப்படுகிறது. நீண்ட காலமாக ஒரு அவுன்ஸுக்கு வெறும் $40 என மிக குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது. தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு $3,855 என்ற தற்போதைய சந்தை மதிப்பில் அல்லது அதற்கும் அதிகமாக மதிப்பிடப்பட்டால், சுமார் $10 ட்ரில்லியன் டாலர் கடனை குறைக்க முடியும். அதாவது, மொத்த கடன் $37 ட்ரில்லியனில் இருந்து $27 ட்ரில்லியனாக குறையும்.

அமெரிக்க மத்திய வங்கி தலைவர் வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என்று ட்ரம்ப் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார். வட்டி விகிதம் குறைவதன் மூலம், $37 ட்ரில்லியன் கடனுக்கான வட்டி செலுத்தும் தொகை கணிசமாக குறையும். வட்டி விகிதத்தை 0.25% குறைத்தது போதாது என்றும், ஒட்டுமொத்த வட்டி விகிதத்தை 2.7% முதல் 3% வரை கொண்டு வர வேண்டும் என்றும் ட்ரம்ப் விரும்புகிறார். அக்டோபர் மற்றும் நவம்பரில் மேலும் 0.5% குறைப்பு நிகழலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடனை குறைக்க அமெரிக்கா மற்ற நாடுகளிடம் இருந்தும் முதலீடுகளை பெறுகிறது. சவுதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய மூன்று நாடுகளிடமிருந்து சுமார் $2 ட்ரில்லியன் முதலீடு எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பானிடம் இருந்து $500 பில்லியன், ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து $500 பில்லியன், TSMC-இடம் இருந்து $165 பில்லியன் மற்றும் வரிகள் மூலம் $200 பில்லியன் என திரட்ட முயற்சி செய்யப்படுகிறது. இந்த முயற்சிகள் மூலம் கடனை $23 ட்ரில்லியன் ஆக குறைக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் இந்த நகர்வுகளுக்கு பின்னால், டாலரின் உலகளாவிய நிலை மற்றும் டிஜிட்டல் நாணயங்களின் ஆதிக்கம் தொடர்பான ஒரு பெரிய திட்டம் இருக்கலாம். அமெரிக்கா அச்சிடும் $100 டாலர் நோட்டுகளில் 59% வெளிநாடுகளில்தான் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்காவுக்கு வெளியே புழங்கும் டாலரின் மதிப்பு சுமார் $2.41 ட்ரில்லியன் ஆகும். அமெரிக்காவுக்கு உள்ளே புழங்கும் டாலரை மட்டும் தங்கத்துடன் பிணைக்க முடியும் என்று அறிவிக்கலாம்.

மொத்தத்தில் அமெரிக்கா கடனை குறைக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தாலும், அந்த நடவடிக்கை உள்ளூர் மக்களுக்கு பெரும் சுமையாகவே இருக்கும் என்றும், அது டிரம்புக்கு மேலும் அழுத்தத்தை கொடுக்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.