உனது சந்தை மட்டுமே சந்தை அல்ல. உனது அதிகாரம் முழுமையானது அல்ல. எங்களிடம் மாற்று வழிகள் உள்ளன. அமெரிக்காவுக்கு பாடம் புகட்டிய இந்தியா.. 50% வரி என்ன இனிமேல் 100% வரி போட்டாலும் இந்தியாவை பாதிக்காது.. இந்தியாடா..

‘மேக் இன் இந்தியா’ கொள்கையின் கீழ், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தியை தொடங்க பிரதமர் மோடி அழைப்பு விடுத்து வந்த நிலையில், இப்போது ஒரு பரபரப்பான திருப்பம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய்…

india vs america

‘மேக் இன் இந்தியா’ கொள்கையின் கீழ், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தியை தொடங்க பிரதமர் மோடி அழைப்பு விடுத்து வந்த நிலையில், இப்போது ஒரு பரபரப்பான திருப்பம் ஏற்பட்டுள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. அதனால் இந்தியா மீது கூடுதலாக 25% வரி விதிக்கப்படும். மொத்த வரி விதிப்பு இனி 50% ஆக இருக்கும்,” என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். ஊடகங்கள் இதை ‘வர்த்தகப் போர் என்று கூறுகின்றன. ஆனால், இது ஒரு பொருளாதாரப் போர்! உலக வல்லரசு தனது அதிகாரத்தை தவறாக கணக்கிட்டு ஆடிய ஆட்டம் இது. இந்த அராஜகத்திற்கு எதிராக இந்தியா கொடுத்துள்ள பதிலடி, ஒரு புரட்சிக்கு சமமானது என்று கூறப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் டிரம்ப் நிர்வாகம், இந்தியாவின் இறையாண்மைக்கு சவால் விடும் வகையில், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் ஆயுதங்கள் இறக்குமதி செய்வதை தடுக்க, இந்தியாவை தண்டிக்கத் தீர்மானித்தது. பெரும்பாலான இந்திய பொருட்களின் மீது 50% கடுமையான வரி விதித்தது. இது $48 பில்லியனுக்கும் அதிகமான இந்திய ஏற்றுமதியை நேரடியாக தாக்கியது. துணிகள், ரத்தினங்கள், தோல் பொருட்கள் போன்ற மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை நம்பியிருந்த துறைகளை இது குறிவைத்தது.

அமெரிக்காவின் நோக்கம் தெளிவாக இருந்தது, அது பொருளாதார மிரட்டல் “நாங்கள் சொல்வதைக் கேள், அல்லது உன் தொழிலாளர்களை பட்டினி போடுவோம்” என்பதே வாஷிங்டன் அனுப்பிய செய்தி.

இந்த ஆணவத்தின் விலையை செலுத்துவது டெல்லியிலோ வாஷிங்டனிலோ உள்ள அரசியல்வாதிகள் அல்ல, சாமானிய மக்கள்தான். ஜவுளி தொழில் இந்தியாவின் பொருளாதாரத்தில் முக்கிய தூணாக உள்ளது; இது 45 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு வேலை வழங்குகிறது.

பஞ்சாபில் உள்ள லூதியானா நகரம் இந்தியாவின் ஜவுளி துறையின் இதயமாகும். அமெரிக்க ஆர்டர்கள் ஒரே இரவில் ரத்தானதால், அங்குள்ள நிறுவனங்கள் உற்பத்தி குறைப்பு பற்றியும், 5 லட்சம் வேலைகள் ஆபத்தில் இருப்பதை பற்றியும் பேச ஆரம்பித்தன. ஒரு அமெரிக்க கையெழுத்து, இந்தியாவில் உள்ள இலட்சக்கணக்கான குடும்பங்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியது. இந்த 50% வரி, இந்தியாவின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய தொழிலாளர்களின் மீது தொடுக்கப்பட்ட ஒரு பொருளாதார போர் ஆகும்.

இந்தியா மண்டியிடும் என்று அமெரிக்கா தவறுதலாக கணக்கிட்டது. ஆனால், இந்தியா பீதி அடையவில்லை. கையேந்தி நிற்கவில்லை. பதிலாக, அது மிகவும் சக்திவாய்ந்த ஒரு செயலை செய்தது: அது மேற்கு நாடுகளை பார்க்காமல் தெற்கு மற்றும் கிழக்கு நாடுகளை நோக்கி திரும்பியது.

பிரதமர் மோடி அரசு, ஏற்றுமதியை பல்வகைப்படுத்தும் உத்தியை உடனடியாக செயல்படுத்தியது. இதில் முக்கிய நகர்வு, பிரிக்ஸ் கூட்டாளியான பிரேசிலை நோக்கிய நகர்வுதான். டிரம்ப் தனது வரித் தாக்குதலில் பிரேசிலையும் இணைத்ததால், இரு நாடுகளுக்கும் பொதுவான ஒரு எதிரியும், பொதுவான ஒரு நோக்கமும் உருவானது.

இந்தியாவின் முடிக்கப்பட்ட ஆடைகள், துணிகள் பிரேசிலுக்கு தேவை. பிரேசிலிடம் தரமான கச்சாப் பருத்தி அபரிமிதமாக உள்ளது, இது இந்திய ஆலைகளுக்குத் தேவை. வரிவிதிப்பு அமலான 2025 முதல் காலாண்டில், இந்திய ஆடைகளின் ஏற்றுமதி பிரேசிலுக்கு 31% அதிகரித்தது. அதே சமயம், பிரேசிலிய கச்சாப் பருத்தி இறக்குமதி 25% அதிகரித்தது.

இந்தியா பிரேசிலுடன் ஏற்படுத்திய இந்த வர்த்தக சுழற்சி, அமெரிக்காவின் அரசியல் ஆணவங்களை தணிக்க காத்திருக்காமல், தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு மூலம் உருவான ஒரு இணை சப்ளை சங்கிலியாகும். இந்தியா, “உனது சந்தை மட்டுமே சந்தை அல்ல. உனது அதிகாரம் முழுமையானது அல்ல. எங்களிடம் மாற்று வழிகள், கூட்டாளிகள், சுயமரியாதை உள்ளது” என்ற செய்தியை அமெரிக்காவுக்கு மட்டுமின்றி உலகிற்கும் உணர்த்தியுள்ளது.

இந்த 31% வளர்ச்சி என்பது வெறும் வர்த்தக எண்ணிக்கை அல்ல; இது மற்ற வளரும் நாடுகளுக்கான ஒரு பச்சை விளக்கு. ஒரு சில மில்லியன் டாலர்களை பற்றியது அல்ல இந்த விவகாரம். இது உலக அதிகார சமநிலை மாறிவிட்டது என்பதற்கான ஆரம்ப அறிகுறி. டிரம்ப் நிர்வாகத்தின் ஆணவமே, உலகை டாலர் ஆதிக்கத்தில் இருந்து விடுபட துரிதப்படுத்தியுள்ளது. தன் நண்பரை தண்டிப்பதன் மூலம், டிரம்ப், இந்தியாவின் இறையாண்மைக்கான போராட்டத்தை வெற்றியடைய செய்துள்ளார் என்றே சர்வதேச பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.