’அரட்டை’க்கு ஆதரவு கொடுத்த ஆனந்த் மஹிந்திரா.. இதைவிட வேறு என்ன வேண்டும்? இனி அந்நிய செயலிகளை புறக்கணிப்போம்.. இந்திய செயலிகளுக்கு ஆதரவு கொடுப்போம்.. ‘மேக் இன் இந்தியா’.. சுதேசி இந்தியா..

வாட்ஸ்அப்பிற்கு போட்டியாக வந்த சோஹோ நிறுவனத்தின் உடனடி மெசேஜிங் செயலியான ‘அரட்டை’ , தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் இந்த செயலியை பெருமையுடன் டவுன்லோடு செய்ததாக X சமூக ஊடகத்தில் பதிவிட்டிருப்பது,…

arattai1

வாட்ஸ்அப்பிற்கு போட்டியாக வந்த சோஹோ நிறுவனத்தின் உடனடி மெசேஜிங் செயலியான ‘அரட்டை’ , தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் இந்த செயலியை பெருமையுடன் டவுன்லோடு செய்ததாக X சமூக ஊடகத்தில் பதிவிட்டிருப்பது, இந்த செயலிக்கு கிடைத்த பெரிய அங்கீகாரமாக கருதப்படுகிறது.

ஸ்ரீதர் வேம்பு தனது அனுபவத்தை பகிர்ந்து, “நான் எங்கள் தென்காசி அலுவலகத்தில் அரட்டை இன்ஜினியர்களுடன் ஒரு கூட்டத்தில் இருந்தபோது, செயலியை செம்மைப்படுத்துவது குறித்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போது, குழு உறுப்பினர் ஒருவர் இந்த ட்வீட்டை காட்டினார். ஆனந்த் மஹிந்திரா, உங்களுக்கு நன்றி, இது எங்களுக்கு மேலும் அதிக உறுதியை கொடுக்கிறது,” என்று பதிவிட்டார்.

ஸ்ரீதர் வேம்புவின் இந்தப்பதிவுக்குப் பதிலளித்த மஹிந்திரா, “நாங்கள் உங்களுக்கு உற்சாகமூட்டுகிறோம், ஸ்ரீதர் வேம்பு,” என்று பதிலளித்து தனது ஆதரவை உறுதிப்படுத்தினார்.

ஆனந்த் மஹிந்திராவின் இந்த பதிவுக்கு பல சமூக ஊடக பயனர்கள் கருத்து தெரிவித்தனர். ஒரு பயனர் அரட்டையின் மூன்று முக்கிய அம்சங்களாக, சிக்னல்-நிலை எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன், மறையும் மெசேஜ்கள் மற்றும் ஸ்கிரீன்ஷாட்களை தடுப்பது ஆகியவற்றை செய்யுமாறு பரிந்துரைத்தார்.

இதற்கு பதிலளித்த ஸ்ரீதர் வேம்பு, “எங்கள் முக்கிய கவனம் தனியுரிமை மீதுதான். தனியுரிமையை ஆபத்தில் ஆழ்த்தும் எந்தவொரு வணிக மாதிரியையும் நாங்கள் பின்பற்ற மாட்டோம்,” என்று உறுதியளித்தார்.

மற்றொரு பயனர், சமூக ஊடக வணிகம் மிகவும் கடுமையானது என்றும், வாடிக்கையாளர்களை தக்கவைக்க அமேசான் போன்ற நிறுவனங்கள் எந்த எல்லைக்கும் செல்லலாம் என்றும் எச்சரித்தார். அதற்கு ஸ்ரீதர் வேம்பு நன்றி தெரிவித்தார்.

“ஒரு தொழில்முனைவோர் மற்றவருக்கு ஆதரவளிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். இது எங்களுக்கு ஒரு உத்வேகம் அளிக்கும் காரணி,” என்றும் ஒரு பயனர் கருத்து தெரிவித்தார்.

இன்னொரு பயனர், “அரட்டையை ஓப்பன் சோர்ஸாக மாற்றுவது பற்றி யோசிக்கிறீர்களா? அதன் வளர்ச்சிக்குப் பங்களிக்க நான் விரும்புகிறேன்,” என்று கேட்டார்.

சோஹோ நிறுவனத்தின் அரட்டை செயலிக்கு பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா அளித்துள்ள இந்த தொடர் ஆதரவு, உள்நாட்டு தொழில்நுட்ப முயற்சிகளுக்கு கிடைத்த முக்கிய ஊக்கமாக பார்க்கப்படுகிறது.