ஒரே நாளில் 20 லட்சம் புதிய பயனர்கள்: ஸ்ரீதர் வேம்புவின் ‘அரட்டை’ செயலி புதிய உச்சம்! வாட்ஸ் அப் செயலிக்கு மாற்று வந்துருச்சு.. இந்தியர்கள் இந்திய செயலியை பயன்படுத்துங்கள்..!

இந்தியாவில் உருவாக்கப்பட்ட மெசேஜிங் செயலியான ‘அரட்டை’ நேற்று ஒரே நாளில் 20 லட்சத்திற்கும் அதிகமான புதிய பயனர்களை பெற்றுச் சாதனை படைத்துள்ளது என ஸ்ரீதர் வேம்பு தனது சமூக வலைத்தள பக்கத்தில் பெருமையுடன் பதிவு…

arattai

இந்தியாவில் உருவாக்கப்பட்ட மெசேஜிங் செயலியான ‘அரட்டை’ நேற்று ஒரே நாளில் 20 லட்சத்திற்கும் அதிகமான புதிய பயனர்களை பெற்றுச் சாதனை படைத்துள்ளது என ஸ்ரீதர் வேம்பு தனது சமூக வலைத்தள பக்கத்தில் பெருமையுடன் பதிவு செய்துள்ளார். பயனர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்ததால் இன்னும் சில அப்டேட்டுக்களை செய்யவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சோஹோ மற்றும் அரட்டை செயலியின் நிறுவனரான ஸ்ரீதர் வேம்பு, நேற்று தனது ‘எக்ஸ்’ சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “நாங்கள் தற்போது எங்கள் உள்கட்டமைப்பை மிக வேகமாக மேம்படுத்தி வருகிறோம். நேற்று மட்டும் 20 லட்சத்திற்கும் அதிகமான புதிய பயனர்கள் அரட்டையில் இணைந்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சாதாரணமாக, ஒரு நாளைக்கு சராசரியாக 3,000 புதிய பயனர்கள் மட்டுமே பதிவேற்றம் செய்து வந்த நிலையில், தற்போது புதிய பயனர்களின் எண்ணிக்கை 3,50,000-லிருந்து 20 லட்சங்களாக உயர்ந்துள்ளது. இது எதிர்பாராத மிகப்பெரிய வளர்ச்சி ஆகும்.

இந்த அதிரடி வளர்ச்சிக்கு காரணம், “மேட் இன் இந்தியா” மெசேஜிங் செயலியான அரட்டைக்கு மக்களிடையே திடீரென ஏற்பட்ட பெரும் ஆதரவுதான் என்று கூறப்படுகிறது.

வெளிநாட்டு செயலிகளில் தனிப்பட்ட டேட்டா பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரிப்பது மற்றும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட டிஜிட்டல் தீர்வுகளின் மீது இந்தியர்கள் ஆர்வம் காட்டுவது போன்ற காரணங்களால், அரட்டை செயலி வாட்ஸ்அப்பிற்கு ஒரு சிறந்த மாற்று செயலியாக உருவெடுத்துள்ளது.

அரட்டையில் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக சோஹோ நிறுவனம் விரைவாக அப்டேட்டுக்களை செய்ய செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் குழுவினர், இந்த திடீர் எண்ணிக்கையின் சுமையை கையாளும் விதமாக, செயலியின் உள்கட்டமைப்பை வேகமாக கட்டிமைத்து மேம்படுத்தி வருகின்றனர். மேலும் மென்பொருள் குறியீட்டை சரிசெய்வதிலும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

இந்தியாவின் தொழில்நுட்பத் துறை வரலாற்றில், ஒரு உள்நாட்டுச் செயலி இவ்வளவு குறுகிய காலத்தில் இந்த அளவிலான பயனர் கவனத்தைப் பெற்றிருப்பது ஒரு முக்கியமான சாதனையாக பார்க்கப்படுகிறது.