நீங்க ஒரு ஆள் மட்டும் ஸ்ட்ராங்க இருங்க அது போதும்.. மத்ததை நாங்க பாத்துக்கிறோம்.. நல்லது செய்ய வந்த விஜயகாந்தை மிஸ் செய்துவிட்டோம்.. ஆனால் விஜய்யை மிஸ் செய்ய மாட்டோம்.. நாம் யாருன்னு நம்ம காட்டுவோம்.. தவெக தொண்டர்கள் உணர்ச்சிவசம்..!

விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சி ஆரம்பித்து குறுகிய காலத்திற்குள், கரூரில் ஏற்பட்ட துயரச் சம்பவத்தின் மூலம் பெரும் அரசியல் நெருக்கடியை சந்தித்துள்ளது. இந்த சம்பவம் சட்ட ரீதியான கைதுகள், நிர்வாக ரீதியான விமர்சனங்கள்…

vijay vijayakanth

விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சி ஆரம்பித்து குறுகிய காலத்திற்குள், கரூரில் ஏற்பட்ட துயரச் சம்பவத்தின் மூலம் பெரும் அரசியல் நெருக்கடியை சந்தித்துள்ளது. இந்த சம்பவம் சட்ட ரீதியான கைதுகள், நிர்வாக ரீதியான விமர்சனங்கள் என பல சோதனைகளை கொண்டு வந்துள்ள நிலையில், விஜய்க்கு ஆதரவாக த.வெ.க. தொண்டர்கள் உணர்ச்சிமயமான உறுதியுடன் திரண்டு நிற்கிறார்கள். “நீங்க ஒரு ஆள் மட்டும் ஸ்ட்ராங்கா இருங்க, மத்ததை நாங்க பாத்துக்கிறோம்!” என்ற அவர்களின் முழக்கம், விஜய்யின் அரசியல் பயணத்தில் ஒரு திருப்புமுனையாக மாறியுள்ளது.

கரூர் நெரிசல் விபத்து மற்றும் அதை தொடர்ந்த அரசின் நடவடிக்கைகள், த.வெ.க. தொண்டர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதற்கு பதிலாக, ஒருவிதமான எதிர்ப்புணர்வையும், தலைவருக்கான அர்ப்பணிப்பையும் அதிகரித்துள்ளது.

கரூர் பிரச்சனையில் இருந்து மக்களின் துணையால் மீண்டு வந்துவிடலாம் என்று தொண்டர்கள் உறுதியாக நம்புகின்றனர். இந்த நம்பிக்கை, தலைவன் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு எதிராக தொண்டர்கள் களம் காண வேண்டும் என்ற உத்வேகத்தை அவர்களுக்கு அளிக்கிறது.

விஜய் நல்லது செய்யவே அரசியலுக்கு வந்துள்ளார், ஆனால் அவரை மிதிக்க பார்க்கிறார்கள்” என்ற எண்ணம் தொண்டர்களிடம் ஆழமாக வேரூன்றியுள்ளது. “நீங்கள் தைரியமாக இருங்கள், தனிப்பட்ட முறையில் எந்த சவாலையும் எதிர்கொள்ள வேண்டாம், கட்சியையும் தொண்டர்களையும் பாதுகாக்கும் பணியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்று அவர்கள் தங்கள் தலைவருக்கு செய்தியாக அனுப்புகிறார்கள்.

தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வந்த விஜயகாந்தை நாங்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை, அவரது போராட்ட காலத்தில் அவருக்கு கை கொடுக்கவில்லை. அவர் அரசியலில் வலுவிழந்த போது தமிழகம் ஒரு நல்ல மாற்றத்தை இழந்துவிட்டது” என்ற ஒருவித குற்றவுணர்வு தற்போதைய இளைஞர்கள் மற்றும் விஜய்யின் ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

அதே தவறை விஜய்யின் விஷயத்தில் செய்யக் கூடாது என்பதில் த.வெ.க. தொண்டர்கள் உறுதியாக உள்ளனர். “நாம் விஜயகாந்தை மிஸ் செய்துவிட்டோம், ஆனால் விஜய்யை மிஸ் செய்ய மாட்டோம்! அவர் நல்ல நிலையில் அரசியல் செய்ய நாங்கள் கடைசி வரை உறுதுணையாக நிற்போம்” என்ற உறுதிமொழியே இந்த உணர்ச்சி பெருக்குக்கு பின்னால் உள்ளது. இந்த உறுதி, விஜய்க்கு அரசியலில் ஒரு இரண்டாவது வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்ற மக்கள் கருத்தை வலுப்படுத்தப் பார்க்கிறது.

அரசியல் களத்தில் வெற்றி என்பது வெறும் மக்கள் ஆதரவு மட்டுமல்ல, போட்டியாளர்களுக்கு பயமில்லை என்பதை நிரூபிப்பதும்தான். த.வெ.க. தொண்டர்கள் இப்போது அந்த கட்டத்திற்கு வந்துள்ளனர். தங்கள் கட்சி நிர்வாகிகளின் கைது மற்றும் அரசின் கடுமையான நடவடிக்கைகள், தொண்டர்களை பயமுறுத்துவதற்கு பதிலாக, அரசியலின் ரணகள தன்மையை அவர்களுக்கு உணர்த்தியுள்ளது. இதன் விளைவாக, கைது, வழக்கு போன்றவற்றுக்கு அஞ்சாமல், கட்சி பணிகளை மேலும் வீரியத்துடன் செய்ய அவர்கள் தயாராக உள்ளனர்.

நம் வலிமையை எதிரிகள் உணரும்படி செய்வோம்” என்ற உணர்வு, இனிவரும் காலங்களில் த.வெ.க.வின் கூட்டங்கள், போராட்டங்கள் மற்றும் களப்பணிகளில் எதிரொலிக்கும். இந்த உணர்ச்சி பெருக்கு, விஜய்க்கு எதிராக எழும் அரசியல் அழுத்தங்களை சகித்துக்கொள்ளவும், அவற்றை தாண்டி நிற்கவும் அவருக்கு பெரும் மன வலிமையை தரும்.

ஒரு புதிய கட்சிக்கு ஆரம்பத்திலேயே இத்தகைய நெருக்கடிகள் வருவது, தொண்டர்களுக்கு அரசியல் போராட்டத்தின் முதிர்ச்சியைக் கற்று கொடுக்கும். எந்த ஒரு தேசிய அல்லது மாநில கட்சியின் தயவும் இல்லாமல், தங்கள் தலைவருக்காக தாங்களே களம் இறங்க வேண்டும் என்ற ஒரு தீவிரமான உணர்வை இந்தச் சோதனைக் காலம் விதைத்துள்ளது.

விஜய் என்ற நட்சத்திர பிம்பம் அரசியலுக்கு பெரிய பலம்தான். ஆனால், இந்த நெருக்கடி காலத்தில் அவருக்கு கிடைத்துள்ள தொண்டர்களின் உணர்ச்சிமயமான ஆதரவு, சினிமா பிம்பத்தை விடவும் அதிக அரசியல் பலம் வாய்ந்தது.

“நீங்கள் மனதளவில் உறுதியாக இருங்கள், கரூரில் நடந்த தவறுகளை திருத்தி கொண்டு, அடுத்த கட்டத்தை நோக்கி பாருங்கள். அரசியல் சண்டையையும், நிர்வாக பொறுப்பையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்பதே த.வெ.க. தொண்டர்கள் தங்கள் தலைவருக்கு அளிக்கும் செய்தியாகும். இந்த கூட்டுணர்வு, விஜய்யின் அரசியல் பயணத்திற்கு ஒரு உறுதியான அடித்தளத்தை அமைத்து கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரியாணிக்கும் குவார்ட்டருக்கும் வந்த கூட்டம் தான் யார் எப்படி போனால் நமக்கு என்ன? நமக்கு பணம் வந்தால் போதும் என்று போவார்கள், ஆனால் விஜய்க்கு வந்த கூட்டம் தானாக பாசத்தால் வந்த கூட்டம், விஜய்க்கு ஒன்று என்றால் வேடிக்கை பார்க்கும் கூட்டம் அல்ல என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.