அமெரிக்க அரசு ஊழியர்களின் வரலாறு காணாத அதிர்ச்சி முடிவு.. நாளை ஒரே நாளில் 100,000 ஊழியர்கள் ராஜினாமா செய்ய முடிவு? அமெரிக்க அரசாங்கம் ஸ்தம்பிக்குமா? டிரம்பின் மோசமான கொள்கையால் அதிருப்தியில் அரசு ஊழியர்கள்..!

அமெரிக்க வரலாற்றிலேயே இல்லாத வகையில், ஒரு பெரிய அளவிலான அரசாங்க ஊழியர்களின் ராஜினாமா நிகழ்வு நடக்க உள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் “தற்காலிக ராஜினாமா திட்டம்” என்ற திட்டத்தின் கீழ், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மத்திய…

resignation

அமெரிக்க வரலாற்றிலேயே இல்லாத வகையில், ஒரு பெரிய அளவிலான அரசாங்க ஊழியர்களின் ராஜினாமா நிகழ்வு நடக்க உள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் “தற்காலிக ராஜினாமா திட்டம்” என்ற திட்டத்தின் கீழ், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் நாளை அதாவது செப்டம்பர் 30 செவ்வாய்க்கிழமை அன்று ராஜினாமா செய்ய உள்ளனர்.

இந்த ஊழியர்கள், கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட மன அழுத்தம், பயம் மற்றும் வேலை உறுதியற்ற தன்மை காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறுகின்றனர். சிலர், “அரசாங்கத்தில் தங்கள் நோக்கம் மற்றும் பணியை இழந்துவிட்டதாக” வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.

இந்த சூழ்நிலைக்கு மத்தியில், அமெரிக்க நாடாளுமன்றம் ஒரு பெரிய நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு தேவையான நிதியை நாடாளுமன்றம் அங்கீகரித்தால் மட்டுமே அரசு அலுவலகங்கள் தொடர்ந்து செயல்படும். இல்லையெனில், அரசாங்கப் பணிநிறுத்தம் ஏற்படும். இத்தகைய நிலை ஏற்பட்டால், பெரிய அளவில் ஊழியர்களை பணி நீக்கம் செய்யத் தயாராகும்படி வெள்ளை மாளிகை, அனைத்து அரசு துறைகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.

டிரம்ப் நிர்வாகம், இந்த ராஜினாமா மற்றும் பணி நீக்கங்கள் மூலம் ஆண்டுக்கு 28 பில்லியன் டாலர் சேமிக்க முடியும் என்று வாதிடுகிறது. இது அரசாங்கத்தை மேலும் திறமையானதாக மாற்றும் என்றும் கூறப்படுகிறது. ஆனால், ஊழியர் சங்கங்கள் இதை அரசு ஊழியர்கள் மீதான தாக்குதல் என்று கண்டித்துள்ளன. இது, பொது சேவைகளை நம்பியிருக்கும் மில்லியன் கணக்கான அமெரிக்கர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளன.

இந்த திட்டங்களின் மூலம், மொத்தம் 275,000 ஊழியர்கள் ராஜினாமா, முன்கூட்டிய ஓய்வு அல்லது பணி நீக்கங்கள் மூலம் வெளியேற வாய்ப்புள்ளது. இது இரண்டாம் உலகப் போருக்கு பிறகு மத்திய அரசுப் பணியாளர்கள் எண்ணிக்கையில் ஏற்படும் மிகப்பெரிய சரிவாகும். வாழ்நாள் முழுவதும் அரசு வேலை தொடரும் என்று நம்பிய ஒரு வேலையை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.