வெயிலுக்கு இதமான சுவையான பப்பாளி ஜூஸ்

பப்பாளியில் ஏகப்பட்ட சத்துகள் இருக்கின்றது. பப்பாளி பழத்தினை அடிக்கடி உணவில் எடுத்துக்கொண்டால் கண்பார்வை தெளிவாகும். சருமம் மினுமினுப்பு கூடும். தேவையான பொருள்கள் : பப்பாளி பழம்         –     1ஐஸ்…

பப்பாளியில் ஏகப்பட்ட சத்துகள் இருக்கின்றது. பப்பாளி பழத்தினை அடிக்கடி உணவில் எடுத்துக்கொண்டால் கண்பார்வை தெளிவாகும். சருமம் மினுமினுப்பு கூடும்.

தேவையான பொருள்கள் :

பப்பாளி பழம்         –     1
ஐஸ் கட்டிகள்          –     தேவையான அளவு
சர்க்கரை                 –      தேவையான அளவு
செய்முறை : 

முதலில் பப்பாளி பழத்தை தோல் உரித்து கொட்டைகளை அகற்றி சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும். பின் மிக்ஸியில்​  துண்டுகளோடு சர்க்கரை சேர்த்து அரைத்து அதனுடன் ஐஸ் கட்டிகள் சேர்த்தால் சுவையான பப்பாளி ஜூஸ் தயார்.

சுவைக்கு எலுமிச்சை பழச்சாறு சேர்க்கலாம். இஞ்சி சேர்த்துக்கொள்ளலாம். பப்பாளி துண்டுகளோடு ஆரஞ்ச் பழச்சாறினையும்கூட சேர்க்கலாம்..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன