விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘குக் வித் கோமாளி’ சீசன் 6 நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெற்றியாளர் ராஜூதான் என செஃப் தாமு அறிவிக்க, அவருக்கு பல தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
இந்த சீசனில் ராஜூ, ஷபானா, உமேர், லட்சுமி ராமகிருஷ்ணன், பிரியா ராமன், நந்தகுமார், மதுமிதா, சுந்தரி, கஞ்சா கருப்பு மற்றும் சௌந்தர்யா என மொத்தம் பத்து போட்டியாளர்கள் பங்கேற்றனர். பல வாரங்களாக ரசிகர்களின் ஆதரவுடன் விறுவிறுப்பாக நடந்த இந்த நிகழ்ச்சி, இறுதிப்போட்டியில் மேலும் களைகட்டியது.
இறுதிப்போட்டிக்கு லட்சுமி ராமகிருஷ்ணன், ஷபானா, ராஜூ மற்றும் உமேர் ஆகியோர் தகுதி பெற்றனர். சுமார் மூன்று மணி நேரம் ஒளிபரப்பான இறுதிப்போட்டி, பல்வேறு சுவாரஸ்யமான போட்டிகள் மற்றும் ஜாலியான தருணங்களுடன் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் புதிய விருந்தினர்கள் மற்றும் நடுவர்களும் கலந்து கொண்டனர்.
இறுதியாக, லட்சுமி ராமகிருஷ்ணன் நான்காவது இடத்தை பிடித்ததாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, ராஜூ, ஷபானா, மற்றும் உமேர் ஆகிய மூவரில் ஒருவர் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
சமையல் கலையில் தனது திறமையையும் நகைச்சுவையையும் வெளிப்படுத்தி வந்த ராஜூ, இறுதியில் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு கோமாளியாக இருந்த ராமர், இந்த வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தார். இந்த வெற்றியின் மூலம் ராஜூக்கு லட்சக்கணக்கான ரூபாய் பரிசுகள் கிடைத்துள்ளன. ராமர் ராமருக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. டைட்டில் வின்னர் ராஜூ, பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குக் வித் கோமாளி சீசன் 6 வின்னர்கள்:
டைட்டில் வின்னர்: ராஜூ
இரண்டாம் இடம்: ஷபானா
மூன்றாம் இடம்: உமேர்
நான்காம் இடம்: லட்சுமி ராமகிருஷ்ணன்
ராஜூவின் இந்த வெற்றி, சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. குக் வித் கோமாளி சீசன் 6-ன் வெற்றியாளர் ராஜூவுக்கு வாழ்த்துக்கள்!
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
