ரூ.1.5 கோடி வருமான வரி வழக்கை காட்டி மிரட்டினால் பயப்படுவோமா? ஆயிரக்கணக்கான கோடி ஊழல் செய்தவங்களே அசால்ட்டா இருக்குறாங்க.. வாங்க மோதி பார்த்துடலாம்.. பாஜக மேலிடத்திற்கு சவால் விடுகிறாரா விஜய்? விஜய்க்கு நெருக்கடி கொடுக்கும் பாஜக பாட்சா பலிக்குமா?

தமிழக அரசியல் களத்தில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் மோதல் வெளிப்படையாக தொடங்கியுள்ளது. சமீபத்தில், விஜய் மீதான ரூ.1.5 கோடி வருமான வரி வழக்கை…

vijay amitshah

தமிழக அரசியல் களத்தில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் மோதல் வெளிப்படையாக தொடங்கியுள்ளது. சமீபத்தில், விஜய் மீதான ரூ.1.5 கோடி வருமான வரி வழக்கை மீண்டும் மத்திய அரசு கையில் எடுத்துள்ள நிலையில், `ஆயிரக்கணக்கான கோடி ஊழல் செய்தவர்களே அசால்ட்டாக இருக்கிறார்கள், ரூ.1.5 கோடி வருமான வரி வழக்கை காட்டி மிரட்டினால் பயப்படுவோமா? வாங்க மோதி பார்த்துடலாம்’ என விஜய் சவால் விடுத்திருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது பா.ஜ.க.வின் மேலிடத்திற்கு, குறிப்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலாக பார்க்கப்படுகிறது.

தவெக தலைவர் விஜய், 2016-17 நிதியாண்டில் தனது வருமானமாக ரூ.35.42 கோடி என காட்டி வருமான வரி தாக்கல் செய்திருந்தார். எனினும், 2015-ல் `புலி’ படத்திற்காக பெற்ற ரூ.15 கோடி வருமானத்தை மறைத்ததாக கூறி, வருமான வரித்துறை கடந்த 2022 ஜூன் 30 அன்று அவருக்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்தது.

இந்த அபராத உத்தரவை எதிர்த்து விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், வருமான வரித் துறையின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.

இந்த நிலையில் தற்போது, விஜய் தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள நிலையில், இந்த வழக்கை மீண்டும் தூசுதட்டி, விஜய்க்கு நெருக்கடி கொடுக்கும் முயற்சியில் பா.ஜ.க. ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது, பா.ஜ.க.வின் வழக்கமான அரசியல் தந்திரமாக பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காக வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற மத்திய அமைப்புகளை பயன்படுத்துவதாகப் பல எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

பா.ஜ.க.வின் இந்த நெருக்கடிக்கு, விஜய் அஞ்சவில்லை என அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஊழலுக்கு எதிராக தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள விஜய், “ஆயிரக்கணக்கான கோடி ஊழல் செய்தவர்கள் அரசியல் களத்தில் கோலோச்சும்போது, ரூ.1.5 கோடி வருமான வரி வழக்கு குறித்து நான் ஏன் பயப்பட வேண்டும்?” என கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

“அரசியல் களத்தில் நாங்கள் நேரடியாக மோதி பார்க்க தயார். வருமான வரித்துறை போன்ற ஆயுதங்களை கொண்டு மிரட்டி எங்களை வீழ்த்த முடியாது” என விஜய் தரப்பு பா.ஜ.க.வுக்கு சவால் விடுப்பதாக கூறப்படுகிறது. இது, பா.ஜ.க.வின் `பாட்சா’ பலிக்காது என்பதை தெளிவாக உணர்த்துகிறது.

பா.ஜ.க.வை பொறுத்தவரை, தென் மாநிலங்களில், குறிப்பாக தமிழகத்தில் கால்பதிக்க முயற்சி செய்து வருகிறது. ஆனால், அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. போன்ற வலுவான திராவிட கட்சிகள் உள்ளதால், பா.ஜ.க.வால் நேரடியாக பலம் பெற முடியவில்லை. இந்த சூழலில், விஜய்யின் வருகை, தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய சவாலாக அமைந்துள்ளது. விஜய்யை அதிமுக – பாஜக கூட்டணிக்கு வரவழைக்க பாஜக எடுத்த ஆயுதமாக வருமான வரித்துறை வழக்கு பார்க்கப்படுகிறது.

ஆனால் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்கும் மாற்று அரசியலை விஜய், முன்வைப்பதால், பா.ஜ.க. அவரை தனது கூட்டணிக்குள் கொண்டுவரவோ அல்லது அவரது வளர்ச்சியை தடுக்கவோ முயற்சித்தால் அது தோல்வியில் தான் முடியும் என்று கூறப்படுகிறது. வருமான வரி வழக்கு என்பது, பா.ஜ.க.வின் முதல் நெருக்கடி முயற்சி. இதற்கு விஜய் அஞ்சாமல், நேரடியாக `மோதிப் பார்க்கத் தயார்’ என சவால் விடுத்திருப்பது, தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது.

இந்த மோதல், எதிர்காலத்தில் தமிழக அரசியல் களத்தின் போக்கை எப்படி மாற்றும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.