உலக போர்களை நிறுத்தும் சக்தி இந்தியாவுக்கு மட்டுமே உண்டு.. இந்தியா நினைத்தால் ரஷ்ய – உக்ரைன் போரை நிறுத்தலாம்.. ஐநா சபையில் எழுந்த குரல்கள்.. காஷ்மீர் பிரச்சனைக்கும் பதிலடி.. வழக்கம் போல் புலம்பிய டிரம்ப்..

ஐக்கிய நாடுகள் சபையின் 80-வது பொதுக்கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மேன்ஹாட்டனில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் நேற்று நடந்த உயர்மட்ட தலைவர்கள் சந்திப்பில், உலக நாடுகளின் தலைவர்கள் பல்வேறு முக்கிய பிரச்சினைகள்…

modi india

ஐக்கிய நாடுகள் சபையின் 80-வது பொதுக்கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மேன்ஹாட்டனில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் நேற்று நடந்த உயர்மட்ட தலைவர்கள் சந்திப்பில், உலக நாடுகளின் தலைவர்கள் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்துப் பேசினர். அவற்றில் சில முக்கிய அம்சங்கள் குறித்து பார்ப்போம்,

துருக்கி அதிபர் எர்டோகன் தனது பேச்சில், காஷ்மீர் பிரச்சினையை மீண்டும் எழுப்பினார். ஐ.நா. தீர்மானத்தின்படி காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும், அது தங்கள் சகோதர சகோதரிகளின் பிரச்சினை என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்கு முன்பு 2024-ல் எர்டோகன் இந்த விவகாரத்தை கைவிடக் காரணம், பிரிக்ஸ் அமைப்பில் சேர துருக்கி மேற்கொண்ட முயற்சிகள்தான்.

எர்டோகனின் இந்த கருத்துக்கு இந்தியா உடனடியாக பதிலடி கொடுத்தது. இந்திய வெளியுறவு துறை, காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், இந்தியாவின் உள் விவகாரங்களில் எந்த நாடும் தலையிட கூடாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தது.

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, உலக போர்களை நிறுத்தும் வல்லமை இந்தியாவுக்கு இருப்பதாக பாராட்டினார். குறிப்பாக, காசா மற்றும் உக்ரைன் போர்களை நிறுத்த இந்தியாவால் முடியும் என்று அவர் கூறினார். மேலும், இந்தியா-ஐரோப்பா இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தையில் இத்தாலி முழு ஆதரவு அளிக்கும் என்றும், விரைவில் இரு நாடுகளுக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஐ.நா.வில் முதன்முறையாக உரையாற்றினார். அப்போது, ஐ.நா. சபை பெயரளவுக்குத்தான் கண்டனங்களை தெரிவிக்கிறது என்றும், உலக போர்களை நிறுத்தும் சக்தி அதற்கு இல்லை என்றும் நேரடியாக விமர்சித்தார்.

உக்ரைன் போர் குறித்து பேசிய அவர், மீண்டும் இந்தியா மற்றும் சீனாவை குற்றம் சாட்டினார். இந்த இரு நாடுகள்தான் ரஷ்யாவுக்கு நிதி உதவி வழங்குவதாகவும், அதனால்தான் போர் தொடர்கிறது என்றும் கூறினார். பின்னர், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் தனியாக சந்தித்து பேசிய ட்ரம்ப், உக்ரைனுக்கு ஆதரவான சில கருத்துக்களை வெளியிட்டார்.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, போர் உக்ரைனை ஒரு பேரழிவை நோக்கித் தள்ளுவதாக குறிப்பிட்டு, உலக நாடுகள் உடனடியாக தலையிட்டு போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். ட்ரம்ப்புடனான சந்திப்பிற்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆசியாவிலேயே நம்பகத்தன்மை வாய்ந்த நாடாக இந்தியா இருப்பதால், உக்ரைன் போரை நிறுத்தும் வல்லமை இந்தியாவுக்கு உள்ளது என்று தெரிவித்தார்.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகப் பேசிய பிரான்ஸ் அதிபர் மக்ரோன் ட்ரம்ப்புடன் தனிப்பட்ட சந்திப்பில், காசா போரை நிறுத்தினால் நோபல் பரிசு பெறலாம் என ட்ரம்ப்பிடம் கூறியதாக கூறப்படுகிறது. இருப்பினும், ஹமாஸின் நடவடிக்கையை ஏற்கவில்லை என்றும் மக்ரோன் தெளிவுபடுத்தினார்.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் அரபு இஸ்லாமிய தலைவர்களுடன் இணைந்து ட்ரம்ப்பை சந்தித்து, காசா போரை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்தபோது, ஐ.நா.வில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்புவோம் என்றும் தெரிவித்தார்.

ஐ.நா. பொதுக்கூட்டத்தின் இந்த உயர்மட்ட சந்திப்பில், உலக அரசியல் மற்றும் அமைதி குறித்த பல்வேறு விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டன.