தவெக + காங்கிரஸ் கூட்டணி என்றால் 150 – 175 தொகுதிகள் வெற்றி உறுதி? சமீபத்திய கருத்துக்கணிப்பால் ராகுல் காந்தி மகிழ்ச்சி.. 1967க்கு பின் ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸ்.. விஜய்யை விரைவில் நேரில் சந்திக்கும் ராகுல் – சோனியா.. விஜய்யுடன் பிரச்சாரம் செய்வாரா பிரியங்கா காந்தி?

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் களம் புதிய கூட்டணியின் சாத்தியக்கூறுகளை நோக்கி நகர்ந்து வருகிறது. நடிகர் விஜயின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி இடையே கூட்டணி…

vijay rahul sonia

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் களம் புதிய கூட்டணியின் சாத்தியக்கூறுகளை நோக்கி நகர்ந்து வருகிறது. நடிகர் விஜயின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி இடையே கூட்டணி உருவாகும் வாய்ப்புகள் குறித்த யூகங்கள் வலுப்பெற்றுள்ளன.

சமீபத்திய கருத்துக்கணிப்பு ஒன்று இந்த இரு கட்சிகளும் இணைந்து போட்டியிட்டால், 150 முதல் 175 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்று கணித்துள்ளது. இந்த கருத்துக்கணிப்பு, காங்கிரஸ் தலைமைக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக, ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் விஜய்யை விரைவில் டெல்லிக்கு வரச்சொல்லி நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

1967-ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆட்சிதான் தொடர்ந்து இருந்து வருகிறது. காங்கிரஸ் கட்சி, தி.மு.க. அல்லது அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, குறைந்த எண்ணிக்கையிலான சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆட்சியில் பங்கு பெறாமல் இருந்தது. தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தை ருசித்து 50 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது.

இந்தச் சூழலில், விஜய்யின் த.வெ.க.வும், காங்கிரஸும் இணைந்து தனித்து ஒரு வலுவான அணியாகக் களமிறங்கினால், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கிகள் சிதறி, இந்த புதிய கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்று அந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. இது, காங்கிரஸுக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.

கருத்துக்கணிப்பு முடிவுகளால் ஊக்கமடைந்த காங்கிரஸ் தலைமை, கூட்டணியை உறுதிப்படுத்தும் நோக்கத்தில் அடுத்த கட்ட நகர்வுகளை தொடங்கியுள்ளது. ராகுல் காந்தி விஜய்யை நேரில் சந்தித்து கூட்டணி குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சந்திப்புகள் மூலம் கூட்டணியை இறுதி செய்வதுடன், விஜய்க்கு போதுமான மரியாதை அளித்து, அவரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தவும் காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொள்ள வாய்ப்புள்ளது.

அப்படியானால், விஜய்யுடன் ராகுல் காந்தி, சோனியா காந்தி பிரச்சாரம் செய்வார்கள் என்றும், ஏன் பிரியங்கா காந்தி கூட பிரசாரம் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. பிரியங்கா காந்திக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அவர் வட மாநிலங்களில் மட்டுமல்லாமல், தென் மாநில மக்களிடம் ஒருவித ஈர்ப்பை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை விஜய் – காங்கிரஸ் கூட்டணி உறுதியானால், பிரியங்கா காந்தி விஜய்யுடன் இணைந்து தேர்தல் பிரசாரம் செய்ய வாய்ப்புகள் அதிகம்.

மேற்கண்ட தகவல்கள் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வந்தாலும், இவை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டால் மட்டும் உறுதி செய்யப்படும். இது சாத்தியமாகும் பட்சத்தில் தமிழகத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. அல்லாத ஒரு புதிய ஆட்சி அமைய வழி வகுக்கலாம். இந்த கூட்டணி சாத்தியப்படுமா, அதன் அரசியல் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை வரும் மாதங்களில் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.