சேகர் பாபு எல்லாம் விஜய்க்கு ஒரு ஆளா? செந்தில் பாலாஜி கோட்டைக்கே தைரியமாக செல்லும் விஜய்.. கமல்ஹாசனுக்கு விஜய்யை பார்த்து பொறாமை.. எதிரிகளுக்கு கடைசி ஆயுதம் விஜய் கேரக்டரை சிதைப்பது.. ஆனால் அதையும் மீண்டு வருவார் விஜய்: பிஸ்மி

சினிமா மற்றும் அரசியல் விமர்சகர் பிஸ்மி சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விஜய் மற்றும் அவரது அரசியல் நிலை குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது: ஒரு அரசியல் கட்சி பிரசாரம் செய்வதற்கு…

vijay1 2

சினிமா மற்றும் அரசியல் விமர்சகர் பிஸ்மி சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விஜய் மற்றும் அவரது அரசியல் நிலை குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது:

ஒரு அரசியல் கட்சி பிரசாரம் செய்வதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை. திருவாரூர், திருச்சி போன்ற தி.மு.க.வின் கோட்டைகளிலேயே விஜய்யால் பிரமாண்டமான கூட்டங்களை நடத்த முடிந்தபோது, சேகர்பாபுவின் வடசென்னை, செந்தில் பாலாஜியின் கரூர் ஆகிய இடங்களில் கூட்டம் நடத்துவது ஒரு பெரிய விஷயமே இல்லை. விஜய்யின் தைரியத்திற்கு இது ஒரு உதாரணம். குறிப்பாக, கரூரில் செந்தில் பாலாஜியின் முப்பெரும் விழாவைக் காட்டிலும் பெரிய கூட்டத்தை நடத்தி தனது செல்வாக்கை நிரூபிக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.

விஜய்யின் கூட்டத்தை காக்கா கூட்டம் என தி.மு.க.வினரின் விமர்சனம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். அவர்களின் அரசியல் நாகரிகம் எப்போதும் அப்படித்தான். ஆனால், ஒரு வாக்கின் மதிப்பு அனைவருக்கும் சமமானது. விஜய்க்குப் பின்னால் திரளும் கூட்டம், “காக்கா கூட்டம்” என்றாலும், அதில் ஒவ்வொருவருக்கும் ஒரு வாக்குதான். கொள்கை ரீதியாகக் கூடும் கூட்டம் என்று சொல்லிக்கொள்ளும் கட்சியினருக்கும் அதுதான்.

விஜய் குறித்த கமல்ஹாசனின் விமர்சனம் பொறாமைன் வெளிப்பாடு. கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கியபோது, அவருக்கு பின்னால் திரண்ட கூட்டத்தை பார்த்து, அது வாக்குகளாக மாறும் என்று நம்பினார். ஆனால், தேர்தலில் அது நடக்கவில்லை. அதுபோல, சினிமா நடிகர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாது என்பது ஒரு பொதுவான கருத்து. ஆனால், விஜய்க்கு பின்னால் திரள்வது வெறும் ரசிகர்கள் கூட்டம் மட்டுமல்ல. ட்ரோன் காட்சிகளை பார்த்தால், 90% பேர் த.வெ.க.வின் துண்டுகளை அணிந்துள்ளனர். துண்டு அணிந்தவர்கள் வெறுமனே வேடிக்கை பார்க்க வந்தவர்கள் அல்ல; அவர்கள் கட்சியை சேர்ந்தவர்களாகவோ, விஜய்க்கு ஓட்டுப்போட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாகவோதான் இருப்பார்கள். எம்.ஜி.ஆருக்குப் பிறகு, மக்கள் மணிக்கணக்கில் காத்திருப்பது விஜய்க்கு மட்டும்தான். இதுவே அவரது செல்வாக்குக்கு சாட்சி.

விஜய்க்கு மக்கள் மத்தியில் கெட்ட பெயர் வாங்கி கொடுக்க எதிரிகளுக்கு இருக்கும் ஒரே ஆயுதம் அவரது கேரக்டரை சிதைப்பதுதான். விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பதன் நோக்கம், அவரது செல்வாக்கை சிதைப்பதுதான். அவர் இன்னும் ஒரு ஊழல் வழக்கில் சிக்காததால், அவரை பற்றி அவதூறு பரப்புவதே அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி. திரிஷா, கீர்த்தி சுரேஷ் போன்ற நடிகைகளுடன் அவரை இணைத்து பேசுவது, அவரது குடும்ப விஷயங்களை பேசுவது போன்றவை, மக்கள் மனதில் ஒரு வெறுப்புணர்வை ஏற்படுத்தி, அவரது வளர்ச்சியை தடுக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் ஆகும்.

விஜய் கட்சியை பாஜகவின் ‘பி’ டீம் என்று சொல்வது அர்த்தமற்றது. உண்மையில் தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் தான் ரகசியக் கூட்டணி உள்ளது. அமலாக்கத் துறை நடவடிக்கைகள் தி.மு.க.வினர் மீது தீவிரமாக இல்லாதது அதற்கு சான்று. விஜய் தனது கொள்கை எதிரியாக பா.ஜ.க.வை அறிவித்துள்ளார். ஒரு கொள்கை எதிரியுடன் ஒருபோதும் கூட்டணி வைக்க முடியாது. விஜய் எந்த இடத்திலும் பா.ஜ.க.வின் ஆதரவாளராக தன்னை வெளிப்படுத்தவில்லை. அவரது மீது ஊழல் குற்றச்சாட்டு கூற முடியாததால், பா.ஜ.க.வின் பி டீம் என்று சித்தரிக்கிறார்கள்.

விஜய் மீதான சீமானின் விமர்சனங்கள் தி.மு.க.வின் உள்நோக்கத்தை கொண்டவை என்று உறுதியாக நம்புகிறேன். அவர் தி.மு.க.வை விமர்சிப்பதை நிறுத்தி, விஜய்யை மட்டும் குறிவைத்து தாக்குகிறார். இது தி.மு.க.வின் வெற்றிக்காக அவர் செயல்படுகிறார் என்பதைத்தான் காட்டுகிறது. சீமானுக்கு கிடைத்த வாக்குகள் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வின் அதிருப்தி வாக்குகளே தவிர, கொள்கை ரீதியானவை அல்ல.

தி.மு.க. மீதான முக்கிய குற்றச்சாட்டு குடும்ப அரசியல் மற்றும் ஊழல்தான். இது அனைவருக்கும் தெரிந்த உண்மை. விஜய் வெறுமனே வதந்திகளின் அடிப்படையில் பேசுபவர் அல்ல. அவருக்கு பின்னால் ஒரு பெரிய குழு இருக்கிறது. அவர்கள் சேகரித்த ஆதாரங்களின் அடிப்படையில்தான் அவர் பேசுகிறார். விஜய்யின் குற்றச்சாட்டுகள் தவறானவை என்றால், தி.மு.க. அவதூறு வழக்கு தொடரலாம். அதை விடுத்து, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி போன்ற ஆபாச பேச்சாளர்களை கொண்டு பதிலளிப்பது, தி.மு.க.வுக்கு மேலும் அவமானத்தையே ஏற்படுத்தும்.

மொத்தத்தில் பிஸ்மியின் இந்த கருத்துக்களில் இருந்து விஜய்யின் வருகை, தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய சவாலை உருவாக்கியுள்ளது. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் விஜய்யை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளது என்பதுதான் உண்மை..