சொந்த நாட்டு விவசாயிகளுக்கு ஆப்பு வைத்த உலகின் ஒரே தலைவர் டிரம்ப்.. வர்த்தக போரால் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலையில் அமெரிக்க விவசாயிகள்.. விவசாயிகளை காப்பதில் மோடி மாதிரி எந்த ஒரு தலைவரும் இல்லை.. மோடியிடம் கத்துக்கோங்க டிரம்ப்..!

கடந்த பல ஆண்டுகளாக அமெரிக்க விவசாயிகள் தங்கள் வருமானத்தை நிலைநிறுத்த, உலக வர்த்தக சந்தையை பெரிதும் நம்பியிருந்தனர். ஆனால், இன்று அதிபர் டிரம்ப்பால் ஏற்பட்ட வர்த்தக போர்கள் மற்றும் புதிய கொள்கைகள் அவர்களின் வாழ்வாதாரத்தை…

farmers

கடந்த பல ஆண்டுகளாக அமெரிக்க விவசாயிகள் தங்கள் வருமானத்தை நிலைநிறுத்த, உலக வர்த்தக சந்தையை பெரிதும் நம்பியிருந்தனர். ஆனால், இன்று அதிபர் டிரம்ப்பால் ஏற்பட்ட வர்த்தக போர்கள் மற்றும் புதிய கொள்கைகள் அவர்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்துகின்றன.

அமெரிக்காவின் சோயாபீன்ஸ் உற்பத்தியில் 50%க்கும் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக, சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் சோயாபீன்ஸ் அமெரிக்க விவசாயிகளின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. ஆனால், டிரம்ப் அரசின் வர்த்தக கொள்கைகள், சோயாபீன்ஸ் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடைகள், விவசாயிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தின.

ஒரு காலத்தில் நம்பிக்கையின் சின்னமாக இருந்த திறந்த வர்த்தகச்சந்தை, இப்போது விவசாயிகளுக்கு ஒரு சவாலாக மாறியுள்ளது. ஒரு கொள்கை மாற்றம், ஒரு சிறிய தாமதம், இவை அனைத்தும் விவசாயிகளின் பணப்புழக்கத்தில் பெரும் சிக்கலை ஏற்படுத்துகின்றன. அமெரிக்க விவசாயிகளை பொருத்தவரை சோயாபீன்ஸ் போன்ற ஒரு முக்கிய பயிர், செல்வம் கொழிக்கும் பயிர், ஆனால் இப்போது விவசாயிகளின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் அசைத்து பார்க்கும் ஒரு நிலை உருவாகியுள்ளது.

உள்ளூர் சந்தையில் சோயாபீன்ஸ் உற்பத்தி அதிகரித்தபோது, தேவை குறைந்தது. இதனால், விவசாயிகளுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தியது. நம்மூரில் தக்காளி விலை போகவில்லை என்றால் சாலையில் கொட்டுவது போல் அமெரிக்காவில் சோயாபீன்ஸை சாலையில் கொட்டும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று கூறப்படுகிறது.

மேலும் வட்டி விகிதங்கள் அதிகரித்ததால், விவசாயிகள் வாங்கிய கடன்கள் மேலும் சுமையாக மாறின. ஒருபுறம் உற்பத்தி பொருட்களின் விலை குறைந்தபோது, மறுபுறம் உரங்கள், டீசல் போன்ற இடுபொருட்களின் விலை உயர்ந்தது.

வர்த்தகத் தடைகளால், துறைமுகங்களில் சரக்குகள் தேங்கி நின்றன. இதனால், போக்குவரத்து மற்றும் சேமிப்பு கட்டணங்கள் அதிகரித்தன. இந்த செலவுகள் அனைத்தும் இறுதியில் விவசாயிகளின் தலையில்தான் விழுந்தன.

உலக வர்த்தகத்தில் ஏற்படும் நிலையற்ற தன்மை காரணமாக, பல அமெரிக்க விவசாயிகள் தங்கள் வியூகத்தை மாற்றியுள்ளனர். அவர்கள் ஏற்றுமதியை மட்டும் நம்பியிருக்காமல், உள்நாட்டு சந்தைகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர்.

உள்நாட்டு சந்தையில் சோயாபீன்ஸ், கால்நடைத் தீவனம், மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிபொருள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு நேரடியாக விற்று, நிலையான வருமானத்தை ஈட்ட முயற்சிக்கின்றனர். இது லாபம் குறைவானதாக இருந்தாலும், நிலையான வருமானம் மற்றும் கடன் சுமையை குறைப்பதற்கு உதவுகிறது.

இந்த மாற்றங்கள் ஒரே நாளில் நடக்காது. ஆனால் அதுவரை விவசாயிகள் வாழ்வாதாரம், கடன், குறைந்த விலையில் விற்பனை செய்வது உள்ளிட்ட சவால்களை சந்திப்பதால், விவசாயத்தை விட்டே வெளியேறும் வாய்ப்பு உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், உள்ளூர் விவசாயிகளிடம் ஆலோசனை செய்யாமல் தானாக எடுத்த முடிவு, அந்நாட்டு விவசாயிகளை முடக்கியுள்ளது. உலகிலேயே ஒரு நாட்டின் அதிபர் தனது சொந்த நாட்டு விவசாயிகளுக்கே ஆப்பு வைத்தது டிரம்ப் மட்டுமே என்றும் பேசப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில் விவசாயிகள் வர்த்தக போரால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-KISAN): இந்த திட்டத்தின் கீழ், தகுதியான விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படுகிறது.

பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY): இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு விவசாயிகளுக்குக் காப்பீடு வழங்கப்படுகிறது.

மின்னணு வர்த்தகத் தளம் (e-NAM): விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை ஆன்லைன் மூலம் நல்ல விலைக்கு விற்க இத்திட்டம் உதவுகிறது.

இந்தத் திட்டங்கள், விவசாயிகளுக்கு ஒரு பாதுகாப்பான தளத்தை வழங்குகின்றன. ஆனால், அமெரிக்காவில் இதுபோன்ற விரிவான திட்டங்கள் இல்லை. இது, டிரம்ப் மற்றும் மோடி அரசின் விவசாய கொள்கைகளுக்கு இடையிலான வேறுபாட்டைக் காட்டுகிறது.

அதுமட்டுமின்றி அமெரிக்கா அழுத்தம் கொடுத்த போதிலும் அமெரிக்காவில் இருந்து விவசாய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாது என்று பிரதமர் மோடி எடுத்த முடிவு விவசாயிகள் மனதில் பாலை வார்த்தது.