H1-B விசா கட்டண உயர்வு.. அமெரிக்காவுக்கு தான் பாதிப்பு.. இந்தியர்கள் வேண்டுமென்றால் கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான் தான் பணம் கட்டனும்.. இந்தியர்கள் வேண்டாம் என்றால் ஒன்றும் நஷ்டமில்லை.. இருக்கவே இருக்குது வேற நாடுகள்.. அல்லது இந்தியாவுக்கே திரும்புவோம்..!

இந்திய தொழில்நுட்ப ஊழியர்களுக்கு டிரம்ப் விதித்த H1-B விசா கட்டண உயர்வு, அமெரிக்காவின் “அமெரிக்கர்களுக்கு வேலை” கொள்கையின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. இந்த கட்டண உயர்வு இந்திய நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களை பாதிக்கும் என்றாலும்,…

visa 1

இந்திய தொழில்நுட்ப ஊழியர்களுக்கு டிரம்ப் விதித்த H1-B விசா கட்டண உயர்வு, அமெரிக்காவின் “அமெரிக்கர்களுக்கு வேலை” கொள்கையின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. இந்த கட்டண உயர்வு இந்திய நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களை பாதிக்கும் என்றாலும், இது அமெரிக்க நிறுவனங்களுக்கும் நிதிச்சுமையை ஏற்படுத்தும். இந்த நடவடிக்கை இந்திய திறமையாளர்களை மீண்டும் இந்தியாவிற்கு வர தூண்டலாம், இது இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஒரு புதிய உந்துதலை தரக்கூடும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

டிரம்ப் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையின்படி, H1-B விசாக்கள் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பை இழக்க செய்கின்றன. கடந்த சில ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், அதே நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்களை, குறிப்பாக இந்தியர்களை, குறைந்த சம்பளத்தில் பணியமர்த்தியுள்ளன. இதனால், அமெரிக்காவில் கணினி அறிவியல் பட்டதாரிகளின் வேலையின்மை விகிதம் அதிகரித்து வருகிறது. இந்தச் சிக்கலை தீர்க்கவே, டிரம்ப் H1-B விசாக்களுக்கான கட்டணத்தை $100,000 ஆக உயர்த்தியுள்ளார் என்று அமெரிக்க அரசு விளக்கம் அளித்துள்ளது.

ஆனால் இந்த கட்டண உயர்வு இந்திய ஊழியர்களுக்கு அல்ல, மாறாக அமெரிக்க நிறுவனங்களுக்கே பெரிய நிதிச்சுமையாக அமையும். அமெரிக்க நிறுவனங்கள் ஒரு ஊழியருக்கு விசா எடுக்கும்போது, இந்த அதிக கட்டணத்தை செலுத்த வேண்டும். இதனால், அதிக திறமை வாய்ந்த இந்தியர்களை வேலைக்கு எடுப்பதற்கான செலவு அதிகரிக்கும். ஒருவேளை, அமெரிக்க நிறுவனங்கள் இந்த செலவுகளைத் தவிர்க்க நினைத்தால், இந்திய ஊழியர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படலாம். இருப்பினும், அமெரிக்க நிறுவனங்கள் இத்தகைய உயர் திறமை கொண்ட பணியாளர்களை இழக்க விரும்ப மாட்டார்கள், ஏனெனில் இது அவர்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளைப் பாதிக்கும். அப்படியே ஒருவேளை இந்தியர்களை அமெரிக்க நிறுவனங்கள் வேலைக்கு எடுக்கவில்லை என்றால், இந்தியர்களுக்கு வேலையளிக்க கனடா, மெக்சிகோ, ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய நாடுகள் தயாராக உள்ளன. எனவே இந்திய திறமையாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, அமெரிக்க நிறுவனங்களுக்கு தான் பெரும் பாதிப்பு ஏற்படும்.

மேலும் இந்த H1-B விசா கட்டுப்பாடுகள், அமெரிக்காவில் உள்ள திறமையான இந்திய ஊழியர்களை மீண்டும் இந்தியாவிற்கு திரும்பச் செய்ய ஒரு காரணமாக அமையலாம். இந்திய அரசு ஏற்கனவே “மேக் இன் இந்தியா” போன்ற திட்டங்கள் மூலம், தொழில்நுட்ப துறையில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்து வருகிறது. சிப் உற்பத்தி, விண்வெளி ஆராய்ச்சி, பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் போன்ற துறைகளில் திறமையான இந்தியர்கள் தேவைப்படுகிறார்கள். இந்த நேரத்தில், அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் திரும்பி வருவது, இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சியை மேலும் வேகப்படுத்தக்கூடும். இது இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் ஒரு வாய்ப்பாக அமையும் என்று கூறப்படுகிறது,.

டிரம்பின் இந்த பொருளாதாரத் தடைகள், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள நட்பு உறவை கேள்விக்குள்ளாக்குகின்றன. ஒருபுறம், இந்தியா துரோகம் செய்ததாலேயே இந்த வரி விதிக்கப்பட்டதாக டிரம்ப் கூறுகிறார். ஆனால், ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகளுக்கு வரி விதித்ததற்கு என்ன காரணம் என்ற கேள்வியும் எழுகிறது. ஐரோப்பிய நாடுகளும் துரோகம் செய்தார்களா?