அமெரிக்கா – கனடா இடையேயான வர்த்தக உறவுகளில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க தூதர், கனடாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துவிட்டதாகவும், புதிய ஒப்பந்தம் எதுவும் இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது அடுத்த ஆண்டு மறுசீரமைக்கப்பட உள்ள USMCA ஒப்பந்தத்திற்கு முன்னதாக கனடாவிற்கு ஒரு பெரும் பொருளாதார சவாலை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா ஒருதலைப்பட்சமாக கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு 35% வரி விதித்தது. இது அமெரிக்க தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்த “கற்பனையான” கவலைகளை காரணம் காட்டி நிறைவேற்றப்பட்ட ஒரு நிர்வாக உத்தரவு. இந்த நடவடிக்கைகள் அமெரிக்க நிறுவனங்களுக்கு இறக்குமதி செலவுகளை அதிகரித்துள்ளன. இதன் விளைவாக, அமெரிக்க நிறுவனங்களின் லாபம் குறைந்து, பணியாளர்களை குறைப்பது அல்லது புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை தவிர்ப்பது போன்ற நடவடிக்கைகளுக்கு தள்ளப்பட்டுள்ளன. இது கனடாவிலும் வேலைவாய்ப்பின்மையை அதிகரித்துள்ளது.
கனடாவுடனான பேச்சுவார்த்தைகள் என்று கூறப்பட்டவை உண்மையில் ஒருதலைப்பட்சமான வரி விதிப்புகளிலிருந்து விலக்கு பெறுவதற்கான முயற்சிகளாகவே இருந்தன. அடுத்த ஆண்டு USMCA மறுசீரமைக்கப்பட உள்ள நிலையில், கனடா தற்போது எந்தவித வரி சலுகைகளுக்கும் ஒப்புக்கொள்ளாதது புத்திசாலித்தனமான நடவடிக்கையாக கருதப்படுகிறது. ஏனெனில், தற்போதைய சலுகைகள் எதிர்கால பேச்சுவார்த்தைகளில் கனடாவை பலவீனப்படுத்தக்கூடும்.
அமெரிக்காவின் மத்திய வங்கியின் தலைவர், அமெரிக்க பொருளாதாரம் மோசமாக இருப்பதாக எச்சரித்துள்ளார். மார்ச் மாத நிலவரப்படி, ஒரு மில்லியன் வேலைவாய்ப்புகள் குறைக்கப்பட்டிருப்பது, பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட பலவீனமாக இருப்பதை காட்டுகிறது. கனடாவிலும் ஆகஸ்ட் மாதத்தில் 66,000 வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன. இரு நாடுகளிலும் வேலை சந்தையில் அழுத்தம் அதிகரித்துள்ளது.
இருப்பினும், பணவீக்கம் குறித்த விஷயத்தில் கனடா சற்று வேறுபட்ட நிலையில் உள்ளது. அமெரிக்காவில் பணவீக்கம் உயர்ந்து வரும் நிலையில், கனடா மிதமான பணவீக்கத்தை எதிர்கொள்கிறது. அமெரிக்கா தன்னுடைய இறக்குமதிகளுக்கு வரி விதித்ததன் காரணமாக பொருட்களின் விலை உயர்ந்து, பணவீக்கம் அதிகரித்து வருகிறது. ஆனால் கனடா அத்தகைய வரிகளை விதிக்காததால், பணவீக்க அழுத்தம் குறைவாக உள்ளது. உதாரணமாக பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காபிக்கு அமெரிக்கா 50% வரி விதிப்பதால், அமெரிக்காவில் காபி பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இது கனடாவிற்கும் ஏற்றுமதி செய்யப்படும் அமெரிக்க காபி பொருட்களின் விலையை உயர்த்துகிறது. இது வெளிநாட்டு பொருட்களின் விலை அதிகரிக்கவும், போட்டித்தன்மை குறையவும் வழிவகுக்கிறது.
அமெரிக்காவின் இந்த திடீர் நடவடிக்கையானது கனடாவுக்கு ஒரு வரமாக பார்க்கப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக அமெரிக்காவை சார்ந்திருந்த கனடா, இப்போது உலக அளவில் தனது வர்த்தக உறவுகளை பன்முகப்படுத்த வேண்டிய அவசரத்தை உணர்ந்துள்ளது. கனடாவின் அனைத்து மாகாண அரசாங்கங்களும் புதிய ஒப்பந்தங்களை வேகமாக உருவாக்கி வருகின்றன.
இந்த நிலையில் தான் திடீர் திருப்பமாக அமெரிக்காவின் வரிவிதிப்பால பாதிக்கப்பட்ட நாடுகளான கனடா மற்றும் மெக்சிகோ இடையேயான நேரடி வர்த்தகம் தொடங்கியது. கூடுதலான வர்த்தகத்திற்கு தற்போது இரு நாடுகளும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
கனடாவின் தலைவர்கள், அடுத்த ஆண்டு USMCA ஒப்பந்த மறுசீரமைப்பு கடினமாக இருக்கும் என்பதை உணர்ந்து, வேகமாக செயல்பட்டு வருகின்றனர். அமெரிக்கா எந்த நிலைப்பாட்டை எடுக்கும் என்று உறுதியாக தெரியவில்லை என்றாலும், அது கனடாவிற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் ஒரு கடுமையான நிலைப்பாடாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும், தனியார் நிறுவனங்களும் கூட, எதிர்காலம் நிச்சயமற்றது என்பதை உணர்ந்து மாற்று வழிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
கனடாவின் இந்த முயற்சிகள் சரியான திசையில் செல்கின்றனவா? இந்த விரைவான நடவடிக்கைகள், கடந்த காலங்களில் நாம் செய்ய தவறியவற்றை இப்போது மின்னல் வேகத்தில் நிறைவேற்றுவதற்கான ஒரு வாய்ப்பாக அமையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
