பயணத்தின்போது ஏற்படும் வாந்தி, குமட்டலை போக்கும் இஞ்சி டீ….

ஆரோக்கியத்தில் ஆர்வமுள்ள நம் மக்கள் திடீரென இஞ்சி டீக்கு மாறிட்டாங்க. எங்க போனாலும் இஞ்சி டீதான். கொதிக்கும் டீயில் ஒரு துண்டு இஞ்சியை நடுக்கி போட்டு கொதிக்க வைத்தால் அதுதான் இஞ்சி டீ என…

ஆரோக்கியத்தில் ஆர்வமுள்ள நம் மக்கள் திடீரென இஞ்சி டீக்கு மாறிட்டாங்க. எங்க போனாலும் இஞ்சி டீதான். கொதிக்கும் டீயில் ஒரு துண்டு இஞ்சியை நடுக்கி போட்டு கொதிக்க வைத்தால் அதுதான் இஞ்சி டீ என நம்புறாங்க. நிஜமான இஞ்சி டீயில் பால், சர்க்கரை சேர்க்கக்கூடாது. இஞ்சி டீயை முறையாக, சுவையாக போடுவது எப்படி என பார்க்கலாம்!!

தேவையான பொருட்கள்..

டீத்தூள் – 1 ஸ்பூன்
பட்டை – சிறிய துண்டு
இஞ்சி – சிறிய துண்டு
புதினா இலை – சிறிதளவு
தேன் – தேவைக்கு
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்

செய்முறை :

இஞ்சியை ஒன்றும் பாதியாக தட்டிவைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, பட்டையை போட்டு கொதிக்கவிட வேண்டும். நன்றாக கொதிக்கவைத்தபின் அதில் இஞ்சி மற்றும் புதினாவை சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். அடுத்து டீ தூளை சேர்த்து கொதிக்க விடவும். அடுப்பை அணைத்தவுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து, சிறிது நேரம் மூடி வைத்து, தெளிந்ததும் வடிகட்டி பருகவும். சுவையான இஞ்சி தேன் டீ தயார்.

தலை வலி,அஜீரணம், உடல் களைப்பை நீக்கி புத்துணர்ச்சியை தரும். பயணத்தின்போது ஏற்படும் குமட்டல், வாந்தியை போக்கும். எண்ணெய் பலகாரங்கள், அசைவ உணவினை அதிகளவில் சாப்பிடும்போது சிறிதளவு இஞ்சி டீ குடித்தால் கொழுப்பு உடலில் சேராது.

ஆனால், ஒரு நாளைக்கு 4கிராம் இஞ்சிதான் உடலில் சேரனும்ன்னு இருக்கு. அதிகப்படியான இஞ்சியை சாப்பிட்டல் உடலுக்கு கேடு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன