விரைவில் உடல் எடை குறைக்க விரும்புகிறீர்களா?! அப்ப இந்த ஒரு பொருள் போதும்!!

ரசம், வெண்பொங்கலில் தவறாமல் சீரகம் இடம்பெறும். வளர்சிதை மாற்றங்களை கொடுக்கும் நீர்சக்தியினை தக்கவைத்துக்கொண்டு கழிவுகளை வெளித்தள்ளும் சக்தி சீரகத்துக்கு உண்டு. அகத்தை சீர் பண்ணுவதால் இதற்கு சீரகம் என பேர் வந்ததாய் சொல்வார்கள். உடல்…

ரசம், வெண்பொங்கலில் தவறாமல் சீரகம் இடம்பெறும். வளர்சிதை மாற்றங்களை கொடுக்கும் நீர்சக்தியினை தக்கவைத்துக்கொண்டு கழிவுகளை வெளித்தள்ளும் சக்தி சீரகத்துக்கு உண்டு. அகத்தை சீர் பண்ணுவதால் இதற்கு சீரகம் என பேர் வந்ததாய் சொல்வார்கள். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் 1டீஸ்பூன் சீரகத்தை உணவில் சேர்த்துவர 15கிலோ வரை எடையை குறைக்கலாமென ஆய்வுகள் சொல்கிறது.

5b7c89cbc3c121c9daa018a643d37323

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சீரகத்தை எப்படியெல்லாம் உணவில் சேர்த்துக்கொள்ளலாமென பார்க்கலாம்..

தினமும் உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா? அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். சீரகம் உடல் எடையைக் குறைக்கும் என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடத்தி நிருப்பித்துள்ளனர்.

அவ்வறு ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை சாப்பிட்டு வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, சீரகம், வேறு பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளதாகவும் அதனை உன்பதால் உடல் லேசாக இருப்பதாகவும் எந்த வேலையும் எளிதில் செய்ய முடிகின்றது என்றனர்.

சரி, உடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்கலாம். உங்களுக்கு மிகவும் வேகமாக 15 கிலோ எடையைக் குறைக்க ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை சாப்பிட்டு வாருங்கள். ரிசல்ட் விரைவில் தெரியவரும்.

24e25a5f2ba7e72dd85b9bd059c1d9ae

சீரக தண்ணீர்:
2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.

d0777964d00f35f0e49df22ab3729328

சீரகப் பொடி மற்றும் தயிர்:
சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம். சுறுசுறுப்பாக இருப்பதை உணரலாம். உடல் உள் உறுப்புகள் ஆற்றல் பெறும்.

46b33f8d19996307c79da8c7f9d2cb40

சீரகப் பொடி மற்றும் தேன்:
1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.

a0d286e0555e066285debe0f980c034a

சூப்புடன் சீரகப் பொடி:
உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும். காய்கறி சூப் அல்லது அசைவ சூப்பாக இருந்தாலும் சரி ஸ்பூன் அளவு சீரகத்தை வறுத்து பொடியாக்கி போட்டு குடியுங்கள் வியர்வை நன்றாக வெளியேறும்.

எடையைக் குறைக்கும் சீரக ரெசிபி:
எலுமிச்சை மற்றும் இஞ்சி எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் முதன்மையானவை. அதிலும் சீரகத்துடன் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும். அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம். மேலும் உணவுகள் செரிமானப் பகுதிகளை நன்கு அறைத்து செரிக்கச் செய்கின்றன.

0f26d6053cf518f7dc7d7f40c99e9814

தொப்பையைக் குறைக்கும் சீரகம்
சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது. இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம். சாப்பிடும் உணவுகளின் செரிமானத்தை கூட்டும்.

அதனால் விரைவில் உடல் எடையை குறைக்க விரும்புவோர், சீரகத்தை உணவில் சேர்த்து பலன் பெறுங்கள்!!

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன