35 ஆண்டுகளில் 30 முறை ஆட்சி மாற்றம்.. நேபாளத்தை கட்டுப்படுத்த போட்டி போடும் அமெரிக்கா, சீனா.. ஊழல், வறுமை, வேலையின்மை ஏற்படுத்திய ஆத்திரம்.. இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம் ஒரே பிரச்சனை.. அடுத்தது மாலத்தீவா?

சமீபத்தில், நேபாள அரசு சமூக ஊடகங்களுக்கு தடை விதித்ததை தொடர்ந்து, அங்கு பெரும் கலவரங்கள் வெடித்தன. இது வெறும் சமூக ஊடகத் தடையால் மட்டும் ஏற்பட்ட கோபம் அல்ல, மாறாக பல ஆண்டுகளாக குமுறிக்…

nepal

சமீபத்தில், நேபாள அரசு சமூக ஊடகங்களுக்கு தடை விதித்ததை தொடர்ந்து, அங்கு பெரும் கலவரங்கள் வெடித்தன. இது வெறும் சமூக ஊடகத் தடையால் மட்டும் ஏற்பட்ட கோபம் அல்ல, மாறாக பல ஆண்டுகளாக குமுறிக் கொண்டிருந்த மக்களின் மன கொந்தளிப்பே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

நேபாளம் கடந்த 35 ஆண்டுகளில் 30 முறை ஆட்சி மாற்றத்தை சந்தித்துள்ளது. இது அங்கு ஒரு நிலையான அரசு அமையாததை காட்டுகிறது. இதனால், ஊழல் அதிகரித்து, மக்கள் நலத் திட்டங்கள் முறையாக மக்களை சென்றடைவதில்லை.

நேபாளத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 30% வெளிநாட்டு பண பரிவர்த்தனையை நம்பியே உள்ளது. வேலைவாய்ப்பின்மை 10-15% ஆக உள்ளது. குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில் வேலைவாய்ப்பின்மை மிக அதிகமாக உள்ளது.

இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு வல்லரசு நாடுகளுக்கு இடையில் அமைந்துள்ள ஒரு நாடு நேபாளம். அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுமே நேபாளத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சி செய்கின்றன. இந்த இரு நாடுகளின் உந்துதலால், அரசியல் தலைவர்கள் பணம் வாங்கி, ஒருபுறம் அமெரிக்காவுடனும், மறுபுறம் சீனாவுடனும் கூட்டணி அமைப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது மக்களுக்குள் இருந்த கோபத்தை மேலும் அதிகரித்துள்ளது.

இந்த சூழ்நிலையில், அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகள், சமூக ஊடகங்கள் வழியாக தவறான தகவல்களை பரப்பி, அங்கு ஏற்கனவே இருந்த கோபத்தை இன்னும் தூண்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

வெளிநாட்டு ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் ஒரு நாட்டின் அரசியலில் தலையிடுவது சாத்தியம். இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே புவிசார் அரசியல் ரீதியாக ஒரு முக்கிய இடத்தில் நேபாளம் உள்ளது. சீனா, திபெத், அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், பூடான், நேபாளம் மற்றும் லடாக் ஆகியவற்றை தன்னுடைய இடமாக கருதுகிறது.

நேபாளம் ஒருபுறம் அமெரிக்காவிடமும், மறுபுறம் சீனாவிடமும் சிக்கி கொண்டுள்ளது. இதன் காரணமாக, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் இணைய கட்டமைப்பை தங்களிடம் இருந்து வாங்க வேண்டும் என நேபாளத்திற்கு நிர்பந்தம் கொடுக்கின்றன. ஒருபுறம் பிரதமர் பணம் வாங்கியதாக சீனா சமூக வலைத்தளங்களில் செய்தி பரப்புகிறது. இது ஊழல் குறித்த மக்களின் கோபத்தை மேலும் அதிகரித்தது.

இந்த விவகாரம் இலங்கையில் தொடங்கி, வங்கதேசம், பாகிஸ்தான் வழியாக தற்போது நேபாளத்திற்கு வந்துள்ளது. அடுத்ததாக மாலத்தீவிலும் இத்தகைய ஆட்சி மாற்றத்துக்கான வாய்ப்புகள் உள்ளன. அடுத்ததாக இந்தியாவும் டார்கெட் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது.