மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 : விடுபட்டவர்களுக்கு வழங்கப்படுவது எப்போது? துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முக்கிய தகவல்..!

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு விரைவில் தொகை வழங்கப்படும் என்று உறுதியளித்தார். மகளிரின் பொருளாதார நிலையை…

rs.1000

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு விரைவில் தொகை வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

மகளிரின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக தமிழக அரசால் செயல்படுத்தப்பட்ட முக்கியமான திட்டம் இது. இந்த திட்டத்தின் கீழ், தகுதியான பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர்.

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் மேலும் கூரியதாவது: “மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ஒரு சிலருக்கு கிடைக்கவில்லை என்பது உண்மைதான். முதல் கட்டமாக 1.6 கோடி பேரில் 1 கோடி பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டத்தில் விடுபட்டவர்களுக்கு விரைவில் வழங்கப்படும்,” என்று அவர் கூறினார். மேலும், இந்த திட்டம் தொடங்கப்பட்டபோது எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில், “கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் ஒரு கோடி பெண்களுக்கு மேல் உரிமை தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர்” என்று தெரிவித்தார்.

இந்த திட்டம், தமிழகத்தில் மகளிரின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு ஒரு முக்கிய படியாக கருதப்படுகிறது. கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள குடும்பங்களின் பொருளாதார சுமையை குறைப்பதில் இந்த திட்டம் பெரும் பங்காற்றி வருவதாக சமூக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தமிழக அரசின் இந்த நடவடிக்கை, பெண்களின் வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதாக பலராலும் பாராட்டப்படுகிறது.