அமெரிக்க வரி விதிப்பால் 36,380 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பாலம் மூடப்படுகிறதா? தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட டிரம்ப்.. அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான அதிபர்.. வச்சு செய்யும் கனடா..!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த வர்த்தக தடைகள், அமெரிக்கா மற்றும் பல நாடுகளுக்கு இடையே கருத்துவேறுபாடுகளை ஏற்படுத்திய நிலையில் அண்டை நாடானா கனடா உறவில் ஒரு பெரும் பிளவை ஏற்படுத்தியுள்ளன. கோர்டி ஹவ்…

bridge

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த வர்த்தக தடைகள், அமெரிக்கா மற்றும் பல நாடுகளுக்கு இடையே கருத்துவேறுபாடுகளை ஏற்படுத்திய நிலையில் அண்டை நாடானா கனடா உறவில் ஒரு பெரும் பிளவை ஏற்படுத்தியுள்ளன. கோர்டி ஹவ் சர்வதேச பாலம் (Gordie Howe International Bridge) திறக்கப்பட்ட நிலையிலும், அதன் எதிர்பார்த்த பயன்களை அமெரிக்கா அடையவில்லை. இது, வர்த்தகப் போரின் எதிர்பாராத விளைவுகளை எடுத்துக்காட்டுகிறது.

கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து கார்கள் மற்றும் உதிரி பாகங்கள் மீது 25% வரியை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டிரம்ப் விதித்தார். இந்த நடவடிக்கை, பல ஆண்டுகளாக இருந்து வந்த நட்புறவு மற்றும் வர்த்தக ஒருங்கிணைப்பை உடைத்து, இரு நாடுகளுக்கும் இடையே விரோதத்தை உருவாக்கியது.

இதற்கு பதிலடியாக, கனடாவின் பொருளாதார வியூக நிபுணரான மார்க் கார்னி, ஒரு துணிச்சலான திட்டத்தை வகுத்தார். அமெரிக்கா வரி விதித்தால், கனடாவும் உடனடியாக அதற்கு சமமான வரியை விதிக்கும் வகையில் “பரஸ்பர கட்டமைப்பு ஒழுங்குமுறை” (Reciprocal Framework Regulation) என்ற தானியங்கி அமைப்பை உருவாக்கினார். மேலும், அமெரிக்காவை சார்ந்துள்ள நிறுவனங்களுக்கு பதிலாக, உள்ளூர் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்க $10 பில்லியன் அவசரகால நிதியையும் அறிவித்தார்.

கனடாவின் இந்த பதிலடியால், அமெரிக்காவின் உள்நாட்டுத் தொழில் பெரும் பாதிப்பை அடைந்தது. டெட்ராய்ட் பகுதியில் உள்ள பல தொழிற்சாலைகளின் வர்த்தகம் துண்டிக்கப்பட்டது. மிச்சிகன் மாநிலத்தில் உள்ள சிறிய நிறுவனங்கள், அமெரிக்க அரசின் வர்த்தக கொள்கைகளால் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டன. பல ஆண்டுகளாக இயங்கி வந்த குடும்ப தொழில்கள், அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ஒரு தவறான முடிவால் அழிந்து போயின.

அமெரிக்காவின் இந்த வர்த்தக போரை, கனடா தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி கொண்டது. ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுடன் கனடா புதிய வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டது. இதன் விளைவாக, அமெரிக்கா சந்தை இழந்த நிலையில், கனடா தனது ஏற்றுமதியை அதிகரித்து, உலக அளவில் ஒரு வலுவான பொருளாதார நாடாக உருவெடுத்தது. உதாரணமாக, கனடா தனது கடல் உணவு ஏற்றுமதியில் அமெரிக்காவை முந்தியது.

இந்த நிலையில் தான் கோர்டி ஹவ் சர்வதேச பாலம் (Gordie Howe International Bridge) என்பது அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளை இணைக்கும் ஒரு முக்கியமான சர்வதேச பாலம் கட்டப்பட்டது. இது, கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள வின்சர் நகரத்தையும், அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள டெட்ராய்ட் நகரத்தையும் இணைக்கிறது.

இந்தப் பாலம், அமெரிக்கா மற்றும் கனடா இடையேயான வர்த்தகத்திற்கும், சரக்கு போக்குவரத்துக்கும் மிகவும் முக்கியமானது. இந்த பாதையில் ஒரு நாளைக்கு சுமார் 10,200 வாகனங்கள் பயணிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. கனடாவின் நெடுஞ்சாலை 401யையும், அமெரிக்காவின் இன்டர்ஸ்டேட் 75-யையும் இணைக்கும் இந்தப் பாலம், வட அமெரிக்காவின் வர்த்தகத்திற்கு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தப் பாலம், சுமார் 5.7 பில்லியன் கனடா டாலர் அதாவது சுமார் சுமார் 36,380 கோடி ரூபாய் இந்திய மதிப்பு செலவில் கட்டப்பட்டது. வர்த்தகம், சுற்றுலா மற்றும் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதில் இந்தப் பாலம் ஒரு முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் டிரம்ப் வரி விதிப்பால் ஏற்பட்ட வர்த்தக போரால், அதன் பயன்பாடு எதிர்பார்த்ததைவிட மூன்றில் ஒரு பங்கு குறைந்தது. இந்த பாலம், அமெரிக்காவின் கொள்கை முடிவு, அதன் நெருங்கிய நட்பு நாட்டின் உறவையும், இரு நாடுகளின் பொருளாதாரத்தையும் எப்படிப் பாதித்தது என்பதற்கான ஒரு சான்றாக மாறியுள்ளது. அமெரிக்கா, தனது வர்த்தக போரால் தனக்குத்தானே ஒரு வலையை அமைத்து கொண்டது. ஆனால், கனடா அதிலிருந்து வெளியேறி, தனக்கான ஒரு புதிய, சுதந்திரமான பாதையை உருவாக்கிக் கொண்டது.

இந்த சம்பவம், ஒரு நாட்டின் வர்த்தகக் கொள்கைகள், எதிர்பாராத விளைவுகளையும், நீண்டகால உறவுகளில் பிளவையும் ஏற்படுத்தக்கூடும் என்பதை உணர்த்துகிறது.