ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ரூ.5.90 லட்சம் செலவு செய்யும் இளம் தம்பதிகள்.. வருமானம் எவ்வளவு தெரியுமா? வேலையை ராஜினாமா செய்துவிட்டு எடுத்த ஸ்மார்ட் முடிவு.. கொட்டோ கொட்டு என்று குவியும் பணம்..!

பெங்களூருவில் உள்ள ஒரு இளம் தம்பதி, தாங்கள் ஒரு மாதத்தில் செய்த செலவுகள் குறித்த வீடியோவை பகிர்ந்து, சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளனர். ஆகஸ்ட் மாதத்தில் அவர்களின் மொத்த செலவு ரூ. 5.90…

couple

பெங்களூருவில் உள்ள ஒரு இளம் தம்பதி, தாங்கள் ஒரு மாதத்தில் செய்த செலவுகள் குறித்த வீடியோவை பகிர்ந்து, சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளனர். ஆகஸ்ட் மாதத்தில் அவர்களின் மொத்த செலவு ரூ. 5.90 லட்சம் என தெரிய வந்துள்ளது. இந்த செலவுகளுக்கு, அவர்களுக்கு பல வழிகளில் இருந்து வருமானம் வருகிறது.

பிரகிருதி அரோரா மற்றும் ஆஷிஷ் குமார் என்ற இந்த தம்பதி, பயணங்களை மையமாக கொண்ட உள்ளடக்கங்களை உருவாக்கும் கலைஞர்கள். இவர்களின் வருமானம் பல வழிகளில் இருந்து வருகிறது. குறிப்பாக டிஜிட்டல் தயாரிப்புகள் மற்றும் துணை சந்தைப்படுத்தல் தான் இவர்களது பணி. இதன் மூலம் இவர்களுக்கு மாதம் ரூ. 60,000 வருமானம் தருகிறது.

அதுமட்டுமின்றி யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோக்கள் மூலம் ரூ. 45,000 கிடைப்பதாகவும்,
உள்ளடக்க உரிமம் மூலம் ரூ. 20,000 வருமானம் வருகிறது என்றும், பயணங்களை ஏற்பாடு செய்யும் புதிய தொழில் மூலம் சில வருமானம் வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மொத்தத்தில் இவை அனைத்தின் மூலம் மாதம் ரூ. 3 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் வரை சம்பாதிக்கின்றனர்.

முன்னதாக பிரகிருதி மற்றும் ஆஷிஷ் இருவரும், நல்ல ஊதியம் கொண்ட வேலைகளை விட்டுவிட்டு தற்போது பார்த்து வரும் பணிகளை முழு நேரமாக ஈடுபட்டுள்ளனர். 2017 முதல் பெங்களூருவில் வசிக்கும் பிரகிருதி, ஏப்ரல் 2022-ல் தனது பணியை தொடங்கினார். ஐஐடி ரூர்க்கியில் பட்டம் பெற்ற ஆஷிஷ், ஒரு மென்பொருள் பொறியாளர் வேலையை விட்டுவிட்டு, பிப்ரவரி 2025-ல் பிரகிருதியுடன் இணைந்தார். லண்டனில் உள்ள யார்க் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெறும் வாய்ப்பையும் பிரகிருதி நிராகரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/reel/DOSaZ7BjFhC/