பிரான்ஸ் அரசு கவிழ்ந்தது.. பிரதமர் ஃபிரான்சுவா பைரூ ராஜினாமா.. அரசு கவிழ்ப்பிற்கு பின்னணியில் அமெரிக்கா இருந்ததா? மோடியை கவிழ்க்க முடியாத ஆத்திரமா? இந்தியா – பிரான்ஸ் நெருக்கம் டிரம்புக்கு கோபத்தை ஏற்படுத்தியதா?

பிரான்ஸ் பிரதமராக இருந்த ஃபிரான்சுவா பைரூ, நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததை தொடர்ந்து, தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிகழ்வு, பிரெஞ்சு அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிபர் இம்மானுவேல் மக்ரோனுக்கு…

france

பிரான்ஸ் பிரதமராக இருந்த ஃபிரான்சுவா பைரூ, நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததை தொடர்ந்து, தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிகழ்வு, பிரெஞ்சு அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிபர் இம்மானுவேல் மக்ரோனுக்கு இது ஒரு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில், பைரூவுக்கு ஆதரவாக 194 உறுப்பினர்கள் மட்டுமே வாக்களித்தனர். அவருக்கு எதிராக 364 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இது அவரது அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையின்மை எந்த அளவுக்கு அதிகமாக உள்ளது என்பதை காட்டுகிறது. பைரூவின் அரசாங்கம் ஜூலை மாதம் அறிவித்த €44 பில்லியன் பட்ஜெட் குறைப்பு திட்டமே இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்த திட்டத்தில் இரண்டு பொது விடுமுறைகளை ரத்து செய்வது போன்ற பல மக்கள் விரும்பாத நடவடிக்கைகள் இருந்தன.

அதிபர் மக்ரோன் தற்போது தனது ஐந்தாவது பிரதமரை நியமிக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த அரசியல் நெருக்கடி, பிரான்சின் உள்நாட்டு பொருளாதார சவால்களை வெளிப்படுத்துகிறது. பிரான்சின் கடன், அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 113% ஆக உள்ளது. இது ஐரோப்பிய ஒன்றியத்தில் மிக அதிக கடன்களில் ஒன்றாகும். புதிதாக பதவியேற்கும் பிரதமரும் இதே போன்ற பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால், இந்த நிலைமை மக்ரோனுக்கு பெரும் சவாலாக உள்ளது.

பிரான்சில் ஏற்பட்டுள்ள இந்த உள்நாட்டு அரசியல் நெருக்கடி, ஐரோப்பா முழுவதையும் பாதிக்கிறது. ஏனெனில், பிரான்ஸ் ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாகும். இந்த அரசு ஸ்திரமின்மை, முதலீட்டாளர்கள் மத்தியில் பிரான்ஸ் கடன் பத்திரங்களின் மீதான நம்பிக்கையைக் குறைத்து, அதன் வட்டி விகிதங்களை அதிகரித்து வருகிறது. இது யூரோ மண்டலத்தின் ஒட்டுமொத்த ஸ்திரத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. இருப்பினும், கிரீஸ் போல திவாலாகும் நிலையில் பிரான்ஸ் இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத நிலையில், உள்நாட்டுப் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், உக்ரைனுக்கு ஆதரவு போன்ற சர்வதேச விவகாரங்களில் மக்ரோனின் பங்களிப்பு குறையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரான்ஸ் பிரதமராக கேப்ரியல் அட்டல் ராஜினாமா செய்துள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் கடந்த சில மாதங்களாக அமெரிக்காவுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தார். அமெரிக்கா விதித்துள்ள வரி கொள்கையை விமர்சனம் செய்து வந்ததோடு, அவர் இந்தியாவுக்கு ஆதரவாகவும் பேசினார். இந்திய – பிரான்ஸ் நட்பு அதிகரித்து வந்தது என்பதும், இந்தியா பிரான்ஸ் இடையே வர்த்தக ஒப்பந்தம் அதிகரித்து வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் பிரான்சில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்திற்கு பின்னணியில் அமெரிக்கா இருக்குமோ என்ற சந்தேகமும் சர்வதேச அரசியல் வல்லுநர்களிடம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் மோடியின் ஆட்சியை கவிழ்க்க அமெரிக்கா முயற்சி செய்து அது தோல்வி அடைந்ததாக கூறப்படும் நிலையில். அடுத்த கட்டமாக பிரான்ஸ் மீது கண் வைத்திருக்கலாமோ என்ற சந்தேகமும் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.